Listen 3D Quality

புதன், 16 மே, 2012

செவ்வக நிலா



ஞாயிறு, 13 மே, 2012

செவ்வக நிலா

,

காதலி


ஐந்தரை அடியில்
படுத்து இருக்கிறது
செவ்வக நிலா


தீராமல் தவிக்கும் குரல்


எங்கிருந்தோ தீராமல்
தவிக்கும் பறவையின் குரலாய்
அலைகிறது உன்
நினைவுகள்


தொலைந்து போகும் வாழ்க்கை



பிரிவின் கடைசி வினாடியில்....
உன் இயலாமையின்
ஆறுதலுக்கு தெரியாது
காமத்தின் எச்சங்களில்
தொலைந்து போகும் வாழ்க்கை என்று

உன் நினைவை அள்ளி உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்

,

நீ இல்லாத
பொழுதுகளின் வெம்மைகளில்
உன் நினைவை அள்ளி
உயிரெங்கும்
பூசிக்கொள்கிறேன்
உயிர்த்திருத்தலுக்கு
சகதியை தேடும் நண்டாய்

சனி, 21 ஏப்ரல், 2012

மௌனத்தை மொழிபெயர்க்கும் கருவி

,
வாழ்வின் தீராத
பக்கங்களில்
நிரம்பியிருக்கும்
நம் மௌனத்தின்
வார்த்தைகளை
மொழி பெயர்க்கும்
கருவி
காதல்

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

தோற்றபின்னும் தொடரும் காதல்.

,
காமமாகி கசிந்துருகி
விம்மி அடங்கும்
தருணங்களில்
எனை ஏமாற்றியதை
மறந்து போயிருப்பாய்……
எதிர்படும் விளம்பரபலகையில்
உன் பெயரை  
பார்த்து
அவஸ்தையுடன்
கடந்து போகையில் எங்கிருந்தோ
ஒலிக்கும் உனது
அலைபேசியின் அழைப்புமணி
பாடல்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

செல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்

,


தேர்தலில்
செல்லாத வாக்குகள்
மக்கள்

********************************************************
திருட்டு நளனுக்கு
குருட்டு தமயந்திகள்
மாலையிட்டனர்
மந்திரி
*****************************************************

ஐந்தாண்டு ஆட்டம்
இந்த முறையும்
ராஜா ராணிகள்
உனை வெட்டி
ஜெயித்திருப்பார்கள்
மீண்டும் நீ
தயாராவாய்
அடுத்த ஆட்டத்திற்கு

உயிரை உருக்கும் இரசாயனம்

,

கனவுகளை
நெசவு
செய்யச்சொல்லும்
உன்
பார்வைகள்
**********************************************************
உயிரை உருக்கும்
இரசாயனம்
உன்
நினைவுகள்
************************************************************
மௌனத்தில்
புதைந்திருக்கும்
அழுகையை கிழிக்கும்
கத்தியாய்
உன்
வார்தைகள்
*****************************************************


ஞாயிறு, 11 டிசம்பர், 2011

உயிர்கொல்லி ஆயுதம்

,

உன்னை
பார்துக்கொண்டுடிருக்கையில்
கிளம்பும் பேருந்துக்கு
தெரியாது.....
உன் கண்களை
கடைசியாய்
பார்பதென்பது
என்னை
நானே
சிலுவையில்
அறைந்து கொள்(ல்)வது என்று !

சனி, 10 டிசம்பர், 2011

உயிர்த்திருத்தல்

,

அந்தி சாயும்
பொழுதுகளில்
மெல்ல கவிழும்
தனிமையினூடே
வந்து சேரும்
இயலாமையின் பரிதவிப்புகள்
சொல்லிப்போகும்
உயிர்த்திருத்தல் 
தீராத பெரும் சோகமென்று

திங்கள், 31 அக்டோபர், 2011

உயிரோவியம்

,

உனக்கான
என் கவிதையை
எங்கோ
படித்த மாதிரி
இருக்கிறது என்கிறாய்  ….!
இல்லையடி இல்லை
பார்த்த மாதிரி
என்று சொல்
தினந்தோறும் கண்ணாடியில்
உன்னைதானே
பார்த்து கொள்கிறாய் ....!

வெள்ளி, 21 அக்டோபர், 2011

வழி தெரியா பயணங்கள்

,

சென்ற முறை
பேருந்தின் கூடவே
வந்தன 
மரங்களின் பசுமைகள்
இந்த முறையும் அவை வந்தன
கதவுகளும் , ஜன்னல்களுமாய் !

வெள்ளி, 14 அக்டோபர், 2011

Mr. பொதுஜனம்

,

அரசியல் சூதாடிகள்
ஒவ்வொரு ஆட்டத்திலும்
உன்னை
மையப்படுத்தியே
ஜெயிப்பார்கள்.....
நீதானே ஜோக்கர் !

சனி, 8 அக்டோபர், 2011

நடைவெளி ஞாபகங்கள்

,

தயங்கி தயங்கி
நீ
பார்கையில்.....
தயக்கங்களாய்
தவிக்கிறது
காதல் .

வியாழன், 6 அக்டோபர், 2011

தினை மயக்கம்

,

குற்றாலமாய்
குதித்து வந்த
உயிரெழுத்துகள்
உனை
பார்த பின் 
ஆயுத எழுத்தாயின

சனி, 1 அக்டோபர், 2011

விடையை தேடும் விசாரனை

,

இந்நேரம்
குட்டி போட்டுருக்குமா ?
தொலைந்து போன
புத்தகத்தில்
வைத்திருந்த
மயிலிறகு

புதன், 28 செப்டம்பர், 2011

ஆண்மையின் வலியறிதல்…

,

உன்னால்
கர்பம் தரித்த
நினைவுகளை
சுமக்கிறேன்
தினம் தினம்
பிரசவ வலியுடன்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

சொல்லுதல் யார்க்கும் எளியவாம் …..?

,

உன்னிடம்
பேச நினைத்த
வார்தைகளை
மௌனங்களுக்கு
தின்னக்கொடுத்து விட்டு
பேசாமலே
திரும்பி
வருவேன்.....
அடுத்த முறைக்குமான
ஆறுதல்களோடு .

புதன், 31 ஆகஸ்ட், 2011

வினாடியின் விபரீதம்

,

சாலையில்
சிதறியிருக்கும்
கண்ணாடி சிதறலுக்கிடையில்
தேங்கியிருக்கும்
இரத்தத்திலும்…….

ஓடி வந்தும்
கடைசி பேருந்தை
தவற விட்டவனின்
தவிப்பிலும்….
உறைந்துபோய் இருக்கிறது
வினாடியின் விபரீதம்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

வாசிக்க வாசிக்க தீராத வாக்கியம்

,
பருவங்கள்
வரவு வைத்து
செல்லும்
வசந்த கால பக்கங்களின்
வாசிக்க வாசிக்க........
தீராத வாக்கியம்
நீ

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சவ்வூடு பரவல்

,

என் வெட்கத்தின்
வேர்களில்
வெந்நீராய் 
உன் பார்வைகள்

புதன், 24 ஆகஸ்ட், 2011

பிழைப்பு

,

சாலையோரமாய்
மலையை குடையாக
பிடித்திருந்த
கண்ணனை
வரைந்து
கொண்டுயிருக்கின்றன
சூம்பி போன கரங்கள்
திடீரென
கனக்கிறது மழை  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக