Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

பெண்ணின் மௌனம்


பெண்ணின் மௌனம்


மீன்களின் கண்ணீரை 
       எவராலும் உணர முடியாது.
கல்லிலிருந்து கசியும் நீரை 
      கண்க்களால் காண இயலாது.
தண்ணீரில் எழுதிய எழுத்தை
       பதிக்க இயலாது.
கற்பூரத்தை காற்றால் 
       கரைக்க முடியாது.
நிலவின் முதுகு ரகசியத்தை
       அறிய இயலாது.


அதுபோல் தான்,
         பெண்களின் மௌனத்தை 
                   எவராலும் உணர முடியாது.
         உணர முடியாதவன் காதலன்.
         உணர முடிந்தவன் கணவன்.
       

காதல் வலி


தந்தையின் தோள்,
தாயின் பரிவு,
அக்காவின் ஆறுதல்,
நண்பர்களின் தேற்றல்,
நட்புறவாடும் தோழி,
மெல்லியதோர் ஆறுதல் சொல்லும் இயற்கை காற்று,
காற்றோடையில் கலந்து வரும் பூக்களின் வாசம்,




இவையனைத்தையும் விட்டு விட்டு ,
என்னை விட்டுச்சென்ற அவளை நினைத்து,


உருக்குலைந்து,
அழுதழுது கண்ணீர் வற்றி,
பாதை மாறி,
தினமும் மதிய வேண்டுமா ?




இவைகளுக்காக நான், என் காதலை எரிய துணிந்துவிட்டேன்.

இறுப்பதை வைத்து


மனிதனே,
ரோஜாவை கண்டு,அதை போல்
     வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
முட்களுக்கு நடுவில் தான் அது ,
      பிறந்தது என்பதை மறக்கிறாய்.


படர்ந்த அழகிய மேகமாய் ,
      வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
இடிக்கி நடுவில் தத்தளிக்கும்
      அதன் தன்மையை மறக்கிறாய்.


உறுதியான பாறையை போல்
      வாழ ஆசை படுகிறாய்,ஆனால்
சிற்பியின் உளியில் துர்கலாகும்,
      அதன் முடிவை மறக்கிறாய்.


மனிதனே,
     இருப்பதை வைத்து வாழ பழகு.
     உன் பிறப்பின் அதியாயத்தை புரிந்துகொள்.

ஈழம்

என் சகோதரர்கள் மண்ணில் 
        வீழ்ந்தனர் , எதற்காக ?
என் தோழர்கள் மண்ணோடு மண்ணாக
        புதைந்தனர் , எதற்காக ?
பச்சிளம் குழந்தைகள் கை கால்கள்
       துண்டாகபட்டன , எதற்காக ?


தமிழை பேசியதற்கா , தமிழை 
      நேசிததர்காக , தமிழை உச்சரிதத்தர்காக.


இப்பொழுது , பாரதியாரால் பாட இயலுமா ,
      " தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லட !"

மௌனம்


நீ சிந்திய கண்ணீரை கூட,
       கடலிலிருந்து எடுக்க முடியும்.
நீ விட்டு சென்ற ரோஜாவைக் கூட,
       பூந்தோடதில்லிருந்து எடுக்க முடியும்.
ஒரு குண்டூசியை வைத்துக்  கூட ,
       மாமலையை தகர்க்க முடியும்.
பிறவிக் குருடனுக்குக் கூட,
       வர்ணங்களை எடுத்துரைக்க முடியும்.


ஆனால்,
       உன் மௌனத்தை தினமும் கண்டு,
       என் வாழ்வை கடக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக