Listen 3D Quality

வியாழன், 19 ஜூலை, 2012

நரம்பில்லா ..நாக்கால்


Latest Poems

ஈழத்தின் சுவடுகள்

இனத்தின் அழிவுக்காய்
உங்கள் அனைத்து அர்ப்பணிப்பும்
அளப்பெரும் தியாகங்கள்
தலைவனின் அற நெறி விரும்பிகள்
புரட்சி கவிதை மட்டு மதியகன் 19, July 2012 More

உன் பிரிவே மரணமெனக்கு..

இமைகள் மட்டும்
இல்லாதிருந்தால்
உன் விழி வீச்சின்
தொடர் தாக்குதலில்
காதல் கவிதை செந்தில்.கே.நடேசன் 19, July 2012 More

''கொன்வே'' காதல்

ஒரு மழை இரவில்
உன் மனதின்
நிர்வாணத்தையும்
ரசித்தேன்..
காதல் கவிதை நிலவில் 19, July 2012 More

காதலுக்குக் கண் இல்லை

காதலுக்குக்
கண் இல்லை தான்
கருணையுமா..
உனக்காக எதையும்
குட்டிக் கவிதை ரிஷ்வன் 19, July 2012 More

விடியல் வேண்டி..

காந்தப் பார்வையிலே
கன்னிமனம் பறிப்பவனே..!
காதல் அம்பு பாச்சி
காற்றாடி விடுபவனே..!
ஹைக்கூ கவிதை கமல்ராஜ் 19, July 2012 More

நரம்பில்லா ..நாக்கால்

அன்பெனும்..
அரவணைப்பால்...
காதலெனும் தேனூற்றியவள்..
நரம்பில்லா ..
நடப்பு கவிதை தழிழ்நிலா 19, July 2012 More

ஏன் அப்படி செய்தாய்!!

ஏழெட்டு நாளில் சினேகம்
பற்றிக் கொண்டது...
அங்கே நீயும்
இங்கே நானும்
காதல் கவிதை கார் முகிலன் 19, July 2012 More

நீ மட்டும் தான்

நான் ரசித்து
வாசித்த கதைகளிலும்
நான் ஊகித்து
மை தொடர்ந்த கவிதையிலும்
காதல் கவிதை மட்டு மதியகன் 19, July 2012 More

இன்னொரு தாஜ் மஹால்

உனக்குப்
பிடிக்குமே என்று தான்,
வானத்தில் நிறைய
விண்மீன்களைத்,
காதல் கவிதை பி. செல்வராஜ் 19, July 2012 More

சுட்டெரிப்பு

கார்காலத்திலும் கொஞ்சம்
கடன்வாங்கி
காய்ந்து கொண்டிருந்தது
கதிரவன்
நடப்பு கவிதை ரி.எ.விமல் 19, July 2012 More

செவ்வாய், 10 ஜூலை, 2012

கவிதைகள்


கவிதைகள்


1. கவிதை துளிகள் - இறை வாழ்த்து
2. எது கவிதை?
3. ஜூனோ! எங்கள் செல்லமே!
4. காதலி!
5. கவிதைச் சூரியன்-வைரமுத்து 
6. நிலா
7. ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs)
8. தாய்
9. நட்சத்திரங்கள் (ஹைக்கூ )
10. புரியாத சோகம்
11. கவியரசு கண்ணதாசன்
12. வெற்றிக்கு வழி
13. ரகசியம்!
14. காதில் விழுந்த கவிதை
15. கூன்!
16. நானும் உன் போல்தான்!
17. பெரிய முள்ளின் புலம்பல் !
18. உன் சக்தி!
19. Oh! My Heart!
20.ஜீவ காருண்யம்
21.தலையிடாக் கொள்கை
22.மேகம் எனக்கொரு கவிதை தரும்
23.மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்
24.தமிழா! எழுவாய்!
25. ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
26. தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!
27. நானும் நானும்
28. எல்லாம் உன்னால்
29. குழப்பியல்!
30. தெய்வீகக் காதல்?
31.திருமண வாழ்த்து
32. காணாமல் போனது காதல்
33. தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
34.பூக்களைத் தேடி.. 
35. மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள்
36.சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!
37.விபரீத ஆசை!-பதிவுக்குறள் பத்து
38.சந்தேகப் பிராணி
39. நினைவுதிர் காலம்
40.ஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்
41.எதிரியே! எதிரில் வா!

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு. 

திங்கள், 9 ஜூலை, 2012

மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...


மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...

எரிய எரிய
மெழுகு உருகுவதுபோல்
வயது ஏற ஏற
மனிதன் ஆயுள் குறைகிறது...

அடுத்தவருக்கு வெளிச்சம் கொடுத்து
மெழுகு உருகுகிறது
அடுத்தவருக்காக வாழ்ந்து வாழ்ந்து
மனிதன் உருகுகிறான்...

உடலை விட்டு உயிர் பிரிவது போல
மெழுகை விட்டு திரி பிரிகிறது
கடைசியில் உடலும் மெழுகும் மட்டுமே மிச்சம்..


காத்திருக்கிறோம்

பிறக்கவும் காத்திருக்கவேண்டும்
பின் வாழ்கையில் எல்லா
நேரங்களிலும் நிலையிலும்
சிலருக்காக சிலவற்றுக்காக
காத்திருக்கிறோம் ;
தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
காத்திருந்து காத்திருந்து
சோர்ந்தவிட்ட நாம் பின்
இறக்கவும் காத்திருக்கவேண்டும்!

போலியோ இல்லா இந்தியா

இனி இல்லை கவலை
இந்தியாவில் போலியோ இல்லை
இந்தியர்கள் ஒன்றுபட்டோம்
போலியோவை ஒழித்துவிட்டோம்
நோயில்லா இந்தியாவை படைப்போம்
சுகாதாரமாய் வாழ பழகுவோம்
காய்கறி உணவுகளை சேர்ப்போம்
சத்தான உட்டச்சத்தை பகிர்வோம்
மாசுயில்லா சுற்றுசுழல் அமைப்போம்
அனைவரும் நலமாய் இருப்போம்...

இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு போலியோவை ஒழித்ததுபோல் மற்ற ஆட்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தி வெற்றிக்காண்போம். நாம் வாழும் தேசத்தை நலமுடன் வைப்பது நம் இந்தியரின் கடமை.


சுகமான சுமைகள்

கருவை சுமக்கும் தாய்க்கும்
பிள்ளையை தோளில் சுமக்கும் தந்தைக்கும்
பாசத்தை சுமக்கும் சகோதிரிக்கும்
சீண்டல்களை சுமக்கும் சகோதரனுக்கும்
நட்பை சுமக்கும் தோழனுக்கும்
காதலை சுமக்கும் காதலிக்கும்
குடும்பத்தை சுமக்கும் மனைவிக்கும்
போரில் காயங்களை சுமக்கும் வீரனுக்கும்
வலிகள் கூட சில நேரம் சுமையான சுமைத்தான்
நம்மை சுமக்கும் பூமிக்கும்
நம் பாவங்களை சுமக்கும் இறைவனுக்கும் கூட
நாம் சுகமான சுமைகள் தான்!

செம்மொழியான எங்கள் தமிழ்மொழி

பழமைக்கு பழமையும்
புதுமைக்கு புதுமையும்
இனிக்கும் செம்மொழி
காலம் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாதவள் தமிழ்மொழி
உலகபுகழ் திருக்குறளும்
வான்புகழ் காப்பியங்களும்
அற புற நானூருகளும்
நெடுந் குறுந் துகைகளும்
ஒருக்கே பெற்ற தேன்மொழி
சங்கத்தமிழ் கண்டவளாய்
யுகம் யுகமாய் யுவதியாய்
சேர சோழ பாண்டியர்களின்
வைர மணிமகுடம்மாய்
எத்திசையிலும் புகழ்மணக்கும்
தமிழே வாழ்க! வாழ்க!

வண்ணத்துபூச்சி

வண்ணங்களின் கோர்வையாய்
இறைவனின் ஓவியமாய்
மலர்களின் தோழனாய்
இயற்கையின் படைப்பாய்
வானில் சுதிந்திர காற்றாய்
ரசித்திடும் உயிராய்
பறக்கும் வண்ணபூவாய்
மிளிரும் வண்ணத்துபூச்சியே
உன் அழகில் மயங்கிடா
மானுடன் இப்பூவுலகில் எது?
சிறிய நாட்களில்
அழகிய வாழ்க்கையாய்
நிறைவுடன் வாழ்கிறாய்
வண்ணமயமாக...

முகநூல்

முகம் அறியாமல் முகநூளில்
வாழ்த்துக்கள் கூறி
நட்பை பரிமாறி
அன்பை வெளிக்காட்டி
கருத்தை வரவேற்று
பாசமான வட்டத்தில்
தோழியாய் சகோதிரியாய்
உறவு கொண்டாடி
முகம் அறியச்செய்த முகநூலே!

நீயே குடை

வானம் குடையானது பூமிக்கு
நீல நிற போர்வையால்
நீ குடையனாய் எனக்கு
நிறைவில்லா அன்பான அணைப்பால்...

தாமரை இலை தண்ணீர் போல்...

தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல
உன் மனம் என்னோடு ஒட்டாமல் போனாலும்
நீர் இலையை விட்டு விலகாதது போல்
நானும் உன்னை விட்டு விலகுவதில்லை


சூரியகாந்தியும் நானும்..

சூரியனை பார்த்தவுடன்
மலர்ந்தாய்யடி நீ - நான்
என்னவனை பார்த்தவுடன்
மனம் மகிழ்ந்தேன் தோழி!!!

கதிரவன் போனவுடன்
குவின்தாய்யடி நீ – நான்
காதலன் பிரிந்தவுடன்
உயிர் துறந்தேனடி தோழி !!!

மலர் நீ வாடினாலும்
மங்கை நான் வாடினாலும்
நாம் கொண்ட காதல்
என்றும் வாடாதடி தோழி!!!

இரவில் நீ குவிந்தாலும்
காலை புலரும் போது
நீ மலர்வாய் தோழி!!!
பிரிவில் நான் தவித்தாலும்
என்னவனை காணும் போது
நான் மலர்வேன் தோழி!!!

நீங்காத நினைவுகள்

மறைந்துவிட்ட உறவுகளின் 
நீங்காத நினைவுகள்

உதிர்ந்துவிட்ட பூக்களின்
உலராத வாசனை

இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்

இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு

இயற்கையின் அழைப்பு
மீறமுடியாத பயணம்

காலம் இழப்பின்
காயத்தை மாற்றும்

காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….

நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகளுக்கு ஒரு நினைவஞ்சலி.... 







திங்கள், 2 ஜூலை, 2012

கோட்டு சூட்டு காந்தி!



கோட்டு சூட்டு காந்தி!


பாலிஸ்டர் வாங்குமிடத்தில்
பல்லில்லாத கதராடை காந்தி
பணமாய்  சிரிக்கிறார்!
கோட்டு சூட்டு வாங்குகிறோம்
கோவணம் கட்டிய
காந்தியை கொடுத்து!
எளிமையான காந்தி
பணக்காரர்களின் பாக்கெட்டை
நிரப்பி சிரித்துக்கொண்டு!
கோவணம் கட்டியவன்
கைகளில் காந்தி இருப்பதில்லை
காந்தி இல்லாததால்
அவனும் சிரிப்பதில்லை!



சனி, 30 ஜூன், 2012



அதிசயம் பார்க்கிறேன்!


காரிருள் வந்ததென்று
உன் கருங்கூந்தல் கண்ட குருவி
மதி மயங்கி
உன் கூந்தலோரம் கூடு கட்டும்
அதிசயம்  பார்க்கிறேன்!



திங்கள், 25 ஜூன், 2012



மண(ம் ) மகிழ்ச்சி!



கொடியை விட்டு பிரித்தெடுத்தபோதும்
நாங்கள் கூப்பாடு போடவில்லை!
ஊசிவைத்து குத்தி கோர்த்த போதும்
எங்கள் உறுதி குலையவில்லை!
நூலால் நெருக்கி எம் கழுத்தை இறுக்கிய போதும்
நாங்கள் கதறி அழுததில்லை!
தலையில் வைத்து கொண்டாடிய போதும்
நாங்கள் தலைக்கனம் கொள்ளவில்லை!
காலில் போட்டு கசக்கிய போதும்
நாங்கள் கவலைக் கொண்டதில்லை!
சாமிக்கு அருகாமையில் சமர்ப்பனமாயிருக்கிறோம்
சாவுக்கு அருகாமையில் சங்கமிக்கிறோம்
உங்கள் வாழ்வில் மணம் வீசிக்கொண்டிருக்கிறோம்
மரணத்திலும் மனமாறாதிருக்கிறோம்
மகிழ்ச்சி குறையாமல்,முக மலர்ச்சியாய்!

இப்படிக்கு,
மலர்கள்..





சனி, 23 ஜூன், 2012



திறந்தமனது பெண்கள்!


 இப்போ..
இரண்டு சக்கர வாகனங்களில்
எதிர்ப்படும் பெண்களெல்லாம்
நான் சிறுவயதில் படித்த
மாயாவிக்கதையை
நினைவுப்படுத்திப் போகிறார்கள்!

முகமூடித் திருடர்களை
திரும்ப திரும்ப
ஞாபகப்படுத்த வருகிறார்கள்!

திருட்டுப்பார்வை
உள்ளே ஒளிந்திருக்கிறது
மார்பு திறந்திருக்கிறது
துப்பட்டா முகத்தை மூடி
முகமூடி ஆகி இருக்கிறது!



திங்கள், 18 ஜூன், 2012



சொக்க வைக்கிறது பூமி!


என்னையும் அறியாமல்
எட்டிப்பார்க்கின்றன கண்கள்!
ஊர் பெயரை பார்க்கும் போதே
உரிமை கொண்டாடாடுகிறது வாய்!
மண்ணை மிதிக்கும் போதே
மலரும் நினைவுகளில் மகிழ்கிறது  மனது!
சொல்லொண்ணா சுகம் நிரப்பி
சொக்க வைக்கிறது 
என்னும் போதே எங்கள் பூர்வீக பூமி!



செவ்வாய், 12 ஜூன், 2012



தலை(வி)அனை மந்திரம் !


மதர்ந்த முலைகளுடன்
அவள் தெரிந்தாள்
தூரத்தே நின்று ஓரப்பார்வையால்
என்னை உற்று நோக்கினாள்
அவள் அருகாமையில்
வருவதுபோல் எனக்குத் தோன்றியது
அவ்வளவு சீக்கிரம்
அது நடந்தேறும் என நான்
சற்றும்  எதிர்ப் பார்த்திருக்கவில்லை
முழுதும் முடிந்(த்)து எழுந்தேன்
கனவு கலைந்திருந்தது!
அருகாமையில் என் தலையணை
நனைந்திருந்தது!



திங்கள், 11 ஜூன், 2012



விண்ணைத்தாண்டி !


ஏறிப் பறித்திடும் வரையில்
எல்லாமே எட்டாக் கனிதான்!
எகிறி பிடித்திட
வானம் கூட உன்  கைப்பிடிதான்!



சனி, 9 ஜூன், 2012



எம் உலகமாகினாய்!


உன்னிடம் உதை வாங்கியபோதும்
மகிழ்ந்துகொள்கிறேன்
உன் நகக்கீரல் படும் போதெல்லாம்
என் நெஞ்சம் நிறைகிறேன்
நீ கடித்து வைத்த காயத்தை
விழுப்புண் என்கிறேன்
உன் மூத்திரத்தால் என் முகம் நனைய
விழித்து சிரிக்கிறேன்
நீ தந்தை என்ற ஸ்தானம் தந்து
எம் உலகமாகினாய்!








செவ்வாய், 5 ஜூன், 2012



நிர்வாணமாகும் போது !


நிர்வாணமாகும் போது
குரலும்,கூச்சமும்
நிர்வாணமாகிப்  போகிறதோ!
குளியலறைக்கும்,குரலுக்கும்
என்ன சம்பந்தம்
எல்லோரையும்   குயிலாக்கி
பார்க்கிறதே!



திங்கள், 4 ஜூன், 2012



உனக்கும் எனக்குமான உறவு


நேற்றுவரை உனக்கும் எனக்குமான
உறவு நீட்டித் திருந்தது!
அன்று உன் முகம் பார்க்க
பசுமையாய் இருந்தது
உன் வாசத்தில் நான்
வசப்பட்டவனாய் இருந்தேன்
கனியின் ருசி சுவைத்து
மயங்கிக் கிடந்தேன்
உன் மடியில் படுத்து
தென்றல் வருட இளைப்பாறினேன்
கிளையென உன் கரம் பற்றி
தாவினேன் கட்டியணைத்தேன்!
என் மரமே, காலத்தின் நீட்சி
புதியதாய் கட்டிடம் கட்ட வந்தவன்
உன்னை வெட்டி எடுத்து விட்டான்!



சனி, 2 ஜூன், 2012



ரகசியம் !



அளவுக்கதிக அன்பை பொழிந்து
என்னைக்  கொல்கிறாய்!
எல்லைக்கடந்த ஊடல் செய்தும்
என்னைக்  கொல்கிறாய்!
நீ தேவதையாகி ராட்சசியாகும்
ரகசியம்
கொஞ்சம் சொல்லிச் செல்லடி!



செவ்வாய், 29 மே, 2012



நம்ப வைக்கிறது மூளை!


எழுத்துகள் ஆழமாக வேண்டுமென்று
என் எண்ணம் சொல்கிறது
அதன் சொல் கேளாமல்
மேலோட்ட சிந்தைகளை சிதறி
எழுதி முடிக்கிறது கைகள்
ஏனோ தானோவென்று
வார்த்தை சேர்ப்பை கோர்த்து  முடித்து
இதுதான் கவிதை என்று
என்னை ஏமாற்றி
நம்ப வைக்கிறது  என் மூளை!



திங்கள், 28 மே, 2012



உழைக்காமல் வியர்வை!

 
உழைக்கும்போது வியர்வை
வருவதில்லை
உழைக்காமலே
வழிகிறது வியர்வை
மாநகரப் பேருந்து கூட்ட நெரிசல் !



சனி, 26 மே, 2012



புரியவில்லை காதல்?


சந்தோசத்  தருணத்தை விடவும்
சண்டைத் தருணங்கள் அதிகமாகின்றன!
அன்பானவளாய் தெரியும் அதே நேரத்தில்
சைக்கோவாகியும் தொலைக்கிறாய் !
இனிக்க முத்தமிட்டு விட்டு
என்னை கசப்பாக்கி பார்ப்பதேனோ !
வலிப்பெற பெற
பொலிவிலக்கிறதா இல்லை வலிமைப்பெறுகிறதா
புரியவில்லை காதல்?



செவ்வாய், 22 மே, 2012



நீ கோபித்துக்கொள் !

நீ கோபித்துக் கொள்ளும்
போதெல்லாம்
நான் மகிழ்ந்து கொள்கிறேன்!
உன்னை தேற்றுகிற சாக்கில்
இறுக்கி அணைத்து
இனிக்க முத்தம் தரும்
இன்னொரு வாய்ப்பை 
எனக்கு அருள்கிறாயே என்று!



திங்கள், 21 மே, 2012



மூன்றெழுத்தில் மூச்சு!



அம்மா உன் கரங்கள்
அன்பொழுக அணைக்கிறது!
குழந்தையின் முதல் குரல்
உன்னையே அழைக்கிறது!

மூன்றெழுத்தில் மூச்சுவிடுகிறது
உலகு..
அம்மா!

அன்னையே
அகிலத்தை நீ
வெளியில் கண்டதில்லை
என்னையே நீ
உன் உலகமாய் கொண்டாய்!

தாய்மைக்கு நிகராய்
நான் கண்டதில்லை
எங்கும்!
தாய்மையை போற்றும்
குலமே
தரணியில் ஓங்கும்!


(அன்னையர் தினத்தன்று சித்திரம் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான என் கவிதை!)



செவ்வாய், 24 ஏப்ரல், 2012