Listen 3D Quality

திங்கள், 9 ஜூலை, 2012

மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...


மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...

எரிய எரிய
மெழுகு உருகுவதுபோல்
வயது ஏற ஏற
மனிதன் ஆயுள் குறைகிறது...

அடுத்தவருக்கு வெளிச்சம் கொடுத்து
மெழுகு உருகுகிறது
அடுத்தவருக்காக வாழ்ந்து வாழ்ந்து
மனிதன் உருகுகிறான்...

உடலை விட்டு உயிர் பிரிவது போல
மெழுகை விட்டு திரி பிரிகிறது
கடைசியில் உடலும் மெழுகும் மட்டுமே மிச்சம்..


காத்திருக்கிறோம்

பிறக்கவும் காத்திருக்கவேண்டும்
பின் வாழ்கையில் எல்லா
நேரங்களிலும் நிலையிலும்
சிலருக்காக சிலவற்றுக்காக
காத்திருக்கிறோம் ;
தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
காத்திருந்து காத்திருந்து
சோர்ந்தவிட்ட நாம் பின்
இறக்கவும் காத்திருக்கவேண்டும்!

போலியோ இல்லா இந்தியா

இனி இல்லை கவலை
இந்தியாவில் போலியோ இல்லை
இந்தியர்கள் ஒன்றுபட்டோம்
போலியோவை ஒழித்துவிட்டோம்
நோயில்லா இந்தியாவை படைப்போம்
சுகாதாரமாய் வாழ பழகுவோம்
காய்கறி உணவுகளை சேர்ப்போம்
சத்தான உட்டச்சத்தை பகிர்வோம்
மாசுயில்லா சுற்றுசுழல் அமைப்போம்
அனைவரும் நலமாய் இருப்போம்...

இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு போலியோவை ஒழித்ததுபோல் மற்ற ஆட்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தி வெற்றிக்காண்போம். நாம் வாழும் தேசத்தை நலமுடன் வைப்பது நம் இந்தியரின் கடமை.


சுகமான சுமைகள்

கருவை சுமக்கும் தாய்க்கும்
பிள்ளையை தோளில் சுமக்கும் தந்தைக்கும்
பாசத்தை சுமக்கும் சகோதிரிக்கும்
சீண்டல்களை சுமக்கும் சகோதரனுக்கும்
நட்பை சுமக்கும் தோழனுக்கும்
காதலை சுமக்கும் காதலிக்கும்
குடும்பத்தை சுமக்கும் மனைவிக்கும்
போரில் காயங்களை சுமக்கும் வீரனுக்கும்
வலிகள் கூட சில நேரம் சுமையான சுமைத்தான்
நம்மை சுமக்கும் பூமிக்கும்
நம் பாவங்களை சுமக்கும் இறைவனுக்கும் கூட
நாம் சுகமான சுமைகள் தான்!

செம்மொழியான எங்கள் தமிழ்மொழி

பழமைக்கு பழமையும்
புதுமைக்கு புதுமையும்
இனிக்கும் செம்மொழி
காலம் கடந்தாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாதவள் தமிழ்மொழி
உலகபுகழ் திருக்குறளும்
வான்புகழ் காப்பியங்களும்
அற புற நானூருகளும்
நெடுந் குறுந் துகைகளும்
ஒருக்கே பெற்ற தேன்மொழி
சங்கத்தமிழ் கண்டவளாய்
யுகம் யுகமாய் யுவதியாய்
சேர சோழ பாண்டியர்களின்
வைர மணிமகுடம்மாய்
எத்திசையிலும் புகழ்மணக்கும்
தமிழே வாழ்க! வாழ்க!

வண்ணத்துபூச்சி

வண்ணங்களின் கோர்வையாய்
இறைவனின் ஓவியமாய்
மலர்களின் தோழனாய்
இயற்கையின் படைப்பாய்
வானில் சுதிந்திர காற்றாய்
ரசித்திடும் உயிராய்
பறக்கும் வண்ணபூவாய்
மிளிரும் வண்ணத்துபூச்சியே
உன் அழகில் மயங்கிடா
மானுடன் இப்பூவுலகில் எது?
சிறிய நாட்களில்
அழகிய வாழ்க்கையாய்
நிறைவுடன் வாழ்கிறாய்
வண்ணமயமாக...

முகநூல்

முகம் அறியாமல் முகநூளில்
வாழ்த்துக்கள் கூறி
நட்பை பரிமாறி
அன்பை வெளிக்காட்டி
கருத்தை வரவேற்று
பாசமான வட்டத்தில்
தோழியாய் சகோதிரியாய்
உறவு கொண்டாடி
முகம் அறியச்செய்த முகநூலே!

நீயே குடை

வானம் குடையானது பூமிக்கு
நீல நிற போர்வையால்
நீ குடையனாய் எனக்கு
நிறைவில்லா அன்பான அணைப்பால்...

தாமரை இலை தண்ணீர் போல்...

தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போல
உன் மனம் என்னோடு ஒட்டாமல் போனாலும்
நீர் இலையை விட்டு விலகாதது போல்
நானும் உன்னை விட்டு விலகுவதில்லை


சூரியகாந்தியும் நானும்..

சூரியனை பார்த்தவுடன்
மலர்ந்தாய்யடி நீ - நான்
என்னவனை பார்த்தவுடன்
மனம் மகிழ்ந்தேன் தோழி!!!

கதிரவன் போனவுடன்
குவின்தாய்யடி நீ – நான்
காதலன் பிரிந்தவுடன்
உயிர் துறந்தேனடி தோழி !!!

மலர் நீ வாடினாலும்
மங்கை நான் வாடினாலும்
நாம் கொண்ட காதல்
என்றும் வாடாதடி தோழி!!!

இரவில் நீ குவிந்தாலும்
காலை புலரும் போது
நீ மலர்வாய் தோழி!!!
பிரிவில் நான் தவித்தாலும்
என்னவனை காணும் போது
நான் மலர்வேன் தோழி!!!

நீங்காத நினைவுகள்

மறைந்துவிட்ட உறவுகளின் 
நீங்காத நினைவுகள்

உதிர்ந்துவிட்ட பூக்களின்
உலராத வாசனை

இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்

இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு

இயற்கையின் அழைப்பு
மீறமுடியாத பயணம்

காலம் இழப்பின்
காயத்தை மாற்றும்

காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….

நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகளுக்கு ஒரு நினைவஞ்சலி.... 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக