ஒவ்வொறு நிமிடமும்
வலிகள்
கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!
என் காதல் காலங்கள்...!
விரைவில் விடியாத
சில
ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...
இரவோடு போரிட்டு
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
ஒருபோதும..!
அவள் மீதான காதலை
அதிகப்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்
என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!
என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!
சொல்ல முடியாத என்
காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!
வலிகளைப்போக்கும்
ஒரு
சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறேன்
அது என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!
அது என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!
March 15, 2012
தள்ளிப்போகிறது என் தற்கொலை...!
இன்னுமொறு
வேலை இல்லையென...
சாப்பிட உட்காரும் போதெல்லாம்
சித்தி பரிமாறுகிறார்
சாதத்தோடு சில சவுக்கடிகள்...!
சாயங்காலம் வீடு
திரும்புகையில்
என்மீது
அப்பா பொழியும்
அமிலத்தில்
நனைத்த வார்த்தைகளை
தவிர்த்துவிடவும்...!
தவிர்த்துவிடவும்...!
எதிர்பார்த்தே நடத்தும் சமூகம்
எப்போதும் ஏமாற்றத்தையே
திருப்பிக்கொடுக்கும்
போதும்...!
வலிகொண்டு மனம்துடிக்கும்
ஒவ்வொறு
சந்தர்ப்பங்களில் முயற்சித்தும்
தோற்றுதான்
போகிறது
என் தற்கொலை...
என் தற்கொலை...
ஆதரவற்று தனித்திருக்கும்
என் அம்மாவுக்காக....!
கவிதை கரு : சமூகம்
படங்கள் : கூகுள்
February 14, 2012
ஏங்க காதலிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கு...?
நிசப்தமான
வேளைகளில்
வெயிற்கால
மூங்கில்கள் போல்..
என்னை
கேட்காமலே பற்றிக் கொள்கிறது
அவளின்
நினைவுகள்...!
***********************************************************
ஒவ்வொறு முறையும்
சகுனம்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!
காதல்
என்பது
அனைத்துக்கும்
அப்பாற்பட்டது என்று அறியாமல்...!
***********************************************************
புரிதலின் இடைவெளியில்
நீயும்
நானும்
பயணித்துக்
கொண்டிருக்கிறோம்..!
இன்னும்
பூப்பெய்தாமல் இருக்கிறது
உன்னை
தரிசிக்காத
என்
கவிதைகள்...!
***********************************************************
கைகளில் நடுக்கம்
மனதில்
ஒரு தயக்கம்
கண்களில் ஒரு கலக்கம்
கண்களில் ஒரு கலக்கம்
காதலிக்கு
ஒரு கடிதம் எழுத
ஒரு கடிதம் எழுத
இவ்வளவு
வேதனையா..?
ஏங்க காதலிக்கிறது
இவ்வளவு
கடினமாக இருக்குது..
***********************************************************
உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்
எனக்கான
உன் காதலை
முன்பாக
சொல்லிவிடுகிறது
உன் கண்கள்...!
உன் கண்கள்...!
***********************************************************
காற்று இல்லாமல் சுவாசிக்க
பழகிக்கொண்டேன்...!
காதல் இல்லாமல் சுவாசிக்க
எப்போது பழகப்போகிறேனோ..!
***********************************************************
நண்பர்களுக்கு வணக்கம்...!
இந்த தினத்தை மகிழ்ச்சியை காதலில் இருந்து விலக்கி
அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.
இந்த தினத்தை மகிழ்ச்சியை காதலில் இருந்து விலக்கி
அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.
February 8, 2012
எதிர்பாராமல் நிகழ்ந்து விடுகிறது இப்படியெல்லாம்...!
ஒவ்வோறு நாளும்
எதிர்பார்க்காமல்
நிகழ்ந்து
விடுகிறது இப்படி..
என்னவளை
சந்திக்கலாம்
என்றிருந்த
நாட்களிலெல்லாம்...
சாலையோராமாய்
என்னை ஒதுங்க வைத்து விடுகிறது
என்னை ஒதுங்க வைத்து விடுகிறது
திடிரென
பெய்யும் மழை...
தேடும் போது
எதிர்படும்
தெரிந்தவர்களின்
பேச்சுத்
தொல்லை...
என்றைக்குமே இல்லாமல்
அன்று மட்டும் அவளின்
அன்று மட்டும் அவளின்
முகம்
மறைக்கும் வண்ணக்குடை...
இதுமட்டுமின்றி வேகமாய்
துடிக்கும்
என்
கடிகாரத்திடம்
“நேரம்
எவ்வளவு என்று”
நலம்
விசாரிக்கும் யாரோ ஒருவர்..!
அடிமனதில் ஒரு
அதிர்ச்சி
எதிர்பாராமல் வந்துவிட்ட
எதிர்பாராமல் வந்துவிட்ட
கிண்டலடிக்கும்
என் நண்பர் ஒருவர்...
இதுபோன்று பல..
பல...
ஆனால்...!
நான்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அவளின் முகம் மட்டும்
என் கண்களுக்கு அகப்படாமல்
அவளின் முகம் மட்டும்
என் கண்களுக்கு அகப்படாமல்
இன்னும்
தூரமாய்....!
January 9, 2012
அதனதன் குணம் அப்படி...! என்ன செய்வது...!
மயக்கும் மாலைப் பொழுது
சுடர்விடும் சூரியன்...
மௌனமாயிருக்கும்...!
கண்ணுக்கு புலப்படாது
நம்
இதயம்தொடும் காற்று...
சலசலத்துக்
கொண்டிருக்கும்...!
பறவைகள் கொஞ்சியாட
தன் கிளைவழியாய் மரம்...
தன் கிளைவழியாய் மரம்...
சாமரம்
வீசும்...!
வண்ணத்தால் மொழிபேசி
கவிதையாய்
வாசம் வீச...
செடி
பூத்து வைக்கும்...!
பூமியில் உயிர்கொண்ட
மானுடத்தை ஒரு முறையேனும்...
காதல் இம்சிக்கும்...!
என்ன செய்ய
அதனதன் குணம் அப்படி...!
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி...!
January 5, 2012
சுத்தமும், அமைதியுமே எனக்கு நரகம்...!
வாசல் முழுக்க
சிதறிக்கிடந்தது
ஒடித்து
எறியப்பட்ட
செடிக்கொடிகள்...!
சுண்ணாம்பு பூசிய
வீட்டுச்சுவரில்
அடுப்புக்கரியால்
அழகற்ற
கிறுக்கல்கள்...!
வீட்டின் கூடம், முற்றம்
என
எங்குபார்ப்பினும்
கிழித்து எறியப்பட்ட
புத்தகக்
கிழிசல்கள்...!
மூக்கை உறிஞ்சி...
சிரித்து...
அழுது....
சண்டையிட்டு
விளையாடிய
குழந்தைகளை
பார்க்க சகியாமல் திரும்பினேன்....
வீடுமுழுக்க சுத்தமும்
அறைகள்
தோறும் அமைதியுமே...
நரகமாய்
இருந்தது...!
குழந்தைகள் இல்லாத
என்வீடு...!
தங்கள்
வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!
December 27, 2011
என் காதலிக்கு கல்யாணம்....
காந்தக் கண்களால்
என்
கனவுகளை கலைத்து
சிரமம்
இல்லாமல்
சிறகடித்துச்
சென்றவளே...
மௌனம் கொண்டு யுத்தம் செய்தவள் -
நீ
காதல்
கொண்டு காயம் செய்தவள்...
உன் முள் கூட்டில் நான்
மெத்தையானேன்
வசந்தம்
தேடி நீ எந்த வானேறினாயோ...
மாற்றிய மாலையில்
என்
மனதை நசுங்கவைத்து
அம்மி
மிதித்தவளே...!
நீ கனிந்த சிரிப்போடு
போகிறாய்
நான்
கண்களால் சிரப்பூஞ்சி ஆகி்றேன்...
மனமெல்லாம் சகதியை
வைத்துக்கொண்டு
குளத்து
தாமரைப்போல் சிரித்தவளே..!
மரம் கொத்திக்கும் உனக்கும்
என்னடி
வித்தியாசம்
அது
மரம் கொத்திவிட்டு போகிறது...
நீ
மனம் கொத்திவிட்டு போகிறாய்...
பிஞ்சி மொழிபேசி
என்
பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்தவளே...
இன்று மட்டும் ஏன்
பிரிவு
என்னும் புழுதி கிளப்பி
என்
நூற்றாண்டுகளை மூழ்கடிக்கிறாய்...
ஓடும் நதி
மலர்
செறியும் மரங்களோடு
காதல்
புரிந்துவிட்டு
கடலுக்குள்
சங்கமிப்பது போல்
எந்த
கடலுக்குள் கரைந்துப்போனாயோ...!
தென்றல் வந்து
உன்னை
தட்டி எழுப்பி
என்
நினைவுகளை
ஞாபகம்
படுத்தும் போதெல்லாம்
நீ... நிச்சயம் உணர்வாய்
நதி
வழியோ
பூக்கள்
சுமந்து வரும்
என்
கண்கள் சிந்திய உப்பின் படிமங்களை...
(Re-Post)
December 26, 2011
உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்..!
சூடிக்
கொண்டவளே..
இந்நேரம்
என்
காம்பின் கண்ணீரைப்
பக்கத்து
பூக்கள் துடைத்திருக்கும்..
அழுது
கொண்டிருக்கும்
என்னை
தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல்
சொல்லியிருக்கும்
அரும்புகள்...
வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து
போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...
தலைகோத வந்து
நான்
இல்லாத இடத்தை தடவிப்பார்த்து
தவித்திருக்கும் தென்றல்...
தவித்திருக்கும் தென்றல்...
வெடுக் கொன்று பறித்த
உன்
விரல்களுக்கு தெரியாது
என்
வலி...!
வலித்துக் கொண்டே
December 20, 2011
யாரும் வெளியே செல்லக்கூடாது.. ! அம்மாவின் அதிரடி உத்தரவு...!
பூமியில் வர்ணஜாலம் செய்தது
திரண்ட
வந்த மேகம்...!
அன்னையின் உத்தரவு
மழை
பெய்துகொண்டிருக்கிறது
யாரும்
வெளியில் போக கூடாதென்று..!
December 15, 2011
என்ன செய்யலாம் இந்த உலகை...?
நம்பிக்கை ஒன்றே என்
மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
மழுங்காமல்
இருக்கிறது..!
விதிவசம் அகப்பட்டு
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
விடியும் ஒவ்வொறு
நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!
நம்பித்தான்
வாழ்ந்துக்
கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...
என்வீட்டில்...
தற்போது
வீட்டுக்குள்ளே
கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத
என் வீட்டில் நம்பிக்கையில்லாத
குருவி
ஒன்று...!
December 8, 2011
பதிவர்களே... ! இவைகளை விட்டு நாம் வெளியில் வரவேண்டும்...
பூக்களோடு
சேர்ந்து
பரவசப்படுவதை விடுத்து
முட்களோடு மட்டுமே
சமரசம் செய்து கொண்டிருக்கிறோம்...!
தென்றலோடு கைகோர்த்து
திளைத்த நாட்களை விட
புழுதிகளோடு புழுங்கிய
பொழுதுகளே இங்கு அதிகம்...!
நிகழ்கால நொடிகளுக்குள்
இருப்புக்கொள்ளாமல்
எதிர்கால இருட்டுக்குள்
பயணப்பட்டே பழகிவிட்டோம்...!
இன்பங்களை தேடுவதாக எண்ணி
நாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பது
ஆசை என்ற நதிவழியே...
துன்பம் என்ற கடலை நோக்கியே...
ஒவ்வொறு நொடியும்
நம்மைச்சுற்றியே நகர்கிறது வாழ்க்கை
நாம்தான் நம்மைச்சுற்றியே
பார்ப்பதில்லையே..!
அன்பு காட்ட
மனங்கள் இருக்கிறது நம்மில்..!
இனி இன்பம் பகிர
இன்முகம் போதுமே...
கண்களை மூடிக்கொண்டு
காய்களை பறிப்பதைவிட்டு
பழங்களோடு மட்டுமே
பரிபாஷனம் செய்வோம்..
பரவசப்படுவதை விடுத்து
முட்களோடு மட்டுமே
சமரசம் செய்து கொண்டிருக்கிறோம்...!
தென்றலோடு கைகோர்த்து
திளைத்த நாட்களை விட
புழுதிகளோடு புழுங்கிய
பொழுதுகளே இங்கு அதிகம்...!
நிகழ்கால நொடிகளுக்குள்
இருப்புக்கொள்ளாமல்
எதிர்கால இருட்டுக்குள்
பயணப்பட்டே பழகிவிட்டோம்...!
இன்பங்களை தேடுவதாக எண்ணி
நாம் பயணப்பட்டுக் கொண்டிருப்பது
ஆசை என்ற நதிவழியே...
துன்பம் என்ற கடலை நோக்கியே...
ஒவ்வொறு நொடியும்
நம்மைச்சுற்றியே நகர்கிறது வாழ்க்கை
நாம்தான் நம்மைச்சுற்றியே
பார்ப்பதில்லையே..!
அன்பு காட்ட
மனங்கள் இருக்கிறது நம்மில்..!
இனி இன்பம் பகிர
இன்முகம் போதுமே...
கண்களை மூடிக்கொண்டு
காய்களை பறிப்பதைவிட்டு
பழங்களோடு மட்டுமே
பரிபாஷனம் செய்வோம்..
இனி வம்பு வார்த்தைகளை
அழித்துவிட்டு
நம்மை அன்பு வார்த்தைகளால்
நம்மை அன்பு வார்த்தைகளால்
அழகுபடுத்திக்கொள்வோம்...
மையக்குறள் :
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக்
காய்கவர்ந் தற்று.
(அறத்துப்பால்
குறள் 100 - இனியவைகூறல்)
பொருள் : இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டு, கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது
தங்கள்
வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...!
December 4, 2011
விஜயின் நண்பன் படம் வெற்றியா..? தோல்வியா..?
உலகம்
வெப்ப
மயமாகிறதாம்...!
செவ்வாயில்
தண்ணீர்
இல்லையாம்..!
பணமதிப்பு
குறைந்து
கொண்டு போகிறதாம்...!
தங்கத்தின்
விலையானது
உச்சத்தில் இருக்கிறதாம்..!
பேருந்து
கட்டணம்
அதிகபடுத்தியதில் கவலையாம்...!
காய்கறிகள்
விலையேற்றத்தின் விளைவாய் போராட்டங்கள்..!
விஜயின்
நண்பன் படம் வெற்றியா? தோல்வியா?
கச்சா எண்ணெய்
விலையில் நிலையில்லாமல் இருக்கிறதாம்..!
இதையெல்லாம் விடுத்து
அன்பே... எப்போதும்...
உன்னைப்பற்றிய கவலைதான் எனக்கு...!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..!
December 2, 2011
தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க இந்த வழியை பின்பற்றலாம்..!
உன் நினைவு
எப்போதெல்லாம்
பொழிகிறதோ!
அப்போதெல்லாம்
முளைத்த
காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!
மனதோடு புதைந்த காதலை
விழிவழியாய்
சொல்ல
நினைக்கையில்...
முடியாமல்
போகிறது
முன்பே
சுரந்துவிட்ட
கண்ணீரால்..!
கத்தியின்றி ரத்தமின்றி
ஒரு
மரணம்..!
யுத்தமின்றி
சப்தமின்றி
ஒரு
வன்முறை..!
உன்
மௌனத்தால்..!
காதல் தொடங்கியபோது
அரை
கவிஞன் ஆனேன்..!
காதல்
முடிந்த போது
முழு
கவிஞனாகிவிட்டேன்..!
தமிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார்
சொன்னது...
அதோ
...!
அவளை
உச்சரிக்க விடுங்கள்..!
சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல்
போயிருக்கலாம்
ஆனால்,
காதலை
யாரும்
சபித்தது
கிடையாது..
எட்டவில்லையென்றாலும்
இது
இனிக்கின்ற பழமே...!
சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல
முடிவதில்லை...!
எழுதத்
தெரிந்தாலும்
எழுத
முடிவதில்லை..!
தொண்டையில்
சிக்கிய முள்போல்
உள்ளே
செல்ல முடியாமலும்
வெளியில்
வரமுடியாமலும்
தவிக்கிறது
என் காதல்..!
வீசிய
வலையில் சிக்கிய படங்களுடன்
என் காதல் கவிதைகள்...!
என் காதல் கவிதைகள்...!
November 30, 2011
இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?
வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!
November 29, 2011
அதெப்படி... ? பெண்களுக்கு இந்த இரண்டு மட்டும் பிடித்திருக்கிறது...?
நான் சொல்லும்
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!
உண்மையை விட
“பொய்” க்குத்தான் மயங்கி நிற்கிறாய்...!
பகலை விட
இருளில்தான்
உன்
வெட்கங்களை
கழட்டி வைக்கிறாய்...!
அது எப்படி...!
உனக்கு
பொய்யும் இருட்டும் மட்டுமே
பிடித்திருக்கிறது...
சரியென்று சொல்
என்
அன்பே...
உனக்காக
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....
பொய்யை மட்டுமே வைத்து
கவிதை எழுதுகிறேன்....
பகலில் கூட
தங்கள் வருகைக்காக
பெருமையடைகிறது கவிதை வீதி...
November 23, 2011
நான் ஒத்துக்கொள்கிறேன்.. என் கவிதைகள் அனைத்தும் இங்கிருந்தே எடுக்கப்படுகிறது..!
வாடிப்போன பூக்களை
அவள்
கூந்தலிலிருந்து களையும் போது
அறுந்து
போகும் அந்த ஒற்றை முடி...!
அவள்
சாப்பிடும்போது
சிதறி
கீழே விழும்
சில
சோற்றுப் பருக்கைகள்...!
அவள் நடந்துபோக
கூந்தலில்
இருந்து உதிரும்
ரோஜா
இதழ்கள்...!
அவள் பேசும் போது
ஒட்டித்திறக்கும்
அந்த
பொன்னிதழ்கள்...!
அவளின் ஸ்பரிசத்தை
தடவிப்பார்க்கும்
அந்த கடைசி
மழைத்
துளிகள்...!
அவளின் கால்கள் மோதி
அவிழ்ந்து
கிடக்கும்
அந்த
கொலுசு சலங்கைகள்...!
இவற்றையெல்லாம் விட
அவள்
நடக்கும்போது
வீதிகளில்
படியும் அழகிய
காலடித்தடங்கள்...!
இவையெல்லாம்
அவள்
எனக்காக விட்டுச்செல்லும்
புதுக்கவிதைகள்...!
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி..!
November 21, 2011
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...?
பூக்களை அறுப்பது
பாவம்
என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?
கோயிலுக்கு செல்கையில்
சப்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
காலில் கொலுசு அணிந்து செல்கிறாய்...!
இது எப்படி நியாயம்...?
கடவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?
இரவு வான்நிலவை
அதிகம் நேசிப்பேன் என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிவிடுகிறாய்..!
இது எப்படி நியாயம்..?
கவிதை எனக்கு பிடிக்கும் என்று
கண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?
காதல் தவறு என்று
எனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?
படங்கள் :
நண்பர் இளையராஜாவின் ஓவியங்கள்
வருகைப்புரிந்த
அனைவருக்கும் என் நன்றிகள்...!
November 16, 2011
உடனே நிறுத்திவிடு உன் கருணைக்கொலையை...
பாவம் அவர்கள்
பக்கத்து
வீட்டில் பூத்த
ரோஜாவை
அதிசயிக்கிறார்கள்...
இங்கே
ஒரு பூ
பேசுகிறது
என்று தெரியாமல்...
வார்த்தைகள் வசமிருந்தும்
என்
காதலிக்காக
ஒரு
“காதல் கவிதை” கூட எழுதவில்லை
அவளுக்கு
“கவிதை” பிடிக்காது....
காதலைச் சொல்ல
நானும்
தயங்கிக்கொண்டிருந்தேன்...
நீயும்
தயங்கிக்கொண்டிருந்தாய்..
பிறகு
எப்படி தெரிந்தது
ஊராருக்கு
மட்டும்...
எதையாவது இழந்து
எதையாவது
கொடு என்றாள்..
நேரத்தை
வீணடித்து
நேர்த்தியாய்
ஒரு கவிதை தந்தேன்....
உன்னால் மட்டும் எப்படி
முடிகிறது
தூரத்தில்
இருந்தே கொல்வதற்கு...
உன்னிடம் இருந்துதான்
தெரிந்துக்கொண்டேன்
காதல் கூட நோய்தான் என்று...
என் இனிய கொடியவளே
என்னோடு நிறுத்திவிடு
உன் கருணைகொலையை...!
கூகிலில் கிடைத்த படங்களுடன் என் காதல் கவிதைகளும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக