Listen 3D Quality

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தாவரங்கள் பேசுகின்றன..


தாவரங்கள் பேசுகின்றன..

மொட்டொன்று திடுக்கிட்டு விழித்தது
ஏனென்று கேட்டேன்?

'ஒலி மாசுபாடு' என்றது!

மலர் ஒன்று தும்மியது
என்ன ஆச்சு என்றேன்?

'சுற்றுச் சூழல் சீர்கேடு' என்றது!

மரம் ஒன்று மருத்துவமனையில்
வரிசையில் காத்திருந்தது
உடம்புக்கு என்ன ஆச்சு என்றேன் ?

'செயற்கை உரம்' என்னை 
நோயாளியாக்கிவிட்டது என்றது!

புயல் ஒன்று சீற்றத்தோடு வந்தது.
அதை நிறுத்தி 
ஏனிந்த வேகம் என்றேன்?

என்னைவிட வேகமாகத் 
தாவர இனத்தை அழிக்கும் 
மனிதர்களை நான் அழிக்கத்தான்
இந்த வேகம் என்றது!

வீட்டுச் சுவர் ஒன்றில்
செடி ஒன்று முட்டிக் கொண்டு
கிளைத்து வளர்ந்தது!
அதனிடம் சென்று..

ஏ செடியே..
மனிதன் அரும்பாடுபட்டுக் கட்டிய 
வீட்டில் வாடகை தராமல் நீ 
குடியேறுவது சரியா என்றேன்?

செடி சொன்னது..
இது எனக்கும் மனிதனுக்கும் 
நடக்கும் விளையாட்டு..

சில நேரம் மனிதன் என்னை வெல்வான்
இறுதியில் நானே வெல்வேன்! என்றது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக