கவிதை
விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்கள் ஆகிப்போச்சு! குடிநீருக்கும் விலை
கொடுக்கும் அவலம் வந்து போச்சு! பாசம் இங்கே அருகிப் போச்சு முதியோர் இல்லம்
பெருகிப் போச்சு! காட்டையெல்லாம் அழிச்சு மனுசப் பையன் பைகள் கரன்சியால் நிரம்பிப்
போச்சு! செல்ஃபோன் டவர் பெருக்கத்தினால சிட்டுக் குருவின்னா என்னான்னு நம்ம
சந்ததிக்கு தெரியாமலே ஆச்சு! ஆனா.. ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரனாகவும்
இருக்கும் நிலை மட்டும் நம்ம ஊரில் நிலைத்துப் போச்சு!
March 5, 2012 ரேகா
ராகவன் கவிதை,
வயிற்றில் பத்து மாதம் சுமந்து இரவு பகல் பாராமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து
பாலூட்டி,சோறூட்டி கையில்,மடியில்,தோளில் போட்டு வளர்த்த அன்னையை பிள்ளைகள்
பெரியவர்கள் ஆனதும் அண்ணன் வீட்டில் ஒரு மாதம் தம்பி வீட்டில் ஒரு மாதம் என்று
பந்தாடும் விளையாட்டு பிற்காலத்தில் அவர்களை வைத்தே விளையாடப்படும் பார்த்துக்
கொண்டிருக்கும் பேரன்களால் என்பதை மறந்ததேனோ?
என்னைக் கைது செய்யுங்கள்! அரசே! கைது செய்யுங்கள்! அரசே! என்னைக் கைது
செய்யுங்கள்! ஆசிரியரை வகுப்பறையில் குத்திக் கொன்ற வழக்கில் – அரசே! என்னைக் கைது
செய்யுங்கள்! நான் என்ன செய்தேன் என்றா கேட்கிறீர்கள்? மௌனமாக இருந்தேனே? மௌனம்
சம்மதத்திற்கு அறிகுறிதானே? வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க வழியில்லாமல், மனப்பாடம்
செய்யும் மதிப்பெண்ணுக்கே மதிப்புக் கொடுத்து, அவன் நெஞ்சை நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா? என்னைக் கைது செய்யுங்கள்! அரசே! என்னைக் கைது
செய்யுங்கள்! முப்பது ரூபாய் கொடுத்து வாங்க [...]
February 6, 2012 Guest Writer கவிதை,
இரவுகளை உறங்கவைத்து கதிரவனை எழுப்பிவிட்டு பேசிக் கொண்டிருந்தோம்
நாம் மட்டும்! தெரிந்ததும்… தெரியாததும்… புரிந்ததும்… புரியாததும்… சிலநேரம் உளறல்
சிலநேரம் கொஞ்சல் சிலநேரம் கோபம் சிலநேரம் மவுனம்… உயிரோடிருந்த தொலைக்காட்சியும்
எட்டிப் பார்த்த ட்விட்டரும் சொல்லின உலகச் செய்தியை… நமக்கோ அவை யாவும்
வேற்று கிரகச் செய்தியாய்! பசி மறந்தோம் உறக்கம் துறந்தோம் நம்மை மறந்தோம் நாம்
ஆனோம்! ஆம்…’நாம்’ ஆனோம்! – ஆர். சிவக்குமார்
January 26, 2012 ரேகா ராகவன் கவிதை,
வந்ததோ… தூரத்தே மணியோசை! ஆடி அசைந்து வருகிறதோ பாகனுடன் யானை? பார்த்ததுமே
பரவசத்தில் துள்ளிக் குதிப்பானே குழந்தை! அவசரமாய் அவனை தோளில் அணைத்துக் கொண்டு
தெரு முனைக்குப் போனால்… மணியோசையுடன் வந்து கொண்டிருந்தது பஞ்சு மிட்டாய் வண்டி!
இம்முறையேனும்… வருவாயெனக் காத்திருந்தேன் நீயோ வரவேயில்லை! வந்த போது நான்
உன்னைத் தவிர்த்தது தவறுதான் மன்னித்துவிடு! மீண்டும் நீ வருவாயா என்று
துக்கத்துடன் காத்திருக்கிறேன்! இம்முறை ஏமாற்றாதே வா.. வா..வந்துவிடு… என் இனிய
தூக்கமே!
என் சாலைகள் உன் துணையின்றி நீள்கின்றன என் நாட்கள் உன் வழி பார்த்து விடிகின்றன
என் இரவுகள் உன் அணைப்பின்றி கழிகின்றன என் சுவாசம் உன் வாசமின்றி வாடுகிறது என்
கண்கள் உன் பிம்பம் காணாமல் கண்ணீரைப் பொழிகின்றன என் இந்த நீண்ட காத்திருத்தல்
எப்போது முடிவுக்கு வரும்? என் காதல் எப்போது உன் மெய் சேரும்? இனியொரு ஜென்மம்
உண்டென்றாலும் அதில் உன் துணையாகும் வரம் வேண்டும்.
இப்படிக்கு
காதலன்றி வேறறியாத உன் [...]
January 9, 2012 Guest Writer கவிதை,
முள் சன்னலின் வெளியே.. பசிக்கழும் குழந்தை பார்த்துக்கொண்டே விழுங்கிய உணவு
தொண்டையில் முள்ளாய் …! பால பாடம் உன் முடி சாமிக்கு என்றதும் என் முடி சாமிக்கு
எப்படி பத்தும் கேட்ட மழலை ஊமையாக்கி கற்றுக்கொடுத்தது ப(பா )ல பாடம். –
உமாகிருஷ் Twitter : @umakrishh
January 6, 2012 Guest Writer கவிதை,
பத்து மாதங்கள் கருவறையில் சிறை வைத்ததும் பெண் ! காதல் என்னும்
விழித்திரையில் சிறை வைத்ததும் பெண் ! மனைவி என்னும் மந்திரத்துக்குள் சிறை
வைத்ததும் பெண் ! மகள் என்னும் பாசத்திற்குள் சிறை வைத்ததும் பெண் ! இத்தனை
சிறைகள் வைத்த பெண்ணே உனக்கு நான் சிறை வைக்கவா? இல்லை சிலை வைக்கவா?
– கல்பனா அனந்தராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக