Listen 3D Quality

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

சிரிப்பும் சிந்தனையும்.


சிரிப்பும் சிந்தனையும்.



நண்பர்களே...
எனக்கு வந்த குறுந்தகவல்களில் நான் விரும்பிப்படித்த, சிரித்த, சிந்தித்த தகவல்கள் சில உங்களுக்காக..

காதல்
ஒரு எறும்பு ஒரு யானையைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாம்...
ஒரே நாளில் யானை இறந்துவிட்டதாம்..
எறும்பு அழுது புலம்பியதாம்..
“ஒரு நாள் காதலித்துக்காக என் ஆயுள் முழுவதும் குழி தோண்டவைத்துவிட்டாயே!“ என்று.

வாய்ப்பு
திருமண விழாக்களில் மணமகனை காரிலோ, குதிரையிலோ வைத்து அழைத்துச் செல்கிறார்களே அது ஏன் தெரியுமா..?
மண மகன் தப்பித்துச் செல்லத் தரும் இறுதி வாய்ப்பாம் அது!

கனவு
கனவு பெரியாதாக இருக்கும்போது
உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்கவேண்டும்!  
-          -கலாம்.

சோம்பல்
உன் சோம்பலை நீ தூக்கி எறிந்தால்
உன் சாம்பல் கூட சாதனை பேசும்!
-          -கலாம்.

நடத்தை
உங்கள் திறமை உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்
உங்கள் நடத்தைதான் அந்த இடத்தை நீங்கள்
தக்கவைத்துக்கொள்ளத் துணைநிற்கும்!

சிரிப்பு
உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை
நீயும் சிரிக்க வை!
உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை நீ சிந்திக்கவை!

பிறப்பும் இறப்பும்
நீ காணும் யாவும் உனக்கு மகிழ்ச்சி தரவேண்டுமா?
இன்று தான் நீ பிறந்தாய் என எண்ணிக் கொள்!
நீ சாதனைபுரிய வேண்டுமா?
இன்றோடு நீ இறந்துபோவாய் என எண்ணிக்கொள்!

காரணங்கள்
நம் வாழ்வில் நாம் அழுவதற்காக 100 காரணங்கள் உள்ளன!
நாம் சிரிக்க 1000 காரணங்கள் உள்ளன!

வாழ்க்கை
வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது!
நாம் இறந்தபின் நம்மைய யாரும் மறக்க்க்கூடாது!

கடிகாரம்
இலக்கில்லாத வாழ்க்கை முள் இல்லாத கடிகாரம் போன்றது!
ஓடாத கடிகாரம் கூட ஒருநாளில் இரண்டுமுறை சரியாக நேரம் காட்டும்!




gunathamizh.blogspot.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக