மதுரைத்தமிழனின் மனம் கவர்ந்த காதலி (காதல் அரிச்சுவடி)
என் மனைவி
காதலியாக இருந்த போது
அதிகாலையில்
நீ எழும் போது
சூரியன்
உதிப்பது போல அந்த காலை மலர்கிறது
ஆற்றில் நீ
குளிக்கும் போது
ஆறும் அழகாக
இருக்கிறது.
இரவில் நீ என்
கூட வெளிவரும் போது
நிலவும்
கூடவருவது போல இருக்கிறது
ஈரமாக நீ
பார்க்கும் பார்வை
என் கடும்
இதயத்தை மென்மையாக்குகிறது
உதடுகளால் நீ
இடும் முத்தம்
இனிப்பைவிட
இனிமையாக இருக்கிறது
ஊரில் நீ
இல்லாத போது
ஊரும் நரகமாக
இருக்கிறது
என் கூட நீ
இருக்கும் போது
இந்த உலகம்
சொர்க்கமாக இருக்கிறது
ஏக்கமாக நீ
பார்க்கும் போது
என் மனம்
வலிக்கிறது
ஐயமின்றி நீ
சிரிக்கும் போது
என்
ஐம்புலனும் சிலிர்க்கிறது
ஒருமையில் நீ
என்று என்னை அழைக்கும் போது
என் மனம்
குதுகலிக்கிறது
ஓர விழியில்
நீ என்னை பார்க்கும் போது
என் இதயம்
துள்ளி குதிக்கிறது
இப்படி
எல்லாம் மனசு சொல்லிச்சு... அப்ப இப்ப என்ன சொல்லுதுன்னுலாம் கேட்க கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக