விலை ஏற்றம் - சில நன்மைகள்!!
தமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால்
மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும்
இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்..
இதோ சில நன்மைகள்.
பால் விலையேற்றம்
- நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.
- சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.
எரிபொருள் விலையேற்றம்
- வாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
- வாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.
மின்சார விலையேற்றம்
காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.
மக்கள் தொகை குறையும்
- வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.
புரிதல்
- அரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..
- இந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்...
- இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
சில்லறைத் தட்டுப்பாடு குறையும்
கடைக்காரர் - 6 ரூபாய்
நம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..
கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!
எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..
அட!!
ஏம்பா புலம்பறீ்ங்க..
எல்லாத்தையுமே அரசு ஒரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக