எதிர்காலம்...
கருவாய்
உருவாகி
உருவாய்
அரங்கேறி
பருவங்கள் பல
தாண்டி
வருங்கால வாழ்வை
நோக்கி
நெருக்குது
நாட்கள்
சிந்தனை
பெருகி
சிகரத்தை
தாண்டிட
நின்று
நிலைக்குது
நிதானத்துடன்
வாழ்வை
நேர்வழி
நகர்ந்திட
பந்தங்கள்
அனைத்தையும்
பாசத்தால்
அலங்கரித்து
வசந்தங்கள்
எல்லாம்
என்
சுவாசமாய்
வாசம்
வீசி
என் வாசல்
சேரும்
என்ற
நம்பிக்கையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக