Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

விடியல் வேண்டி நடத்தும்...



16 ஏப்., 2012

விடியல் வேண்டி நடத்தும்...




















விடுதலை நோக்கிய பயணம்
விபரீதம் அறிந்த போதும்
விடியல் வேண்டி நடத்தும்...


மானம் காக்க போராட்டம் 
மரணம் கூட விரும்பும்
மனங்கள் கொண்ட இனம்


வாழ்க்கை முழுதும் துயரம்
இருந்தும் உரக்க சொல்லும்
வானம் தொடும் தூரம்.


விரும்பி ஏற்கும் குணம் 
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்
விடுதலை ஒன்றே மந்திரம்


எண்ணிய எண்ணம் நடக்க 
விடுதலை நோக்கிய பயணம்
விடியல் வேண்டி நடத்தும்...


இறந்த உறவுகள் எல்லாம் 
விதைகளாய் மாறியது என்றும்
மீண்டும் முளைக்கும்,தழைக்கும்
எங்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கும்...



15 ஏப்., 2012

விண்ணப்பித்தால்...






























வலிமைமிக்க 
இரு கைகள் இணைந்தால் 
இணைத்தால்...


நினைத்ததை முடிக்கலாம்
நினைப்பதை நடத்திக்காட்டலாம்.


விருப்பமுள்ளவர்கள் 
விண்ணப்பித்தால்
அப்துல் கலாமாய்
மாறலாம்...


புதிய 
களம் காணலாம்
வினைத்தொடலாம்...


தொட்டதை எல்லாம் 
வெற்றியாக்கலாம்.
இந்த வெற்றி  உணர்வாய் 
இணைந்த கைகளாய்
மனித நேயம் 
உன்னுடன் இருந்தால்...!


10 ஏப்., 2012

உன் கையை மூலதனமாக்கு...




தேவதையே!
உன் தேவைக்கு 
கை நீட்டும் நிலை 
மறந்தால் உணர்வாய்
உழைத்தால் உயர்வாய்!



தானம் வாங்குவதை 
அவமனாமாய் நினைத்து 
கையேந்தும் நிலை விட்டு 
உன் கையை மூலதனமாக்கு...


உன் விரல்களும் வழிச் சொல்லும்,
புது விடிகள் பிறக்கும்.
தடைகள் வரும் கவலை விடு,
விடைகள் அறிய விண்ணப்பமிடு!
நீயே உனக்கு ஏணி,
அறிந்தால் இல்லை வேலி!

8 ஏப்., 2012

தற்கொலைதான் விடையா ?


வாழ்க்கையை தொலைத்து 
வாழவே பிடிக்காமல் 
தன்னையே 
கொலை கொண்டவர்கள்,
கொள்பவர்கள் 
நம்மில் சிலர்.


இருப்பதை அறியாமல் 
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்
இறந்த கோழைகள்
இறந்தால்  என்ன


எலும்புகள் கூட 
உன் நிலை சொல்லும்,
வருங்காலம் 
உன்னை பார்த்து 
நகைக்கும், 


சதைப் போனபின் 
எலும்பானாய்...
வெறும் கூடனாய்...


பின் உன்னை கூட்டி 
வைத்துப் பார்த்தாலும்
பயம் தந்தாய்
பயனற்று போனாய் 



தற்கொலைதான் 
உனக்கு விடையா ?

அறுத்து அறுத்து 
பார்த்து தற்கொலைதான்
என்று சொல்வது தான் 
உன் நிலையா ?

6 பிப்., 2012

மனமே மந்திர சாவி.



மனம் பேச விரும்பும் போது
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,

எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்

மனமே மந்திர சாவி.

அறிந்து அதை திறப்பவனே
இவ்வுலகின் ஞானி...

23 ஜன., 2012

உள்ளத்தின் பதில் !



மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு 
பதில் வேண்டும்.
சொல்வாயா?

சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன்.

நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?

என் நண்பா
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி
இருப்பதை 
காணும் போதும்...

இறக்கும் போதும்
தொலைத்தப் போதும்
நீ உண்டாக்கிக்கொள்வது!

கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும்...

உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்...

வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேட்காமல்
நடக்கும்  போது
நீ உருவாக்கிக்கொள்வது.

இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது
உதவி செய்வதிலும்
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.

இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்...

என்னை நீ 
அறியவேண்டுமா...
உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்...

அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.
விடியல் பிறக்கும்.

என்னை நீ அறிவாய்
என்னை...
உள்ளம் 
என்பது தெளிவு
அறிவு 
என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ 
உணர்ந்து வாழு...!

19 ஜன., 2012

வெற்றி மாலை...




வாழும் போதே நீ அறிதல் வேண்டும் 
வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும்
வாழ்ந்தால் இவனை போல வாழ்ந்து மடியவேண்டும்

வாழ்ந்த பின் உன்  வரலாறு சொல்லவேண்டும்! 

ஊருக்கு என்றும் நீ பயன் படவேண்டும்
உண்மை சொல்லி வாழ்ந்திடவேண்டும்
அடுத்தடுத்து  இன்னல்கள் வந்தாலும்
தடுத்து,வெற்றியோட நீ வாழ வேண்டும்!

இருக்கும் காலம் உனக்கு கொஞ்சம் தான்
இன்னும் நீ கற்க,கடக்க வேண்டும்தான்
இருக்கும் வரை வாழ்க்கை போராட்டம் தான்!
இறக்கும் போதும் இன்னல்கள் வந்து சேரும்தான்!


நன்மை என்பது உன் நண்பன்தான்
நீ அழைத்தால் உடன் வருவான் தான்!
கைகள் களைப்பின்றி   தொடங்கும் வேலை
கழுத்துக்கு வந்து சேரும் வெற்றி மாலை

12 ஜன., 2012

உனக்குள்ளே இருக்கு!




வாழப் பிறந்தவனே
வாழ்ந்து பார்...
உலகம் பெரியது
உனக்கும் இடமுண்டு
தேடிப்பார்!

தேடலின் 
அருமை தெரியுமா
தேடும் போது 
அறிந்துக்கொள்வாய்

சிறு துளி விந்தியின் 
விடை நீ என்றால்,
தேடலியின் 
மகத்துவம் புரியும்

பிடிபடாமல் போகாது
பிரம்பஞ்சத்தின்
பிம்பம் நீ...

இடியே வந்தாலும் 
துவளாதே
இதுவும் கடந்துபோகும்.
காத்திருந்தால் 
புரிந்துபோகும் 

காதல் மட்டும் 
வாழ்க்கையில்லை
காசு மட்டும் 
உன் இலக்குயில்லை...

உலகில் இன்னுமிருக்கு
புரியும் உனக்கு
நீ கடக்கும் 
பாதை தூரமில்லை!

நீ வாழும் போதே பேசு
உன்னை பேச வை
உதவு 
உதவிட வகை செய்...

இது தத்துவம் அல்ல,
உன் மகத்துவம்
அறிந்துக்கொள்!

இன்னும் தேடு
பல உண்மைகள்,
மறைந்து இருக்கு
புதைந்து இருக்கு
உனக்குள்ளே இருக்கு...!

12 டிச., 2011

நம்பிக்கை!

வரும் போதும் 
கொண்டுவரவில்லை,
போகும் போதும் 
கொண்டுபோவதில்லை...

இடையில் வரும் 
துன்பம் செயற்கை.
இயற்கை 
தரும் வலிகளை
விழிகள் 
பார்த்தப் படிப்பினையை 



ஊனமில்லாத 
எண்ணத்தில் 
நம்பி வாழும் 
வாழ்க்கை
வாழச் சொல்லும் 
நம்பிக்கை!

எதிர்த்துப் போரிட 
உன்னத வழிகளை
மேற்கொண்டால் 
உன் வாழ்க்கை
காட்டும் புதிய 

விடியலை 

வறுமை 
போராட்டத்தை 
எதிர்த்தால் 
இன்பங்கள் பூத்து 
மடமையை அகற்றி 
மலையையும் 
தாங்கும் 
உனது வலிமை...

உள்ளங்கள் மகிழும் 
இனிமை கொண்ட 
வாழ்வில் 
விதியை விரட்டும் 
மனமிருந்து 

தோல்வியை 
எதிர்க்கும் 
தோழனாயிருந்து
பொறுமைவுடன்
இருந்தால் 
நம்பிக்கை அழைத்து 
வரும் வெற்றியை...!

9 டிச., 2011

இன்றே செய்




நாளை என்பது
நமக்கு இல்லை
இந்த நாழியில் 
உன் வேலையை
நீ முடித்தால் 
பளுவில்லை.

இந்த நாளை 
நாளை என்று 
தள்ளிவைத்தால் 
நாளைக்கு 
நிம்மதி இல்லை

இன்றே செய்து 
முடிக்கக் கூடியதை 
நாளை என்று 
ஒத்திப் போடுவது 
சோம்பரின் நிலை ...

நாளை என்பதே 
நம்பிக்கையில்லை.
இன்றே அதை 
நன்றாய்  செய்தால் 
உனக்கே நன்மை !

8 டிச., 2011

சொல்லி அடித்தால்...


வாழ்க்கையில் 
தோல்வியை 
கொண்டு 
துவண்டு போன 
கோழையை 
கண்டு 
நகைக்கும் 
வெற்றி...

தோல்வியை 
கண்டதால் நடுக்கம்

வெற்றி
அருகில்  இருந்தும்
காண தயக்கம்


விழிகள் இருந்தும்  வழிகள்
அறியா பாவி நீ என 
வெற்றி 
உன்னைப் பார்த்து 
குறை சொல்லும்.

உன் கையே மூலதனம் 
வெற்றிக்கு அடித்தளம்
சொல்லி அடித்தால் 
வெற்றி உன் கூட வரும்.

6 டிச., 2011

கற்று தந்தது பறவை...

இருக்கும் வரை 
இறக்கும் வரை 
சாதிகள் இல்லை 
மதங்கள் இல்லை 

உறவின் நிலை 
உயர்ந்த நிலை 
உயர்த்திச் சொல்லி 
பறக்கும் பறவை...

வருங்காலம் 
தேடவில்லை
வருமானம் 
தேவையில்லை

வாழுமுறை 
வாழ்க்கைமுறை,
வாழக் கற்று 
தந்தது பறவை

தற்கொலை தான் விடையா ?


வாழ்க்கையை 
தொலைத்ததாய்
நினைத்து
வாழவே பிடிக்காமல்
தன்னையே 
கொலை கொண்டவர்கள்
கொள்பவர்கள் 
நம்மில் சிலர்.

இருக்கும் வாழ்வை 
அறியாமல்
இறைவன் தந்ததை 
உணராமல்
கேட்டத்தும்
கிடைக்கவில்லை 
என்ற உணர்வால்
இறந்த கோழைகள்
எடுக்கும் நிலை 
தற்கொலை...

மண்ணாகி 
போனாலும்
எலும்புகள் கூட
உன் நிலை சொல்லும்
வரும் தலைமுறை 
உன்னை பார்த்து 
வாழதெரியாத 
கோழை என்று
நகைக்கும்...

காதல் தோல்வியா 
தற்கொலை 
வேலையில்லை 
தற்கொலை 
வறுமையா 
தற்கொலை 
வாழ மறந்த 
உள்ளத்தை 
குறி வைத்து 
தாக்கும் தற்கொலை...

இது தான் 
உன் நிலையா ?
தற்கொலை தான் 
விடையா ?

வாழும் வரை 
வாழ்ந்துப் பாரு 
வெற்றி கிடைக்கும் 
வரை போராடு...

தடைகளை உடைத்து 
படிகளாய் மாற்று 
விடை சொல்லும் 
வாழ 
வாழ்க்கை அழைக்கும்
புது விடியல் உனக்குள் 
பிறக்கும் ...

26 நவ., 2011

வாய்ப்புக்கள்...



வாய்ப்புக்கள் 
வராமல் 
வாசப்படி அருகில்
ஒதிங்கியே நின்றது.



வெற்றின் வாய்ப்பு 
பக்கம் தான் 
அதை அறியமாலே 
பக்கங்கள் புரட்டப்படுகிறது 


வாதங்கள் 
மனசுக்குள் 
சண்டைப்போட்டு 
முடிவுக்கு வர...


நம்பிக்கை 
நலம் விசாரிக்க 
சுறு சுறுப்பானது
தேடல் வேட்டை 
அடுத்த 
வாய்ப்புக்கு...

22 நவ., 2011

நம்பிக்கையாய் உதிக்கும்...




தற்கொலைவாதிகளே
தற்கொலைக்கு என்ன அவசரம் 


வாழ்க்கையை பாருங்கள்.
காதல் மட்டுமா வாழ்க்கை 


சோகம் மட்டுமா நித்திலை
வறுமைக்கு பயந்தா 
வாழக்கை 


வேலைலில்லை என்ற சொல்லை,
சொல்வதா உன் வேலை
இது தானா   உன்னிலை 


இரைப்பைக்காக 
கழிவுநீரை சுத்தம் 
செய்கின்ற மனிதரை 
கண் முன் நிறுத்து...


அனுதினம் காகிதம் 
பொருக்கி வாழும் 


மனிதர்களை 
பார்த்தாவது 
உன் பாதை  மாற்று


காதல் காதல் 
என்று சொல்வதை 
அதில் அழிவதை 
தடுத்து 




உன்னால் முடியும்
வாழ்க்கை வாழ்வதின் 
அர்த்தம் அறிந்துக்கொள்


நம்பிகையே   சூரியன்.
உனக்கும் விடியல் உண்டு 
உன் திசையை 
கிழக்காய் மாற்று...


மேற்கில் 
இருள் மறைந்து 
வாழக்கைப் 
பாதை அறிந்து 
புதிய விடியல் 
நம்பிக்கையாய்
உதிக்கும்...



=====================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

20 நவ., 2011

விடியலை நோக்கி...





இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது!


எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்
அதற்கு  முன்
உண்டோடு பேச ஆசை...

நம் மண்ணிற்காக 
சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்!

நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் 
நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!

மாமன் மச்சான்
உறவுகளின்
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள்
எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்...

மீண்டும் எனக்கு 
கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு 
கிடைத்தாலே போதும்!

அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்!

நான் எப்படியும் 
இறந்துபோகதான்
போகிறேன்...

நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு
பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.

எனக்காக 
உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்!

என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,
வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!

வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது
நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.


=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

10 நவ., 2011

தீர்மானிக்கும் ஆயுதம்.



நினைவு மழையில் 
வெள்ளமானது மனசு.

நேற்றைய பொழுதுகள் 
சரித்திரத்தை பார்க்கிறது

தரித்திரம் என்றது கூட 
இன்று சரித்திரம் 

வெற்றி மனிதனை 
பழைய கிசு கிசகூட 

நிரப்பப்பட்ட மதுவாய்
மாறுவது உண்மை

தோல்விகள் எல்லாம் 
சாதனைகளை கூட 

சாக்கடையில் கரைந்தே 
போகிவிடும்...

இங்கு நிர்ணிப்பது 
வெற்றியே...

வெறியோடு வெற்றிக்கு 
வெள்ளோட்டம் 

கிடைத்துவிட்டால்  போதும் 
எல்லாமே தேரோட்டம் 

இதனால் சகலமானவர்களுக்கும் 
சொல்வது என்னவென்றால் 

வல்லரசுகளின் கூட்டு பலம் 
வெற்றியை சொல்லும்

சதாம் ,கடாபி வீழ்ச்சி 
சரித்திரமும் மறைக்கும்...

இன்றைய அரசியலும் 
வெற்றியின் நிலையை சொல்லும்   

கடாபியின்  தோல்வி அவரின் 
சாதனையை கொல்லும்...

வெற்றியே மனிதனை 
தீர்மானிக்கும் ஆயுதம்.

வெல்க வெற்றியை 
கொல்க தோல்வியை 
==============================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

9 நவ., 2011

திருந்தட்டும் இந்த உலகம்...

















உனக்கு கையில்லை 
எனக்கு காலில்லை 
நம் இருவருக்கும் 
கவலையில்லை.

உண்மைக் காதல் 
நம்பிக்கையோடு 
குடியிருக்க...

இன்பத்தின் வாசல் 
இல்லறத் தோடு 
இணைந்திருக்க...

வேற என்ன 
வேண்டும்  நமக்கு 
திருந்தட்டும் இந்த
உலகம் நம்மை பார்த்து.

காதலர்களே கொஞ்சம் 
நில்லுங்கள்.

உண்மைக் காதல் என்று 
ஊர் சுற்றும் 
உங்கள் காதலை நிறுத்தி...

எது காதல் என்று அறிந்து 
தொடருங்கள்.


==================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

5 நவ., 2011

ஊமையாகி ஓடும்.


ஊனம் இங்கு 
ஊமையே!
உள்ளம் கண்ட
உண்மைக் காதலால்.

ஊனமில்லா 
மனங்களிடம்
ஊனம் ஊனமாகி
மரணம்.

இல்லறம் சிறக்க 
இருமனம் போதும் 

ஊனமிருந்தாலும் 
ஊமையாகி ஓடும்.

19 அக்., 2011

உண்மை நிலை ...


வேலையில்லை என்று 
வேலையை தேடி 
வெளிநாடு வந்தேன்!

வாலிபமும், தன்மானமும் ,
விற்று வருமானம் எடுத்தேன்.

வேலையென்பது எங்குமிருக்கு 
அது இப்படியுமிருக்கு என
விற்பனை செய்கின்ற
வண்டியைப் பார்த்து...
எனது நிலையை நினைத்து
வேதனை கொண்டேன்!

விரல்கள் மூலதனம்,
முயற்சிக்கொண்டால்
நாம்  வெற்றிப்பெறலாம்!

அது உன் அருகில்
நீ  இருப்பதை அறிந்தால் 
வருங்காலம் நமக்கலாம்!


இந்த படம் சொல்லும்
உண்மை நிலை, நாமறிய 
உதவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக