Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்..!


உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்..!




வு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே..

ந்நேரம் 
என் காம்பின்  கண்ணீரைப் 
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
 
ழுது கொண்டிருக்கும் 
என்னை தாங்கிய காம்புகளுக்கு 
ஆறுதல் சொல்லியிருக்கும் 
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

லைகோத வந்து
நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து 
தவித்திருக்கும் தென்றல்...

வெடுக் கொன்று பறித்த 
உன் விரல்களுக்கு தெரியாது 
என் வலி...!

லித்துக் கொண்டே 
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...!


(Re-post)
என் கவிதை எதிர் பார்ப்பது உங்கள் கருத்தையே..
ஏதாவது சொல்லிட்டு போங்க

June 24, 2011

பிள்ளையார் தெரு கடைசி வீடு... - திரை விமர்சனம் அல்ல...


வானம் முட்டி 
தலைத் தேய்த்ததுண்டா...?
சிதறிய நட்சத்திரங்களை
தரையில் பார்த்ததுண்டா..?
நிகழ்ந்தது உன்னைப் பார்த்த போது..

வ்வளவு நேரம் என்றாலும்
உனக்காக காத்திருப்புகள் 
எனக்குள் சுகமானவையே...

னதோடு புதைந்த காதலை
வி‌ழிவ‌ழியாய் சொல்ல
நினைக்ககையில்
இமைகளுக்குள் தயக்கங்கள் வந்து 
தடைப்போடுகிறது...

விடிந்த ஒரு நாள்
சிறகு வளர்த்த குயில்போல்
எங்கோ சிறகடித்து விட்டாய்....

நீ சிந்திவிட்டுப்போன சில புன்னகைகள்...
நீ உதிர்த்து விட்டுப்போன சில ஞாபகங்கள்...
நீ பதித்து விட்டுப்போன சில தடையங்கள்...
என்னைச்சுற்றி சிதறிக்கிடக்கிறது..
 
ற்‌போது
உன் நினைவுகளை மட்டுமே சுமந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...

னக்கே தெரியாது 
வந்துவிட்ட காதலோடு நானும்...

ன்னை பிரிந்து வாடும்
அந்த பிள்ளையார் ‌கோயில் கடைசி வீடும்...


January 12, 2011

முடிவுரைதான் எப்போது...

து கற்பனைகள் ஓடும் நதிக்கரை
சோகங்கள் வாழும் துறைமுகம்
இதில் கரையேறிச் செல்லும் மேகங்களே
உங்கள் முகவரிகள் என்ன..?

மேகத்தின் கண்ணீர் அனைத்தும் தீர்ந்தப்பின்னும்
நிற்காமல் ஏன் அழுகிறது
எங்கள் கூரைகள்...

யற்காட்டு மரக்கிளையில்
பாடிவரும் குயிலினமே
மரம்கொத்தி தாளம் தட்ட
மலை அருவி வீணை இசைக்க
மாலையில் கடந்து வரும்
உன் மனச்சோகம்தான் என்ன..?
 
ழகிற்கிடையே ஒளிர்கின்ற முத்தே
உன்னை சுமந்தவளின் மரணத்தில்தான்
நீ மகத்துவம் பெருகிறாய்...
 
தயத்தை இதமாக்கும் முள்செடியே
இன்றைய கொள்முதல்
இந்த ஒற்றை ரோஜா தானா?

ரவினில் தலைச்சாயும்
மூங்கில் கிளையே நீயாவது
ராகம் இசை
இவைகளும் இல்லையேல்
என் இதய சோகங்களுக்கு
முடியுரைதான் எப்போது..
 
ஓ... பனித்துளியே நீயாவது
என் கவலைகளை நனைத்துவிட்டுப் போ
அவைகள் நாளை வரும் விடியலிலாவது
உலர்ந்துப் போகட்டும்...

January 6, 2011

அழிவதில்லை காதல்

நாங்கள் 
உயிரோடு இருந்தோம்
ஊரில் ஊமையாய் இருந்தது
எங்கள் காதல்...
 
நாங்கள் 
பிணமாகிப் போனோம்
பின்
உயிர் பெற்றுக்கொணடது
எங்கள் காதல்...
 
ஓ... உலகத்தீரே
நீங்கள் எல்லோரும் 
நல்லவர்கள் தான்
 
காதலர்களை கொள்கிறீர்களே தவிர
காதலை கொள்வதில்லை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக