மனிதர்கள் பல ரகம் (2)
கொடுத்துக் கொண்டே இருக்கச் சொல்லும்
கடுகளவும் சுயநலம் அற்ற தன்மை உடையவன்
மனிதருள் மாணிக்கம் அவனே வள்ளல் !.......
கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு என
இத் தத்துவம் அறிந்து
தளம்பாமல் இருப்பவனே சான்றோன்!!.....
வென்றால் பெருமை
தோற்றால் வேதனை
அன்றும் இன்றும் என்றுமே
தட்டிக்கொடுத்து வாழ வைப்பவன் நண்பன்!...
அற்ப சுகத்தைத் துறந்து
பிறர் அகம் மகிழ வாழ்ந்து
நற்பணியே கெதியென
நானிலம் போற்ற வாழ்பவன் ஞானி !...
அஞ்சாது மனம் கோணாது
கண்மூடி திறக்கும் முன்னே
தன்னைத் தந்தும் பிற உயிர்
காகப் பிறந்தவ(ள் )ன் தியாகி !!!!.......