இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று....
தினமும் எதிர்ப்படும் என்னை
உதாசினம்படுத்திவிட்டு
போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...
தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள்
எதிர்ப்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை
அவர்களுக்கான பதிவுகளை
சிறு
மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...
அன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...
இன்னும் எவ்வளவு நேரம்
எதிர்பார்த்துக்
கொண்டிருப்பது...
பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என்
கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு
என் கருவிழிகள்
கண்டனங்கள்
தெரிவிக்கும் முன்...
தெரிவிக்கும் முன்...
January 13, 2011
அறிமுகமாகாத சிநேகிதியே...
இன்னும்
அறிமுகமாகாத
என் சிநேகிதியே...
தற்போதல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...
ஏறி
இறங்குவது
நீ முன்வழியில் நான் பின்வழியில்
வலபுற
ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே சிறகடிக்கிறது உன்
மனசு...
நான் இடப்புற ஜன்னலில்....
அருகில்
இருப்பது யாரென்று அறிந்திலர்
இருவரும்...
நிறுத்தங்கள் பல
கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது
ஏறியது போலவே இறஙகும் போதும்
நீ முன்வழி.. நான் பின்வழி...
இது
போன்று தான் பல நாட்களாய்...
ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
ஒரு செய்தி வந்துக்கொண்டிருக்கிறது...
இருவரும் ஒரே பஸ்ஸில் தான்
போகிறார்களாம்... வருகிறார்களாம்...
என்று...
திருமணமாகாத
ஏக்கத்தில் நீயும்..
தங்கை திருமணம், வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்
நடை பிணமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
என்ற விரக்தியில் நானும்
நடை பிணமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...
ஊராருக்கு
என்ன தெரியும்
பேருந்தில் நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் நம்
வேதனைகள்....
எதாா்தத்தை காட்டுகிறது உங்கள் கவிதை...சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு