Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

காதலியே


காதலியே


காதலியே உன்னை என் இதயம் 
    என்று சொல்ல மாட்டேன் ,
உன்னை துடிக்க விட்டு நான்
    வாழ விரும்பவில்லை !

வெறுப்பு


பெண்ணே,


கண்ணாடியை உடைக்கிறேன்.
தினமும்  நீ பார்க்கும் கண்ணாடியை,
நான் இல்லையென்று .


பூக்களை வெறுக்கிறேன்,
நீ சூடும் பூவாய் ,
நான் இல்லையென்று.


காலத்தை வெறுக்கிறேன்,
உனக்காக காத்திருக்கும் போது,
நேரம் மெதுவாய் நகரும்போது.


என் உயிரை வெறுக்கிறேன்,
உன் உயிரை வேறொருவன் பங்கிட்டபோது.

வாழ்வு


மனிதனே,
              நீ கடந்து வந்த பாதைகளை மறக்காதே,
             உன் துயரங்களை மறந்து,
             உன் பயணத்தை தொடரு.


            கஷ்டங்களையும் , தோல்விகளையும்
            ஊன்றுகோலாய் ஏற்று ,
            வெற்றிகளை அடைய முயற்சிசெய்.


           வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வழி நடத்து,
           என்னடா இவ்வழக்கை என்ற என்னத்தை தூக்கி எரி.


  ஏனெனில் ,
           இவ்வழ்வே ஒரு முறைதானடா.
           எறும்புக்கும் வாழ்கை உண்டு என்பதை மறவாதே.

முதியோர் இல்லம்


இறைவன் படைத்த உலகில் 
மனிதன் வாழ்கிறான்.
மனிதன் உருவாக்கிய சிலையில்
இறைவன் வாழ்கிறான்.


தந்தை கொடுத்த உயிரில்
தாயின் கருவறையில்
மனிதன் பிறக்கிறான்.
மனிதன் படைத்த முதியோர் இல்லத்தில்
பெற்றோர் வாழ்கின்றனர்.

தாய்


மெழுகுவர்த்தியின் கண்ணீரும் 
தாயின் வியர்வையும் ஒன்றே !


இரண்டும் மற்றவர்களுக்க்காகவே வாழ்கின்றன ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக