நட்பின் வலிமை பிரிவில் தெரியும்.
கல்லூரி இறுதி நாளில் நண்பன்
எழுதித் தரும் கிறுக்கல்களும் கவிதைகளே.
எனக்கு வந்த Scrap Book
பொக்கிஷம்!
நட்பின்
நினைவுகள்!ஒன்பதரை மணி காலேஜுக்கு
ஒவ்வொருத்தனா
கௌம்பும்போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகும்
வரைக்கும்...
அடிச்சி புடிச்சி
கௌம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
படபடன்னு
சாப்டதுண்டுபதட்டத்தோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல
தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும்
மறந்ததில்ல..!
விறுவிறுன்னு நடந்து
வந்து
காலேஜ் கேட் நெருங்குறப்போ
‘வெறுப்படிக்கிதுடா மச்சான்னு’
ஒருத்தன்
பொலம்பி தொலைச்சாக்கா
வேற எதுவும் யோசிக்காம
வேக வேகமா
திரும்பிடுவோம்
ரூம்ல வெட்டி அரட்டை அடிக்க
இல்ல தியேட்டர்ல படம்
பார்க்க..!‘கஷ்டப்பட்டு’ காலேஜ் போனா
கடமைக்கார புரொபசர் பாடம்
சொல்லி படுத்துவார்.!
அசைன்மன்ட் எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க
கடுப்படிப்பார்..!
கேலி கிண்டல்
பஞ்சமில்ல,
கூத்து கும்மாளம் குறையுமில்ல,
எல்லோருக்கும் சேத்துதான்
பனிஷ்மென்ட்னா
ஹெச்.ஓ.டி-ய கூட விட்டதில்ல...!ஈ அடிச்சான் காபி
இந்த பக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தப்பக்கம்...
ஒருத்தன் மட்டும்
படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆவோம்..!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் தவிக்க
விட்டதில்ல...
டீக்கடைல அக்கவுன்ட் வெச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க மட்டும்
பஞ்சமே வந்ததில்ல..!அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா
போட்ட மோதிரமும்
ஃபீஸ் கட்ட முடியாத நண்பனுக்காக
சேட்டுக் கடையில் இந்தி
படிக்கும்..!
சட்டைய மாத்தி
போட்டுக்குவோம்
சாதி சமயம் பார்த்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு
தூங்குவோம்
சாய்ஞ்சிக் கொள்ள தோள் கொடுத்து
தாங்குவோம்!படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி
பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்து
பாத்ததில்லை..!
வேல தேடி
அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘வெட்டி ஆபிஸர்’ன்னு கலாய்ச்சு
மாறி
மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து
சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்லும்
கண்ணு எட்டப்பனா
கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி
கொடுக்க நெனக்கிறப்போ
‘சாப்பாட்ல காரம்டா மச்சான்’னு
சமாளிச்சு எழுந்து
போவோம்..!
நாட்கள் நகர வருஷங்கள்
ஓடுது,
எப்போதாவது மட்டும்தான் இமெயிலும் வருது
‘Hai da மச்சான்.. how are
you?’ன்னு...தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜ்
அக்காவோட
சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
Personal Loan Interest
Housing Load
EMI
Share Market சறுக்கல்
Appraisal டென்ஷன்
இந்த கொடுமையெல்லாம்
பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?’ன்னு
இஞ்சி மறப்பா போல ஒரு
காதல்,
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடா
கூடமா,
நேரம் பார்க்க நேரமில்ல போதாகாலமா...!இமெயில்
இருந்தாலும்
இன்டர்நெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி போன்
இருந்தாலும்
கையில காலிங் கார்டு இருந்தாலும்
நேரம் மட்டும்
கிடைப்பதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி
வாழ்ந்து பார்க்க...!
அலைபேசி
இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
ஃபேஸ்புக் இருந்தும் கமென்ட் பண்ண முடியாம
போனாலும்
Available-னு தெரிஞ்சும் Chat பண்ண முடியாம போனாலும்
ஏண்டா
பேசல?ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும்
முடியல!கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாம போனாலும்,
அம்மா
தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி
நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய
இடத்துல
செதுக்கி வச்சிட்டு போகப்போற என் தோழர்கள்
தேசம் கடந்து
போனாலும்
பாசம் மறந்து போகாது...!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு
குறையாது...!
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘மாமா’, ‘மச்சான்’
மாறாது...!
youthful.vikatan. thanks