மனிதர்கள் பல ரகம் (2)
கொடுத்துக் கொண்டே இருக்கச் சொல்லும்
கடுகளவும் சுயநலம் அற்ற தன்மை உடையவன்
மனிதருள் மாணிக்கம் அவனே வள்ளல் !.......
கற்றது கை மண் அளவு
கல்லாதது உலகளவு என
இத் தத்துவம் அறிந்து
தளம்பாமல் இருப்பவனே சான்றோன்!!.....
வென்றால் பெருமை
தோற்றால் வேதனை
அன்றும் இன்றும் என்றுமே
தட்டிக்கொடுத்து வாழ வைப்பவன் நண்பன்!...
அற்ப சுகத்தைத் துறந்து
பிறர் அகம் மகிழ வாழ்ந்து
நற்பணியே கெதியென
நானிலம் போற்ற வாழ்பவன் ஞானி !...
அஞ்சாது மனம் கோணாது
கண்மூடி திறக்கும் முன்னே
தன்னைத் தந்தும் பிற உயிர்
பண்போடும் நற் பணிவோடும்
தலை குனியாமல் தன்
தரம் குன்றாமல் எந்நாளும்
இடர் வாராது காத்து நிற்பவன் வீரன் !...
வெள்ளை மனமும் சிறு
பிள்ளை குணமும்
உள்ள மனிதன் எவனோ
அவனே உண்மயான புனிதன் !...
நாட்டின் நலனே தன் நலனாய்
எந்நாளும் உழைக்கும் ஒரு வீரன்
தூற்றும் மக்கள் துயரைக்கூட
துடைத்தெறிவான் அவன் தலைவன் !...
நோட்டம் விட்டு நோட்டம் விட்டு
நொந்த உடலை தேற்ற மறந்து
ஈற்றில் கடமை பெரிதென எண்ணி
இரவும் பகலும் விழித்திருப்பானே காவலன் !!....
மனிதருள் பல ரகம் !!!.....
அன்பை முடக்கி தினமும்
அகந்தையை பெருக்கி
தன் வலிமை கொண்டு
பிறரை வதைப்பவன் அரக்கன்!...
அறிந்தும் அறியாதவனாய்
உறங்குவதுபோல் நடித்து
தன்னையும் பிறரையும்
ஏமாற்றிப் பிழைப்பவனே அறிவிலி!...
சொல் ஒன்றும்
செயல் வேறொன்றுமாய்
கண்கட்டி வித்தை புரிபவனே
அறிவறிந்த சாத்தான் !!.......
தன்நலன் கொண்டு
அறிவுரை யாப்பவன்
கண் இருந்தும் அறத்தைக்
கற்க மறந்த கோழை!....
புகழ் விரும்பி என்றும்
புறஞ் சொல்லித் திரியும்
அகத் தூய்மை அற்றவனே
அகிலமே வெறுக்கும் வஞ்சகன் !.....
அற்ப சுகத்திற்கு அடிமையாகி
நட்பைக்கூட துச்சமாய் மதித்து
காட்டிக் கொடுத்து -தன் வயிறு
வளர்பவன் எவனோ அவனே துரோகி!!...
இருந்தும் இல்லாதவன்போல்
தர்மம் செய்யப் பின்வாங்கும்
பணம் மேல் பணம் படைத்தவனே
பாரினில் தலை சிறந்த கஞ்சன்!....
மத வெறி
இன வெறி
கொண்டாடும் மனிதனே
பித்தருள் பெரும் பித்தன் !!!!......
(என்றுமே தெளியாத பைத்தியம் !...)
மென்மை என்பதன் பொருள் அறியாத
வன்மையினால் அறிவிழந்து செயல்ப்படும்
ஒரு வகை மனித மிருகமே
யாரும் அடக்க முடியாத முறடன்!!!.....
சத்தியத்தை மதிக்காமல் அதை
சாக்கடையில் போட்டுவிட்டு
சுத்தமான மனிதனைப்போல் பிறரை
சூழ்ச்சி செய்து அழிப்பவனே கொலைகாரன்!...
சிற்றின்பம் தலைக்கேற
பெற்றவளையும் தாசி என்றே
பட்டம் சூட்டி மகிழ்பவன் எவனோ
அவனே மனித நேயம் அற்ற சண்டாளன்!...
இரத்தத்தில் குளித்து
இரவுபகல் தேடி அலைந்து
அடுத்தவன் உயிரைக் குடிக்க அலைபவனே
இரக்கமே அற்ற கொடியவன் (இயமன் !..)
வரவு ஒன்று செலவு நூறு
வாங்கித் தின்றதை திருப்பித் தருவதாரு
கொடுக்கும் போது பணிந்து நிற்பான்
திருப்பிக் கேட்டால் எரிந்து விழுவானே ஊதாரி!!....
இங்கும் அங்கும் கதை பேசி
இருக்கும் அறிவை செலவளித்து
ஒன்றை ஒன்று பகைத்திடவே
ஓயாமல் உழைப்பானே சகுனி!....
அஞ்சாது பொய்யுரைத்து
அழிவுக்கே பாதை வகுத்து
செஞ்சோற்றுக் கடன் மறந்து
சிரச் சேதம் செய்வானே பஞ்சமா பாதகன்!....
காட்டிக் கொடுத்தே
நாட்டைக் கெடுப்பவன்
கை நீட்டிப் பிளைத்தே பிறரை
வேட்டையாடுபவன் எட்டப்பன்!...
(தொடரும் !...:) )
அழகு !!!......
தலை விரி கோலம் ஆடிடும் பெண்கள்
தலை நகர் எங்கும் பெருகிவர நானும்
அழகிய விம்பம் உனைக் கண்டு
ஆனந்தம் கொண்டேன் என் தாய்போல் என்று!...
பழகிய நட்பால் உன் இளகிய மனதை
பார்த்ததும் இங்கே வியப்புற்றேன் ........
கலியுகம் கட ந்த கனி இவள் என்று
உனைக் கண்டதும் நெஞ்சில் வரைந்துவிட்டேன்!....
பழமையை புதுமை வென்றிடுமோ !.....
அது பணிவுடன் என்றும் இருந்திடுமோ
பல பழமொழி போற்றும் பெண் நீயே
என்னை உன் பதியென ஏற்க்க வரவேண்டும்......
ஒரு புதுமையை இங்கு கண்டாயோ !!!....
இந்தப் பூச்சுக்கு விலை என்ன சொல்வாயோ!..
உடல் நலக் கேடு உடன் வருது பாரு !....
பண மலை தகர்ந்து பனி மலையாகிவிடுமே!!....
அழகிது அழகென சொல்வார் யார் !...
அவர் அறிவிலி என்றே கொள்வேன் நான் ..
சில மலர்களின் அழகு மனதினைக் கவர
இந்தத் தவறுகள் இன்றே ஒழிந்திட வேண்டும்!!.... .
உடல் நலன் பேணும் கொள்கையுடன்
உறுதியாய் எவரும் வாழ்ந்திடவே
பல தலைமுறை உணர்ந்து எழுதிய குறிப்பை
தேடியே வளம்பெற வாழ்த்துகின்றேன் .....
தலை நகர் எங்கும் பெருகிவர நானும்
அழகிய விம்பம் உனைக் கண்டு
ஆனந்தம் கொண்டேன் என் தாய்போல் என்று!...
பழகிய நட்பால் உன் இளகிய மனதை
பார்த்ததும் இங்கே வியப்புற்றேன் ........
கலியுகம் கட ந்த கனி இவள் என்று
உனைக் கண்டதும் நெஞ்சில் வரைந்துவிட்டேன்!....
பழமையை புதுமை வென்றிடுமோ !.....
அது பணிவுடன் என்றும் இருந்திடுமோ
பல பழமொழி போற்றும் பெண் நீயே
என்னை உன் பதியென ஏற்க்க வரவேண்டும்......
ஒரு புதுமையை இங்கு கண்டாயோ !!!....
இந்தப் பூச்சுக்கு விலை என்ன சொல்வாயோ!..
உடல் நலக் கேடு உடன் வருது பாரு !....
பண மலை தகர்ந்து பனி மலையாகிவிடுமே!!....
அழகிது அழகென சொல்வார் யார் !...
அவர் அறிவிலி என்றே கொள்வேன் நான் ..
சில மலர்களின் அழகு மனதினைக் கவர
இந்தத் தவறுகள் இன்றே ஒழிந்திட வேண்டும்!!.... .
உடல் நலன் பேணும் கொள்கையுடன்
உறுதியாய் எவரும் வாழ்ந்திடவே
பல தலைமுறை உணர்ந்து எழுதிய குறிப்பை
தேடியே வளம்பெற வாழ்த்துகின்றேன் .....
கானல் நீரை நம்பி ஓடும் மான்களா!...
ஊர்ந்து திரியும் நத்தைக்கும்
உரிமை உண்டு இன் நாட்டினிலே
உழைத்து வாழும் எங்களுக்கோ
உள்ளம் முழுவதும் வலியிருக்கு!...
எம் பாட்டன் பாட்டி ஆண்ட பூமி
பகைவர் கைக்குப் போயாச்சு!...
உயிர் மீட்டு வந்த காலம் நினைத்தே
எம் உணர்வு செத்துப் போயாச்சு........
அண்டிப் பிளைக்கும் வாழ்வு இது
அறுந்து போகும் நிலைவந்தால்
ஒரு துண்டுக்காணி கூட இல்லை
நம் நாட்டில் துவண்டு அங்கே படுப்பதற்கு!!...
வீட்டு வாடகைக்குப் போயாச்சு இங்கு
மிச்சம் மீதி இருந்ததெல்லாம் தண்ணி
வில்லுக் கட்டித் தீர்ந்தாச்சு!!!............
அங்கும் இல்லை இங்கும் இல்லை
வாழ்க்கை இத்துப் போன படகாச்சு !.........
அட இந்தக் கதையைக் கேட்ட பின்னும்
வரவு இங்கு எக்கச்சக்கம் ஆயாச்சு!!...
பணம் எட்டுப்பட்டி தேறும் என்று
இருந்த தொழிலை இழந்து வந்தவர்தான்
இன்னும் கீழே போயாச்சு !!!...................
அகதி என்று வாழும் வாழ்வில் இனியும்
அர்த்தம் உண்டா எங்கே சொல் .........
உன் நின்மதியான வாழ்வு அதற்க்கு
உன் சொந்த நாடேதான் தெரிந்துகொள்!...
இப்படியும் ஒரு நாடு இருக்கா!...
அழைத்தாலும்
செல்ல மாட்டார்
அழைப்பு ஏதும் விடவும் மாட்டார்
யுத்தம் இல்லாமல் ஒரு பூமி பல
யுகங்கள் கடந்தும் வாழுது பார் சாமி!!!....
காலம் நேரம் பொன்னானது நம்
கடமை ஒன்றே கண்ணானது என
வேலை செய்து பிளைப்பவர்கள்
வீண் விண்ணாணத்தை எதிர்ப்பவர்கள்!...
பாலைப்போல கள்ளும் இல்லை இவர்கள்
பாசம் வைத்தால் பொல்லாதவர்கள்
ஏழை எளியவர் என்றே பார்க்க மாட்டார் என்றும்
பழக நல் இதயம்கொண்ட மானிடர்கள்!!!.......
நாட்டைப் போல நன் மக்களடா நானும்
இதுபோல் வேறெங்கும் கண்டதில்லை!...
சிறு கூட்டுக்குள் எத்தனை இனப் பறவைகள்
இருந்தும் சீராய் இருக்குதே மனித உரிமைகள்!!....
வெட்டுக் கொத்தும் வீண் சண்டையும்
விட்டுக் கொடுத்து வாழாத தன்மையும்
பித்தப் பையில் உறைந்திருந்தால் பின்
பிளைப்பு நடக்கும் அது எவ்வாறு!!!.......
நாம் கற்றுக் கொள்ள பிறரிடத்திலும்
கலந்து கிடக்குது பல நன்மைகளும்
உற்று இதனை உலகம் நோக்கினால்
உயிர் உய்ய வழிகள் நிறையவே உண்டு!...
சட்டைப் பையில் பணம் இருக்குது
பெரும் சண்டியர் என்ற நினைபிருக்குது
ஒற்றையில் நின்று நான் ஜெயிப்பேன் என்றால்
உன்னைத் திருத்த முடியாது!......
பூலோக சொர்க்கம் என்றழைக்கும்
புனிதமான நாடு இங்கேயும் பாரு
வாழ வழி தேடி வந்த கூட்டம்தான் வலிந்து
இழுக்குது எந்நாளும் இதனால் போராட்டம்!....
ஊரைச் சுற்றிக் கடனை வேண்டி
உருப்படாத பாதையில் தினமும் வீங்கி
ஆளை ஆள் அடித்துக்கொண்டு
அலங்கோலப் படுவதும் எதற்க்காக!....
தூக்குக் கயிறும் பூச்சி மருந்தும்
உயிர் போக்கும் வழிக்கு சிறந்ததென
ஆக்கம் இழந்து புழுப்போல் இங்கும்
அதையே தேடி அலைவதென்ன!.......
நம் நாட்டில் துயரம் பொங்கி வழிய
நம்மவர் படும் துன்பம் மறந்து நீயும்
வீண் பேச்சு வம்பு வழக்கில் இறங்கி
வீதியில் நின்று சண்டை புரிவதும் ஏன்!!!.....
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவும்
நம் குலத்தில் தோன்றிய பழக்க தோஷம்
மாற்று வழிகள் இதற்குத் தேவை முடிந்தால்
மற்றவரை இகழ்வதை நிறுத்து ................
அழைப்பு ஏதும் விடவும் மாட்டார்
யுத்தம் இல்லாமல் ஒரு பூமி பல
யுகங்கள் கடந்தும் வாழுது பார் சாமி!!!....
காலம் நேரம் பொன்னானது நம்
கடமை ஒன்றே கண்ணானது என
வேலை செய்து பிளைப்பவர்கள்
வீண் விண்ணாணத்தை எதிர்ப்பவர்கள்!...
பாலைப்போல கள்ளும் இல்லை இவர்கள்
பாசம் வைத்தால் பொல்லாதவர்கள்
ஏழை எளியவர் என்றே பார்க்க மாட்டார் என்றும்
பழக நல் இதயம்கொண்ட மானிடர்கள்!!!.......
நாட்டைப் போல நன் மக்களடா நானும்
இதுபோல் வேறெங்கும் கண்டதில்லை!...
சிறு கூட்டுக்குள் எத்தனை இனப் பறவைகள்
இருந்தும் சீராய் இருக்குதே மனித உரிமைகள்!!....
வெட்டுக் கொத்தும் வீண் சண்டையும்
விட்டுக் கொடுத்து வாழாத தன்மையும்
பித்தப் பையில் உறைந்திருந்தால் பின்
பிளைப்பு நடக்கும் அது எவ்வாறு!!!.......
நாம் கற்றுக் கொள்ள பிறரிடத்திலும்
கலந்து கிடக்குது பல நன்மைகளும்
உற்று இதனை உலகம் நோக்கினால்
உயிர் உய்ய வழிகள் நிறையவே உண்டு!...
சட்டைப் பையில் பணம் இருக்குது
பெரும் சண்டியர் என்ற நினைபிருக்குது
ஒற்றையில் நின்று நான் ஜெயிப்பேன் என்றால்
உன்னைத் திருத்த முடியாது!......
பூலோக சொர்க்கம் என்றழைக்கும்
புனிதமான நாடு இங்கேயும் பாரு
வாழ வழி தேடி வந்த கூட்டம்தான் வலிந்து
இழுக்குது எந்நாளும் இதனால் போராட்டம்!....
ஊரைச் சுற்றிக் கடனை வேண்டி
உருப்படாத பாதையில் தினமும் வீங்கி
ஆளை ஆள் அடித்துக்கொண்டு
அலங்கோலப் படுவதும் எதற்க்காக!....
தூக்குக் கயிறும் பூச்சி மருந்தும்
உயிர் போக்கும் வழிக்கு சிறந்ததென
ஆக்கம் இழந்து புழுப்போல் இங்கும்
அதையே தேடி அலைவதென்ன!.......
நம் நாட்டில் துயரம் பொங்கி வழிய
நம்மவர் படும் துன்பம் மறந்து நீயும்
வீண் பேச்சு வம்பு வழக்கில் இறங்கி
வீதியில் நின்று சண்டை புரிவதும் ஏன்!!!.....
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுவும்
நம் குலத்தில் தோன்றிய பழக்க தோஷம்
மாற்று வழிகள் இதற்குத் தேவை முடிந்தால்
மற்றவரை இகழ்வதை நிறுத்து ................
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி!...
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை
என்றுமே மாறும் உலகில் புது
காலத்தின் நியதிக்கேற்ப
கற்பனைகள் மாறும்போது
வாழத்தான் வாழ்க்கை என்று
வந்தவரெல்லாம் உணர்ந்ததுண்டோ!!....
ஆளுக்கோர் பக்கம் நின்று
அன்றாடம் பேசும் பேச்சில்
திண்டாடும் மனிதரெல்லாம்
சந்தோசம் கண்டதுண்டோ!!!.....
தூங்காமல் தூங்குகின்றார்
பார்க்கின்ற பார்வைக்கெல்லாம் பலர்
பயந்தேதான் வாழுகின்றார்!!!......
ஏனிந்த வாட்டம் இங்கே!....
நாம் எல்லோரும் மனிதர் தானே
வாயுண்டு மொழியும் உண்டு
வடிவாகப் பேசினால் என்ன?....!!
அடடா பேச்சுக்கும் (சில) மனிதருக்கும்
இடையில் பெரும் பள்ளம் உள்ளதென்று
விழும் முன்னே தெரிந்திருந்தால்
வீண் துன்பம் வருமா சொல்லு?......!!
வார்த்தையில் தெளிவு இன்மை!...
வதந்தியைப் பெருக்கும் தன்மை!..
போட்டியும் பொறாண்மையும் கொண்டு
புரிதலே அற்றுப் போகும் மனிதர்களா இவர்கள் !....

ஊனமது நெஞ்சில் இருக்க
உழலுகின்ற மனிதன் தொடர்பு
கால நேரம் அறியாமலே
காலை வாரும் இதுவே உண்மை!....
ஆளை அறிந்து நட்பைத் தொடரு
அவர்கள் அன்பை மதித்து வாழப் பழகு
நாளும் பொழுதும் நன்றாய் அமைய
நல்லதையே தினமும் பேசு!............
பொருளும் பணமும் வந்து போகும்
புகழும் பெருமையும் செயல் கண்டு தொடரும்
அறிவும் பண்புண் மனம்போல் அமையும்
மானம் போனால் அது போனதுதான்!.........
பின் சேர்த்து வைத்த செல்வம் என்ன
எமைத் தேடி வந்த புகழும் என்ன
உயிர் காத்து நின்ற மானம் போனால்
வெறும் உடலுக்கிங்கே என்ன வேலை?...!!
ஆராரோ ஆரிரரோ பாடவா.....
பூமித் தாயே உன் மடி மீது
புல்லைப்போல நாம் தூங்க
எல்லை இல்லா ஆனந்தம்
இது என்றும் நிலைக்க எம் வாழ்வில்
தொல்லைப் படுத்தும் நினைவுகளை
துரத்தி விட்டு குழந்தை போல்
ஆவின் பாலை அருந்தி நல்ல
அரிய நூலை தினம் வாசித்தால்
தூக்கம் இன்மை என்ற நோயை
தூசி போல துடைத்து விடலாம்
பார்க்கும் தொழிலும் பர பரப்பும் என்றும்
பாடாய் படுத்தும் இவ்வுலகினிலே
எமைக் காக்க மறந்து செயல்ப்பட்டால்
காலப் போக்கில் இதனாலே வரும்
கஸ்ரம் நஸ்ரம் இன்று புரியாது என்று
எம் பாட்டி சொல்வது அன்று புரிய வரும்!!....
நாம் வாழும் இந்த உலகினிலே
நாளும் பெருகுது மன நோயும்
இதன் காரணம் என்ன தெரியாதா!!....
கண்ணைக் கொஞ்சம் தூங்க விடு
அதி காலை எழுந்த பொழுது முதல்
அந்தி சாயும் வரும் வரைக்கும்
உடலும் மூளையும் படும் பாடு அதை
உணர்ந்து கொஞ்சம் தூங்க விடு
உணவுப் பழக்கம் முதற்கொண்டு
நல் ஒழுக்கம் நிறைந்த செயலதனால்
இனிக்கும் வாழ்வு தேன்போலே
இதற்க்கு மேலே என்ன வேண்டும்!......
கனக்கும் இதயம் உனக்கெதற்கு!...
கனவிலும் துன்பம் உனக்கெதற்கு!...
இயற்க்கை கொடுத்த சுகம் இருக்கு
இதையும் உணர்ந்து கொஞ்சம் தூங்கி எழு...
புல்லைப்போல நாம் தூங்க
எல்லை இல்லா ஆனந்தம்
இது என்றும் நிலைக்க எம் வாழ்வில்
தொல்லைப் படுத்தும் நினைவுகளை
துரத்தி விட்டு குழந்தை போல்
ஆவின் பாலை அருந்தி நல்ல
அரிய நூலை தினம் வாசித்தால்
தூக்கம் இன்மை என்ற நோயை
தூசி போல துடைத்து விடலாம்
பார்க்கும் தொழிலும் பர பரப்பும் என்றும்
பாடாய் படுத்தும் இவ்வுலகினிலே
எமைக் காக்க மறந்து செயல்ப்பட்டால்
காலப் போக்கில் இதனாலே வரும்
கஸ்ரம் நஸ்ரம் இன்று புரியாது என்று
எம் பாட்டி சொல்வது அன்று புரிய வரும்!!....
நாம் வாழும் இந்த உலகினிலே
நாளும் பெருகுது மன நோயும்
இதன் காரணம் என்ன தெரியாதா!!....
கண்ணைக் கொஞ்சம் தூங்க விடு
அதி காலை எழுந்த பொழுது முதல்
அந்தி சாயும் வரும் வரைக்கும்
உடலும் மூளையும் படும் பாடு அதை
உணர்ந்து கொஞ்சம் தூங்க விடு
உணவுப் பழக்கம் முதற்கொண்டு
நல் ஒழுக்கம் நிறைந்த செயலதனால்
இனிக்கும் வாழ்வு தேன்போலே
இதற்க்கு மேலே என்ன வேண்டும்!......
கனக்கும் இதயம் உனக்கெதற்கு!...
கனவிலும் துன்பம் உனக்கெதற்கு!...
இயற்க்கை கொடுத்த சுகம் இருக்கு
இதையும் உணர்ந்து கொஞ்சம் தூங்கி எழு...
என்னடா உலகம் இது !!!....
அழகும்
அறிவும் பெருகிவிட்டது!...
அன்பும்
பண்பும் குறைந்து விட்டது
மனித
நேயம் அற்று விட்டது!!.....
மனதில்
சுமைகள் தொற்றி விட்டது!....
இரக்க குணத்தைத் தேடியே
இரண்டு விழிகளும் தோற்று விட்டது
அரக்க குணத்தவர் நடுவினிலே நல்
ஆன்மா துடிக்குது தன்னந் தனிமையிலே!...
கறக்கும் நோக்கம் தனைக்கொண்டு
களவு புரியும் மனிதர்களைக் கண்டு
விரக்தி அதிகம் ஆனதனால் எங்கும்
விம்மி அழுகுது நல் மனங்கள் இன்று!...
உலகம் அழிவின் பாதையிலே
உச்சக் கட்டம் தாண்டி விட்டது!!...
இனியும் திருந்த வழியின்றி
எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதே!!....
எதிலும் பாரு கலப்படம்!!!..........
எல்லாம் மனிதரை அழித்திடும்
பெரும் சதியின் வலைகள் தானடா
நாம் காணும் பொருள்கள் யாவுமே!...
இலைகள் குழைகள் தாங்கிய
மனிதன் கண்ட சுகங்களில்
எதனை நாங்கள் கண்டோமோ
இன்று உள்ள வாழ்விலே!!!.......
கலைகள் மிகுந்து கிடந்தாலும்
கண்முன் உறவுகள் இருந்தாலும்
அமைதி அற்று மனங்கள் எங்கோ
அலைபோல் அலையுதே இப் புவிதனிலே!...
இதிலும் ஓர் இன்பம் இருக்கு!.......
அரிவு வெட்டிச்
சூடடித்து
அழகாகக் குடித்தனம் பண்ணி
ஒன்றுக்குப் பத்து பிள்ளைகள்
பெற்று வளர்த்தவர்கள்தான்
இன்றும் நாடு விட்டு நாடு வந்து
கோப்பை கழுவுகின்றார்கள்!......
இவர்கள் தேடி வைத்த செல்வம் எங்கே!...
திரண்டு நின்ற சுற்றம் எங்கே !...........
காடுபத்திக் கிடக்குதடா கவனிப்பாரற்று
ஓடு தடி இழந்த இல்லம் பல நம் நாட்டினிலே ....
இங்கோ வாடகைக்கு வீடெடுத்து
வாயைப் பொத்திக் கையைக் கட்டி
அடிமை போல எம் தமிழன் இன்றும்
அகதி வாழ்க்கை வாழுகின்றான்!......
இதில் வெற்றி என்ன தோல்வி என்ன
வெந்த புண்ணில் பாயும் ஈட்டி எப்போதோ
கற்றுத் தந்த பாடம் நூறு இனியும் இங்கு
கற்பதற்கு என்ன உண்டு சொல்!................
கடந்த காலம் திரும்பிடுமோ எம்
கஸ்ரம் நஸ்ரம் அகன்றிடுமோ என்று
விடியல் தேடி அலைந்து ஓய்ந்த இனமா
புதுத் தோல்வி கண்டு துவண்டுவிடும்!.....
முடிந்தவரை முயற்சி ஒன்றே எமக்கு
விடியல் தரும் பாதை என்று நாமும்
அடைந்த துன்பம் மறந்திடவே பல
பாதை நோக்கி நகர்கின்றோம்!...........
அழகாகக் குடித்தனம் பண்ணி
ஒன்றுக்குப் பத்து பிள்ளைகள்
பெற்று வளர்த்தவர்கள்தான்
இன்றும் நாடு விட்டு நாடு வந்து
கோப்பை கழுவுகின்றார்கள்!......
இவர்கள் தேடி வைத்த செல்வம் எங்கே!...
திரண்டு நின்ற சுற்றம் எங்கே !...........
காடுபத்திக் கிடக்குதடா கவனிப்பாரற்று
ஓடு தடி இழந்த இல்லம் பல நம் நாட்டினிலே ....
இங்கோ வாடகைக்கு வீடெடுத்து
வாயைப் பொத்திக் கையைக் கட்டி
அடிமை போல எம் தமிழன் இன்றும்
அகதி வாழ்க்கை வாழுகின்றான்!......
இதில் வெற்றி என்ன தோல்வி என்ன
வெந்த புண்ணில் பாயும் ஈட்டி எப்போதோ
கற்றுத் தந்த பாடம் நூறு இனியும் இங்கு
கற்பதற்கு என்ன உண்டு சொல்!................
கடந்த காலம் திரும்பிடுமோ எம்
கஸ்ரம் நஸ்ரம் அகன்றிடுமோ என்று
விடியல் தேடி அலைந்து ஓய்ந்த இனமா
புதுத் தோல்வி கண்டு துவண்டுவிடும்!.....
முடிந்தவரை முயற்சி ஒன்றே எமக்கு
விடியல் தரும் பாதை என்று நாமும்
அடைந்த துன்பம் மறந்திடவே பல
பாதை நோக்கி நகர்கின்றோம்!...........
பஞ்சணையும் உனக்கு நானல்லவோ !....
உன் பிஞ்சுக் கரம்
எடுத்து
நெஞ்சில் தொடுகையிலே
அன்னை மார்பகத்தில்
அமுதம் சொரிகிறதே!.....
உன்னைச் சுமப்பதற்கும்
உன் உடலை வளர்ப்பதற்கும்
என்னைப் படைத்தானே அந்த
இறைவனுக்கு நான் நன்றி
சொல்வேன்!..............
உன் முல்லைச் சிரிப்பழகால்
என் முகத்தை மலரவைத்தாய்
எந்தன் கண்ணின் கருமணியே
எனக்கும் காவல் நீயல்லவோ!....
தென்னை இளஞ்சோலைக்
காற்றாய் எனை நீ தீண்ட
என்னை மறந்தேனே என்
இளவம் பஞ்சே நீ தூங்கு!....
வண்ணத் தூரிகையால் உந்தன்
வாழ்க்கைப் பாதை அதை
இன்றே மெருகூட்ட என்
இதயம் துடிக்கிறதே..............!!!
இந்த ஏழை வயிற்றில் நீயும்
ஏனோ வந்து பிறந்தாய் !........
நாளை இந்த ஊரும் உலகும்
உன்னை வாழ்த்த நானும்
வாழ்த்துகிறேன் !.....................
வாடாத மலர்போல் உந்தன்
வாழ்க்கை என்றும் மலந்திருக்க
இனி நாள்தோறும் பூஜிப்பேன்
நலமாக நீ இங்கு தூங்கு!.............
என் வீட்டுக் கதிரவனே ......
உன்னாலத்தான் புது விடியல் வரும்
மண்ணாளப் பிறந்தவனே இனி
மகிழ்வாக என்றும் தூங்கு!..........
நெஞ்சில் தொடுகையிலே
அன்னை மார்பகத்தில்
அமுதம் சொரிகிறதே!.....
உன்னைச் சுமப்பதற்கும்
உன் உடலை வளர்ப்பதற்கும்
என்னைப் படைத்தானே அந்த
இறைவனுக்கு நான் நன்றி
சொல்வேன்!..............
உன் முல்லைச் சிரிப்பழகால்
என் முகத்தை மலரவைத்தாய்
எந்தன் கண்ணின் கருமணியே
எனக்கும் காவல் நீயல்லவோ!....
தென்னை இளஞ்சோலைக்
காற்றாய் எனை நீ தீண்ட
என்னை மறந்தேனே என்
இளவம் பஞ்சே நீ தூங்கு!....
வண்ணத் தூரிகையால் உந்தன்
வாழ்க்கைப் பாதை அதை
இன்றே மெருகூட்ட என்
இதயம் துடிக்கிறதே..............!!!
இந்த ஏழை வயிற்றில் நீயும்
ஏனோ வந்து பிறந்தாய் !........
நாளை இந்த ஊரும் உலகும்
உன்னை வாழ்த்த நானும்
வாழ்த்துகிறேன் !.....................
வாடாத மலர்போல் உந்தன்
வாழ்க்கை என்றும் மலந்திருக்க
இனி நாள்தோறும் பூஜிப்பேன்
நலமாக நீ இங்கு தூங்கு!.............
என் வீட்டுக் கதிரவனே ......
உன்னாலத்தான் புது விடியல் வரும்
மண்ணாளப் பிறந்தவனே இனி
மகிழ்வாக என்றும் தூங்கு!..........
மறந்தும் இத்தவறை என்றும் செய்யாதே!......
சித்திரங்கள்
கலைந்தால்
சீர்படுத்தி விடலாம் ............
சிலை ஒன்று உடைந்தாலும்
செதுக்கி மீண்டும் பெறலாம்!..
எத்தனை விரையம் வந்தாலும்
எடுத்தெறிந்து செல்லலாம் ......
நித்திரை குலைந்தாலோ
நினைவாற்றல் அகன்றாலோ
உற்ற துணை இழந்தாலோ
உயிர் கொல்லி நோய் வந்தாலோ
சுற்றம் எம்மை வெறுத்தாலோ
சுகமான வாழ்வு அற்றுப் போனாலோ
வெற்றி தோல்வி கண்டாலோ
வீரம் குறைந்து போனாலோ
கற்ற கல்வி பயனற்றுப் போனாலோ
கையேந்தும் நிலை வந்தாலோ
மற்றும் எந்தத் துயர் வந்தாலும்
மனிதனால்த் தாங்கிட முடியும்
முடியாதென்பது நம்பிக்கைத் துரோகமும்
அதனால் வந்த பேர் இழப்புகளும்!.......
சீர்படுத்தி விடலாம் ............
சிலை ஒன்று உடைந்தாலும்
செதுக்கி மீண்டும் பெறலாம்!..
எத்தனை விரையம் வந்தாலும்
எடுத்தெறிந்து செல்லலாம் ......
நித்திரை குலைந்தாலோ
நினைவாற்றல் அகன்றாலோ
உற்ற துணை இழந்தாலோ
உயிர் கொல்லி நோய் வந்தாலோ
சுற்றம் எம்மை வெறுத்தாலோ
சுகமான வாழ்வு அற்றுப் போனாலோ
வெற்றி தோல்வி கண்டாலோ
வீரம் குறைந்து போனாலோ
கற்ற கல்வி பயனற்றுப் போனாலோ
கையேந்தும் நிலை வந்தாலோ
மற்றும் எந்தத் துயர் வந்தாலும்
மனிதனால்த் தாங்கிட முடியும்
முடியாதென்பது நம்பிக்கைத் துரோகமும்
அதனால் வந்த பேர் இழப்புகளும்!.......
என்னை நீயாவது புரிஞ்சுக்கோ.......
பலமுறை இறந்து
பிறப்பதற்கா என்னை
ஒருமுறை ஈன்றாய் இந்த உலகத்திலே!....
நான் படும்துயர் அறிந்தும் அறியாமல்
இந்தப் பாவியைத் தவிக்க விட்டாயே!...
உன் உதிரத்தைப் பாலாக்கி நல்ல
உள்ளத்தைத் தேனாக்கி அன்று
தினமும் ஊட்டி வளர்த்தாயே அது
எதற்காகச் சொல் என் அம்மா!......
மழைமேகம் கடன் கேக்கும்
என் மனம் சிந்தும் கண்ணீரைத்
தினம் ஊத்தி வடிக்கின்றேன் எனினும்
தேயாதோ வரும் துன்பம் ............!!!!!!!!
என் பலன் பார்த்துப் பெத்தாயோ!....
நிறை பாசத்தைத் தந்து வளர்த்தவளே
நான் கருகாமல்க் கருகுகின்றேன்
என்னைக் கண்ணெடுத்துப் பாரம்மா!..
உறவெல்லாம் தொலைதூரம்
என் உயிர் மூச்சும் பிரிஞ்சாச்சு
உன்னை வலைபோட்டுத் தேடுகின்றேன்
ஒரு வார்த்தையேனும் பேசம்மா!.....
நிலை இல்லா இவ் வாழ்க்கை எனக்கு
நிசப்தமாகிப் போனபின்பும் இங்கு
எதற்க்காக வாழுகின்றேன்!..........
எனை அழைத்துச் செல்லம்மா ..........
மருதாணி கையிலிட்டு எந்தன்
மன மகிழ்வு பார்ப்பவளே இனி
அது ஒருபோதும் கிட்டாது நீ
என் பேச்சைக் கேளம்மா.............
விடிவெள்ளி சாஞ்சாச்சு மனதில்
விரகமும் ஒஞ்சாச்சு அதனால்
ஜடமான என் உடலை இனியேனும்
சுடத் தேதி சொல்லம்மா!.....................
ஒருமுறை ஈன்றாய் இந்த உலகத்திலே!....
நான் படும்துயர் அறிந்தும் அறியாமல்
இந்தப் பாவியைத் தவிக்க விட்டாயே!...
உன் உதிரத்தைப் பாலாக்கி நல்ல
உள்ளத்தைத் தேனாக்கி அன்று
தினமும் ஊட்டி வளர்த்தாயே அது
எதற்காகச் சொல் என் அம்மா!......
மழைமேகம் கடன் கேக்கும்
என் மனம் சிந்தும் கண்ணீரைத்
தினம் ஊத்தி வடிக்கின்றேன் எனினும்
தேயாதோ வரும் துன்பம் ............!!!!!!!!
என் பலன் பார்த்துப் பெத்தாயோ!....
நிறை பாசத்தைத் தந்து வளர்த்தவளே
நான் கருகாமல்க் கருகுகின்றேன்
என்னைக் கண்ணெடுத்துப் பாரம்மா!..
உறவெல்லாம் தொலைதூரம்
என் உயிர் மூச்சும் பிரிஞ்சாச்சு
உன்னை வலைபோட்டுத் தேடுகின்றேன்
ஒரு வார்த்தையேனும் பேசம்மா!.....
நிலை இல்லா இவ் வாழ்க்கை எனக்கு
நிசப்தமாகிப் போனபின்பும் இங்கு
எதற்க்காக வாழுகின்றேன்!..........
எனை அழைத்துச் செல்லம்மா ..........
மருதாணி கையிலிட்டு எந்தன்
மன மகிழ்வு பார்ப்பவளே இனி
அது ஒருபோதும் கிட்டாது நீ
என் பேச்சைக் கேளம்மா.............
விடிவெள்ளி சாஞ்சாச்சு மனதில்
விரகமும் ஒஞ்சாச்சு அதனால்
ஜடமான என் உடலை இனியேனும்
சுடத் தேதி சொல்லம்மா!.....................
குத்து விளக்கே என் குலமகளே ......
கண்ணிரெண்டில் சோகம் போங்கக்
கையிரெண்டில் மாலை ஏந்தி
என்னுயிரும் அம்ர்ந்தாள் மண
மேடையிலே
என் இதயத்தில் இடி இடிக்க
.......!!!
வண்ண மயில்த் தோகை புடுங்கி
இனி வாசல்கூட்டச் செய்வாரோ !...
அவள் கன்னங்களில் காயம்
ஊட்டிக்
கண்ணீர் தெளிக்க வைப்பாரோ
!......
அன்னமென நடந்த பெண்ணை
அலக்கழிய வைப்பாரோ !............
இன்னமுத மொழி அடக்கி
இருத்தி எழுப்பப்
பார்ப்பாரோ!...
பன்னீரில் குளித்த முல்லை இவள்
பாசத்திற்கு ஏங்கித் தவிக்க
இன்னொருத்தி நுளைவாளோ
இடையில் வாழ்க்கை கெட்டுப்
போக!..
என்னதான் நடக்கும் இனிமேல்
என் இதயம் துடியாய்த் துடிக்கிறதே
...
நான் சொன்னதொரு
வார்த்தைக்கிணங்கிச்
சொக்கத் தங்கம் அவள் தலை
குனிந்தாளே!...
பெண்ணெனப் பிறந்துவிட்டால்
புகுந்தவீடு செல்ல வேண்டும்
இம் மண்ணினில் நடப்பதைக்
கேட்டால்
மனதினில் துயர் வழிகிறதே
!..............
எம் கண்ணெதிரோர் கஸ்ரம்
வந்தால்
அந்தக் கவலை தாங்க முடியாதே
!......
என் இறைவா நான் என்ன செய்வேன்
ஊரோடு ஒத்த குழப்பம்
இதற்கு.........//
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே .....
மனம் என்ன கல்லா ..........
மரத்து இங்கே போவதற்கு
மனிதன் என்று பிறந்துவிட்டால்
மண்ணில் இன்பம் தனித் தனியே ..
கடமை ஒன்றே பெரிதெனக்கொண்டால்
கனிந்த இதயம் எமக்கு எதற்கு
............!!!
வறுமையில்க்கூட வாடாதமுகம்
வாடுவதென்பது
அன்பிற்க்காகமட்டுமே
எம்முன் எழுந்து நிற்கும் சுவர்களின்மேல்
இதை
எத்தனைமுறை எழுதினாலும் புரியப்
போவதில்லை
அரிது இந்த மானிட வாழ்க்கை அதனால்
நீயும்
இதை அறிந்துகொண்டு வாழப்
பழகு..........//
விருப்பம் என்ற சொல்லைக்
கொண்று
வருந்தி நாமும் வாழும்
வாழ்க்கை
முடிந்தபின்னால் மீண்டும்
தொடராது
முற்றிலும் இதனை உணர்ந்துகொள்ளு
..
சுயநலத்தின் பக்கம் சார்ந்து
சுகப்படும் உறவுகள் சொல்லும்
அறிவுரையை எப்போதும் பெரிதென
எண்ணி
உன்னுள் அடக்கிய தாபமும் அகலாத
சாபமே!...
ஒருமுறைதான் செடியில் பூக்கும்
மலரென்று
உள்ளத்தில் அன்புக்குத்
தடைபோட்டால்
நீ வருந்தி ஏற்கும் இத் துன்பத்தை
உன்
வாழ்நாள் முழுதும் இழக்கமாட்டாய்
...
சிறகொடிந்த பறவை நான் .......
கவி பாடும் உன் குயிலுக்கு
வாழ்க்கை இருளானது
தினம்தோறும் அழுதிங்கே
கண்ணீர் குளமானது ...........
இதில் பூத்த தாமரைதான்
செந்தமிழ்க் கவியானது
அடடா இது அந்த சூரியனும்
என்றும் அறியாதது
!.............
என் விதி போகும் பாதை
அது ரணமானது...........
இதை விளங்காமல் மயிகூட
தினம் மகிழ்ந்தாடுது
!............
எனைத்தொட்டால் தென்றலும்
சூடேறுது
எதற்கிந்த வாழ்க்கை என்று என் மனம்
வாடுது
கலைக்கூடம் எனைக் காக்கத் தினம்
ஏங்குது
நான் கைவிரித்தால் மெய்ணைத்து எனை
வாழ்த்து
இது என்ன போராட்டம் எம்
வாழ்விலே......!!!
வாழ்க்கை எல்லாமே மாயைதான் வேறு
ஒன்றுமில்லை..
அன்பென்ற வலைவிரித்த ஆண்டவனின்
அன்றாட விளையாட்டை யார்தான்
அறிவார்!.....
வம்புகள் செய்திடும் எம்
தலைவிதியை
வருந்தித்தான் நாம் வெல்லவேண்டும் வேறு
வழியில்லை
இதைச் சொன்னவள் நீ எங்கு
சென்றாயோ........!!!
என் சோகத்தை ஆற்றிட வர
மாட்டாயோ!.......
அன்னை உன் மடியதனைத்
தேடுகின்றேன்
ஆதரித்து எனை நீயாவது தூங்க
வைக்காயோ...
என்
இரண்டு விழியும் செய்த பாவம்
என்ன........!!!
இதயம் இங்கே தனியாய்த் தவிக்கிறதே என்
செய்வென் !.....
வாடி என் சின்ன மகாறாணி........
பொன்னென்ன பொருள் என்ன
எதுவுமே பொருந்தாது உன்
அன்பிற்கு இணை என்று
சொல்லடி என் கிளியே
............
சின்னவிழிப் பார்வை அது
சொல்லும் மொழி போதும் இனி
உன் அன்னை என நான் வந்ததிங்கே
மண்ணில் முன் செய்த புண்ணியமே
....!!!
வண்ண வண்ணப் பாட்டிசைத்து
என் வாழ்வு இனிக்கச் செய்யும்
உன்னை
என் அகத்தே நான் நிறைத்தேன்
இனி ஏது துயர் இவ்
வையகத்தில்!.......
வந்தாரை மகிழ வைக்கும்
வாயாடி உன் பேச்சில்
இன்புற்ற நல் இதயங்கள்
இரு கரம் கூப்பி வணங்கையிலே
எந்தன் உயிர் தேவதையே
எழில் வண்ணச் சித்திரமே
எந்தன் மனம் உருகுதடி
ஏழ் பிறப்பும் நீ எனக்கு வேண்டும்
...
கட்டித் தங்கம் நீ முத்தம்
இட்டால் இங்கு
வட்டிக் கடையை நான்
நேசிக்கின்றேன்....
உன் பட்டு உடல் என்னைக் கட்டித்
தழுவ பல்லாயிரம்
பட்டாம் பூச்சிகள் தொட்டதை நான் உணர்ந்தேன்
........!!!
வெக்கப்பட்டு நீ சிரித்தால் உன்னைக்
கண்டு
வெள்ளிக் கொலுசும் வியக்குறதே
..........
அக்கம் பக்கம் நிக்கும் பூவும்
உந்தன்
அழகைக் கண்டு மயங்கியதே
..............!!!
சொர்க்கத்துக்கு வழியைக்
கேட்டால்
சொதியும் உன் பக்கம் திரும்பியதே
........!!!
நீ கொண்ட சொந்தம்வேறு கண்டு
கண்டு
இன்பம் கங்கை போல பொங்கியதே !........
பொற் பாவை உன் வாழ்க்கை
பூரணமாய் நலன் பெற்று இங்கே
வித்தைகள் பல கற்று நீ பல்லாண்டு
வாழ
நல்லோர் ஆசியது நாளும் உனக்குக்
கிட்டட்டும்......
பட்டுத் தெளிந்த மனம் சொன்ன வார்த்தை .......
மௌனமாய் விழி சிந்தும்
கண்ணீரோடு
உனக்காக நான் இங்கு
காத்திருக்க
என்னை வெண்ணிலவு என்று
சொன்னவனே
இன்று நடு வீதியிலே விட்டுச் சென்றதென்ன
...!!!
நிலவுக்குக் களங்கத்தை இங்கு
யார் சொன்னாலும் அகன்றுவிடும்
எனக்கொரு களங்கத்தை ஏன் தந்து
சென்றாயோ
எனதாருயிர் என்று உன்னை
நினைத்தேனே
நொடிப்பொழுதில் அதை மறந்து உன்
எண்ணம்
எங்கிருந்தோ வண்ணக் கனவுகள்
காண்பதென்ன..!!!
அன்னம்போல நடை நடந்து நோகாத என்
மேனியை
உன்னை நினைந்து உருக வைத்தாயே இது நீதியா
....!!!
செவ்வரளி மலர் எடுத்து சிறப்பாக
மாலைதொடுத்துக்
காந்தர்வ மணம்முடித்துக் கணவனாக
வந்தவனே
தப்புக் கணக்கொன்று உன் மனதில் தேங்கிக்
கிடக்க
சற்றும் உணராததால் உன்னால் நான் சாக்கடை
ஆனேனே! ....
இனி மலரும் முள்ளாகும் என் மனமும்
கல்லாகும்
விழிநீர் மழையாகும் உன் விருப்பம் இதுதானோ
...!!!
அறிவின் சுடர் நீதான் அழித்தாய் என்
வாழ்வை
இனி மலரும் நினைவேது மறந்தேன் எனை நானே
....
இளமைப் பருவத்தில் எல்லாம்
புதிதாகும்
இந்த வரவும் உறவும்கூட எம்
வாழ்விற்க்கினிதாகும்
நிலைமை பிழைத்தால்த்தான்
தன் நிலையை உணர்வீர்கள்
மறந்தும் இதுபோலோர் மரணம் வேண்டாதே
..............
உதிரப் பிறந்தோமா நல் வாழ்வை உணரப் பிறந்தோமா
...
அறியாப் பருவத்தில் கருகும் மலர்
எமைக்கண்டு
பூமி சிரிக்கிறது புழுவாய்த் துடிக்கிறது
இங்கே
ஆவி துறக்கவும் வழியின்றி அவலம்கொள்வான் அது
ஏன்...
காதல் செய் மனமே காதல் செய் அது
தப்பில்லை....
கழுத்தில்த் தாலி ஏறும்முன் கர்ப்பை
இழக்காதே
பின் வாதம்செய்தும் பயனில்லை
இதுதான்
உன் வாழ்வைத் தீர்மானிக்கும் எல்லை இதை
நீ மறவாதே...
இப்படியும் சில உறவுகளா!...........
இருவகைப் பெண்கள்
இவ் உலகினில் நாங்கள்
உன்னிடம் எத்தனை
அடக்கமெடி...!!!
புலம்பெயர் மண்ணில்
பூவே நீ இருப்பது உந்தன்
பொறுமைக்கு என்றும்
களங்கமெடி...
தங்கச் சிலையென இங்கே வந்தவளே
என் முன் தலை குனிந்து
நிற்பவளே
ஆடவர் கண்டால் தீண்டிடத்
தூண்டும்
அழகிய உருவம் உன் உருவமெடி
அயலவர் எவரோ வசிக்கும்
இடத்தில்
தனிமை என்றும் உனக்கு
ஆகாது........
புறப்படு பெண்ணே உன் தாய் நாடு
அதுவே உன் பெண்மைக்கு உகந்த
நன்னாடு
எவனோ இங்கு அழைத்தான் என்று
ஏற்றுமதிப் பொருள்போல் வந்தாயே
நீ பிறந்த நாட்டில் இல்லாத
துணையா
புலம்பெயர் நாட்டினில் தேடி வந்தாய்
......!!!
முன்பின் தெரியா உறவை மணந்து
உன் வாழ்க்கை இங்கே
சிதைவதற்குள்
நிட்சயதார்த்தம் அகன்றதென்று
நீயே புறப்பட்டு சென்றுவிடு
-இல்லையேல்
காசைக் காட்டி மோசம் செய்யும்
கயவர்கள் நிறைந்த இவ்வுலகில்
அந்த மோசக்காறனின் வலையில்
விழுந்தால்
முற்றிலும் உன்னை நீ இழப்பாய்
.......பின்
நீ கற்ற கல்விக்கும் பயனில்லை
இங்கே
உன்னைக் காக்க ஒரு உறவுமில்லை
மொத்தத்தில் மூலையில் முடங்கிக்
கிடந்து
முள் மீது விழுந்த செலைபோல் உன்
வாழ்க்கை
அன்றாடம் கிழிந்து அலங்கோலப்
படுவதற்குள்
சட்டென விலகு இந்தச் சகதியை
விட்டு
சகலரும் இச்செய்தியை
அறியும்முன்னே
விமானப் பற்றுச் சீட்டு அதை நான்
தருகின்றேன்
விடியும்முன்னே புறப்பட்டுவிடு உன் தாய்
நாடு.....
வாசகர்களே இதைக்கொஞ்சம் கேளுங்கள்......
கற்பனை வாழ்க்கை மெத்திவிட்டது!...
கைவிரல்நடுவே எழுத்தாணி சிக்கிவிட்டது!..
நித்திரைபோய் நினைப்பெல்லாம் கவிதையானது!...
அந்த நீலகண்டனின் குழலோசையில்
மாடுகள் மயங்கிய மயக்கம் என்னமோ
அதை நாளும் பொழுதும் நான் உணர்தல் என்ன நியாயமோ!..
கேளுங்கள் உறவுகளே இதைக்கொஞ்சம் கேளுங்கள்
வலைத்தளம் வந்துதித்ததுதான் நான் செய்த தவறோ..
வாசகரே என்னை மறந்து செல்வது யார் செய்த தவறோ
கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்தெறிந்த காகித இதழ்களும்
இந்தச் சிறுக்கி மனதைச் சீண்டிப் பார்ப்பதும்
கருத்துப்பெட்டியில் என் கவனம் தொலைந்து போனதும்
அடுத்த இடுக்கை இடும் நினைப்பில் என் அழகிய
இரவும் பகலும் மறந்து போனதும் இவையாவும்
யார் செய்த தவறோ!......... யார் செய்த தவறோ!....
மழையில் நனைகின்றேன் குடையிருந்தும் என் கைகளிலே
வெய்யிலில் காய்கிறேன் மர நிழலிருந்தும் என் அருகினிலே
சிலையாய் நிற்க்கின்றேன் வாகனங்கள் ஓடும்
நடுத்தெருவினிலே
கலகம் புரிகிறதே இலக்கணமும் இலக்கியமும் என் நெஞ்சுக்குள்ளே!....
இப்படி உலக்கைக்கும் உரலுக்கும் நடுவினிலேவைத்து
இடித்துப் புடைத்த நெல்மணிபோல்ப் பிறந்த என் கவிதைகளைத்
தினமும் கண்டு இரசிக்கும் என் இனிய தமிழ்த்தாய் உறவுகளே
என் தொண்டைக்குழியில் அகப்பட்டிருக்கும் இத்துயர்போக்க
மருந்தொன்று சொல்கின்றேன் மறவாமல் வந்து தினமும்
இந்தக் கவிதை விருதுகளைத் தக்க காலத்தில் சுவையுங்கள்
மனசு நிறைந்ததும் இவைகளை மனசார வாழ்த்துங்கள் உறவுகளே...
மனசார வாழ்த்துங்கள்- புதுப் பதிவர்களின் மனசும் குளிரும் வண்ணம்!...
(இன்றைய ஆப்பு இது எப்பிடி
இருக்கு?....இது என்னோட வருத்தம்
மட்டும் இல்லீங்க என்ன மாதிரி நிறையப்பேர் இருக்குறாங்க. இதை
மறந்திராதீங்க. பாவம் புதுப் பதிவர்கள் அவங்களுக்கு உங்கள விட்டா
யார்
இருக்குறாங்க?.ஒரு பதிவுக்கு ஓராயிரம் கருத்துப் போடும் உறவுகளே
அதில் ஒரு கருத்தை இவர்களுக்கும் போடுங்க.
நான் சொல்லுறது தப்பாக
இருந்தால் மன்னித்து விடுங்கள் மன்னித்து விடுங்கள்........................)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக