Listen 3D Quality

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

"சுயநல அறிவுஜீவிகள்"


"சுயநல அறிவுஜீவிகள்"


"ஏ சுயநல அறிவுஜீவிகளே !

நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்

இடம் பிடிக்க முடியாதவர்கள்

ஆனால்

உங்களுக்கு உண்டி சமைக்கும்

உங்களுடைய ஆடையை விடுக்கும்

உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்

உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்

அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்

எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது

ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

அவசியம் வேணும் வாரிசு அரசியல் !


இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்

இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய

வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்

வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை

எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!

இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

தனிக் குடித்தனத்தில்.....


திருமணம் முடிந்து
இருமனம் இணையும்
தேனிலவும் தாண்டியது
தவிர்க்கவே முடியாத அந்த
தனிக்குடித்தனமும் ஆரம்பமானது

எனக்கு அவளைப் பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது
என்ற நினைப்பில் மண் விழுந்தது
எதிர்பாராமல் ஒருநாள்
எனக்கு அந்த உண்மை தெரிந்தது

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை!

அன்றுமுதல் எனக்கு உறக்கமில்லை
அனுதினமும் இதனால் வந்ததுதொல்லை
எவ்வளவோ சொல்லியும் புரியவில்லை
என்ன செய்யவேண்டும் தெரியவில்லை

பிரச்சினையை முடிக்க முடியாததால்
பாதிப்பின்றி முடிவெடுக்கத் தெரியாததால்
விட்டுக்கொடுக்கவும் திடமில்லாததால்
எதிர்த்துப்பேசவும் மனமில்லாததால்

எனக்கும் எண்ணை பிடிக்காமல் போனது!!

எங்களுக்கு வேறு வழியே இல்லை
இப்படியே தொடர மனமும் இல்லை
ஒன்றாய் உட்க்கார்ந்து பேசினோம்
ஒருமனதாய் முடிவு செய்தோம்
.
.
.
.
.
.
.
.
.
.
எண்ணை இல்லாமல்

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

வயசுக் கோளாறு !!


அந்தி சாயும் வேளையில்
அந்தப் பெட்டிக்கடையின் மறைவில்
ஆனந்த அதிர்ச்சிக்காக
என்னவளின் பார்வைக்காக
எந்தன் தேவதையின் வருகைக்காக
நாளெல்லாம் பார்த்ததுநிற்பேன்

காற்றில் படபடத்து
கண்களுக்கு வலை வீசும்
பளபளப்புக் கூந்தல் பார்த்தவுடன் என்
பாதம் வானத்திலே மிதக்குமே

பட்டுச் சேலை பரபரக்க
பட்டுப்பூச்சியாய் மிதந்துவரும்
பாவையின் அழகு பார்க்க
பத்துநாளானாலும் பாதையிலேயே
பட்டினியாய்க் காத்து இருப்பேனே

ஓரவிழிப் பார்வையின்
ஒரு கண் அசைவிற்காக
ஒன்றல்ல,இரண்டல்ல
ஒன்பது நாளானாலும்
ஓரமாகவே காத்துக் கிடப்பேனே

ஆயிரம் பேருக்கு நடுவில்
அவள் இருந்தாலும் அந்த அறிவுள்ள
சுண்டுவிரல் அசைவினில் எனக்கு
சுத்தமாய் ஆயிரம் அர்த்தங்கள் புரிந்ததே

மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப்பேசியோரை எல்லாம் ஏசி
சொந்தங்களின் சொல்லை மீறி
சொந்தமாக்கிக் கொண்டேனே அவளை ! !

இன்று.........

கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில்
கைதியைப்போல கட்டிலின் ஒரத்தில்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு
என்னவள் பார்வைக்காக
எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன்

பலவண்ணம் ஏற்ற ஏதுவாய்
பதப்படுத்தப்பட்ட பரட்டைக் கூந்தலுடன்
படுக்கையிலிருந்து எழுந்து என்னிடம்
பகல் காப்பிக் கேட்பவளைப் பார்த்து
கலங்கிப் போய் இருக்கிறேன்

பகல் பொழுது முழுவதும்
இரவு ஆடையிலிருந்து வெளியேராமல்
அங்கி போட்ட சாமி போல
தூங்கித் தூங்கி விழும்போதெல்லாம்
அந்தநாள் நினைவில்
ஏங்கியபடி இருக்கிறேன்

ஓரமாகவே இருந்து பார்த்தவனுக்கு
நேராகப் பார்த்தவுடன்தானே தெரிந்தது
அவளது பார்வையே ஒருமாதிரியாய்
ஓரமாகத்தான் இருக்குமென்று
பரிதவித்துப் போய் இருக்கிறேன்

ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்பது முறை விளக்கினாலும்
ஒன்று கூட புரிவதில்லை
பட்டயப் படிப்பு முடிக்கவே இன்னும்
பத்துப் பாடம் பாக்கியாம்
தெரிந்ததிலிருந்து இதயம்
தடுமாறிப்போய் இருக்கிறேன்

"மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி
சொந்த்ங்களின் சொல்லை மீறி
நானாகவேத் தான் போய் மாட்டிக்கிட்டேனா??????"

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

நண்பனுக்கு ஒரு கடிதம்...


அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே

கவனிக்க....!

நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்

அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை

சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்

"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "

துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்

"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"

அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்

"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"

மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"

பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை

உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

வாரணம் ஆயிரம் இருந்தாலும் !


திடீரென அழுகுரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன் நான்
விடியவில்லை இன்னமும்
விரலில் நகம் கூடத் தெரியவில்லை

படபடத்து எழுகிறேன் பதறிக்கொண்டு
பக்கத்தில் குழந்தை கதறிக்கொண்டு
பால்க்காரன் இன்னும் வரவில்லை
பசியடக்க என்ன செய்ய தெரியவில்லை

சிரித்தபடி இருக்கிறாள் அவள்

பால்பொடி பெட்டியை திறந்து
பதட்டத்தில் போட்டு உடைத்து
மீதியை அள்ளி எடுத்து
பாத்திரத்தில் சேர்ப்பதற்குள்
பாதி உயிர் போய்விடுகிறது எனக்கு

சிரித்துக்கொண்டிருகிறாள் அவள்

எரிவாயு உருளையையும்
எரியாத அடுப்பையும் பார்த்ததும்
ஏழு உலகம் சுற்றுகிறது எனக்கு
"ஏன் இந்த பொழப்பு நமக்கு?"


சிரித்துக்கொண்டே இருக்கிறாள் அவள்

ஒருவழியாய் பாத்திரத்தில் அடைத்து
ஓடிப்போனவன் ஒடுங்கிப்போய் நிற்கிறேன்
சலனம் ஏதுமின்றி குழந்தை அங்கே
சகலமும் அடங்கிப்போகிறது எனக்கு இங்கே

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கி ஏங்கிஅழுது குழந்தை
விரல் சப்பி விழி மூடி
தானாகவேத் தூங்கிப் போயிருக்கிறது

சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள் அவள்

எனக்கு என் மேலேயே வந்த கோபம்
எதிர்பாராமல் திரும்புகிறது அவளிடம்

"அதற்குள் என்ன அவசரம் உனக்கு?
எதுவுமே தெரியவில்லையே எனக்கு?
என் நிலை பார்த்தபின் சிரிக்கலாமா?
என்னைத் தவிக்கவிட்டு நீ போகலாமா?

நிகழ்காலம் என் கண்ணை மறைக்கிறது
எதிர்காலம் என்னை ஏளனம் செய்கிறது
தனியே இருந்து நான் சமாளிப்பேனா?
நினைவிலாவது துணையாய் இருப்பாயா?"

இன்னும் அவள்
சிரித்துக்கொண்டுதான் இருக்கிறாள்
அந்தப்புகைப் படத்துக்குள் இருந்து.

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

உனது அச்சாணி..


அன்றொரு நாள்
அதிகாலை நேரம்
ஆழ்ந்த உறக்கம்

கடவுள் வந்து நின்றார்
கண்ணெதிரே என் கனவில்
கேள்விகள் பல கேட்டார்

பிடித்தவர்கள் பெயர் சொல் என்றார்
அம்மா அப்பா பெயர் சொன்னேன்
அமைதியாய் சிந்தித்தார்
அடுத்து சொன்னார்
"எதிர்காலம் நன்றாக இருக்கும்"

கனவுகள் பற்றிக் கேட்டார்
காதலி அவள் பெயர் சொன்னேன்
கண்மூடி தியானித்தார்
"நல்ல வாழ்க்கை அமையும்"

நெடுநாள் ஆசை கேட்டார்
நிலவு தொடும் வரம் கேட்டேன்
கொஞ்சம் தயங்கினார்
"நிச்சயம் நிறைவேறும்"

தொடரும் நட்பு பற்றிக் கேட்டார்
நண்பா உன்பெயர் சொன்னேன்
கேட்டதும் சிரித்தார்
சிறிதும் யோசிக்கவில்லை
உடனே பதில் சொன்னார்
"நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்''

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

சுய பரிசோதனை நேரம் !


அடிமட்ட மக்களுக்காகவே
அல்லும் பகலும் பாடுபடும் அரசு
பெறுமையாய் அறிவிக்கிறது
வருவாய் கூடிவிட்டதாக!
இருமடங்கைத் தாண்டிவிட்டதாக!!
....நிற்க...
மக்களின் வருமானமா கூடியிருக்கிறது ?
அது
மது விற்பனையில் வரும் பணம்!

விலைவாசி கூடிக்கொண்டே இருக்கிறது
வளமாய் மாறியிருக்கவேண்டும்
விவசாயியின் வாழ்க்கையும்
....நிற்க...
புள்ளி விபரங்கள்
புரிய வைக்கின்றன
உணர்த்துகின்றன
உண்மை நிலவரங்கள்
கூடிக்கொண்டே போகிறது
விவசாயி தற்கொலைகளும்
விபரீத இடப்பெயர்வுகளும்


சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட
மக்கள் வாழ்வை பாதுகாக்க
புதியதாய் அரசுப் பணியில்
பதினாயிரம் காவலர்கள் சேர்ப்பு
....நிற்க...
கடந்த ஆண்டைவிட
கூடியே இருக்கிறது
குற்றங்களின் எண்ணிக்கையும்

இவை சிலதான்..
இதுபோல் இன்னும் பல....

எதிர் மறையாகவே
இருந்திருக்க வேண்டிய
இந்த மாற்றங்கள் எல்லாமே
எல்லா இடத்திலும்
ஏறுமுகமாகவே இருக்கிறது

என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
எங்கேநாம் சென்றுகொண்டிருக்கிறோம்?

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

என் நிலை என்ன..?


சூறாவளியின் மையத்தில் நான்
சுனாமியின் சுழற்சிக்குள் நான்

என் கரு சுமப்பவள்
என்னை கருவில் சுமந்தவள்
இடையில் ஏதும் புரியாமல் நான்

தன் நிலை காக்க ஒருவள்
தன்னை நிலை நாட்ட மற்றவள்
என் நிலை தெரியாமல் நடுவில் நான்

இறுகும் சுருக்கு கயிறு கழுத்தில்
இரண்டு கத்தியின் மேல் நிற்கிறேன்
பிரச்சினையை நிறுத்த
பேசியே ஆக வேண்டும் நான்

எனக்குத் தெரிந்ததை அவர்களிடம்
எடுத்துச் சொல்லி அறிவுரித்தி
வேகமாகக் கோபத்தோடு
வெளியேறிப்போகிறேன் நான்

அந்திசாயும் நேரம்
அமைதியாய் உள் நுழைகிறேன்
ஆரவாரம் ஏதும் இல்லை
ஆள் அரவமும் இல்லை

அந்த அமைதி எனக்கு
ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது
என்னவோ நடந்திருக்கிறது
எதுவோ நடக்கவும் போகிறது

இருவரும் ஒன்றாய் சேர்ந்து
இருதுருவமும் ஒருசேர இணைந்து
எனக்கு எதிரே நிற்கிறார்கள்
எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது

எற்கனவே சமாதனம் ஆகிவிட்டது
ஏதோ உடன்படிக்கையும் முடிந்துவிட்டது

"எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்
உங்களை யார் இடையில் வரச் சொன்னது?"
முகத்துக்கு நேரே கேட்டுவிட்டு
முகம் திருப்பி உள்சென்று விட்டார்கள்

எதிர் எதிரே
எதிரியாய் நின்றவர்களுக்கு
எதிர்பாராமல் நான் இப்போது
எதிரியாய் ஆகிப்போனேன்

திருதிருவென விழித்துக்கொண்டு
தன்னந்தனியே நான்
என் நிலை என்னவென்று
எனக்கு இப்போதும் புரியவில்லை

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

உள்ளே, வெளியே !


"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது"

வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள்
எதற்காகவோ என்னை
ஏசிக்கொண்டே இருந்தாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்சென்றேன்

பேருந்தில் இடம் பிடிக்க ஓடி
படியில் இடறி தடுமாறி
இடம் கிடைக்காமல் நின்றேன்
"இதுகூட முடியலின்னா
எதுக்கு மீசைன்னு ஒன்னு"

அவளின் கேலிப்பேச்சு
ஆழமாய்க் குத்தினாலும்
சட்டை செய்யாமல்
சன்னல் வழியே
வெளியே பார்த்தேன்

திரையரங்க வாசலில்
தெருவரையுள்ள வரிசையில்
முட்டி மோதும் சிறுவர்களுக்கு
ஓரம் ஒதுங்கி இடம் கொடுத்து
கொஞ்ச நேரம் கழித்து
கசங்கிப்போய் வெளியேவந்தேன்
"சின்னப் பசங்களக்கூட
சமாளிக்க முடியல
என்னத்த சாதிப்பிங்களோ?
என்னதான் பன்னுவீங்களோ?"

எப்போதும் போலவே
இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு
அடுத்த வேலைக்குத் தயாரானேன்

கடற்கரையில் கால் நனைக்கையில்
"கொஞ்ச நேரம் இருங்க
குழந்தையை பாத்துக்கோங்க"

பதில் எதிர்பாராமல்
பரபரவென விலகிப்போனவள்
பதட்டத்தோடு திரும்பிவருகிறாள்
"வாங்க போயிறலாம் இங்கேயிருந்து
வம்பு செய்ராங்க ஏங்கிட்ட அங்கேயிருந்து"


அவளைக் கடந்து பார்க்கிறேன்
அங்கே திருட்டுப் பார்வையோடு
திடகாத்திரமாய் நால்வர்
தொடர்ந்து வந்திருக்கிறார்கள் அவளை

அடுத்த நான்கு நிமிடங்களில்
அங்கே யாரும் எதிர்பாராமல்
ருத்திரத் தாண்டவம் ஆடி அடங்குகிறேன்
யுத்தக் காண்டமே நடத்தி முடிக்கிறேன்

அந்த நால்வரும்
அவள் முன்னால் மண்டியிட்டு
மன்றாடி வேண்டி மன்னிப்புக் கேட்டு
மறு விநாடி மறைந்து போகிறார்கள்

"எந்தப் பிரச்சினையும் இல்லை
எல்லாம் முடிஞ்சு போச்சு
எங்கே போகலாம் அடுத்து?"

எதுவுமே நடக்காதது போல
அவள் முகம் பார்த்து கேட்டு
அப்பாவியாய் நிற்கிறேன்

அவளோ என்முகம் பார்த்து
அனைத்தும் உறைந்து நிற்கிறாள்
குழம்பிய முகத்தோடு
கலங்கிய சிந்தனையோடு
குற்ற உணர்ச்சியோடு
குறுகுறு பார்வையோடு
இதுவரைப் பார்த்துதற்கும்
இப்போது பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசம்
உள்ளபடியே உணர்கிறேன்

மெதுவாய் என் கை பிடிக்கிறாள்
இதமாய் வாய் திறக்கிறாள்

"நீங்க போங்க முன்னாடி!"

மறுநாள் மாலை
மதிமயக்கும் வேளை
வரவேற்பு எதிர்பார்த்து
வீட்டுக்குள் நுழைகிறேன்
"புத்திகெட்ட மனுசனுக்கு....

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

வரப்போகும் வானிலை அறிவிப்பேன்..!


பளீரென சுட்டெரிக்கும் வெயிலில்
பஞ்சை விரித்து உலரவைக்கையில்
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை
கொடூரமாய் கொட்டியது மழை
தற்செயலாய் தான் கவனித்தேன்
தாண்டிப் போய்க்கொண்டிருந்தாள் அவள்

இலைகள் கூட அசைய மறுக்கும்
இறுக்கமான சூழலில்
மாவு திரித்து பதமாய்
மாடியில் பரப்பிவைக்கையில்
சுழற்றி அடித்து ஓய்ந்தது
சூறாவளியாய் காற்று
சுற்றிலும் தேடினேன் நான்
நினைத்தது போலவே வாசலில்
நின்றுகொண்டிருந்தாள் அவள்

இருமனங்கள் இணையும்
திருமண மண்டபத்தில்
தாலி கட்டப்போகும் நேரத்தில்
தானாக வியற்கிறது மூக்கின் மேல்

என்னவோ நடக்கப்போகிறது
என் மனதுக்குள் பட்சி அலறியது
மளமளவென குடை விரித்து
மணமேடையின் மேலிருக்கும்
மணமக்களுக்குப் பிடிக்கிறேன்

ஒட்டுமொத்தமாய் எல்லோரும்
ஒரு மாதிரியாய் பார்க்கிறார்கள் என்னை
பாவம்! ஒன்றும் புரியாதவர்கள்!!
பரிதாபமாய் நனையப்போகிறார்கள்!!!

எனக்கு மட்டும்தானே தெரியும்
என்ன நடக்கப்போகிறதென்று
வாசல் தாண்டி உள்ளே
வந்து கொண்டிருக்கிறாள் அவள்

title

கவிதைகள்
  • மரணப்படுக்கையில் க�...
    கடைசிப் பதிப்பு : July 16, 2009
    மரணப்படுக்கையில் கிடந்தாலும் மாறாது அந்தக் குணம்! -கலைஞர் த. தயாநிதி
    பிறப்பு 1954 தை பதினெட்டு மதியம் பன்னிரண்டுக்கு கேட்டது அந்த அலறல் சத்தம் இணுவில் மருத்துவ மனையே ஸ்தம்பித்து போ�...
  • நிலம் -தீபன்
    கடைசிப் பதிப்பு : July 11, 2009
    நிலம்  -தீபன்
    மேகமே நீ ஊர் கடந்து செல்கின்றாய் நான் வறண்டு மேனி கிழிந்து கிடக்கின்றேன் என் உடல்க் காயங்களும் வலிகளும் மாறி�...
  • பகுத்தறிவு -கலைஞர் ��...
    கடைசிப் பதிப்பு : July 11, 2009
    பகுத்தறிவு -கலைஞர் த. தயாநிதி
    இரட்டை திருக்கல் வண்டிலில் பூட்டிய மாடுகள் இரண்டும் காட்டிய பாதையில் பயனமாகும் மாற்றுக் கருத்தோ மாடுகளிற்கி...
  • உலகம் சுருங்கி- உண்��...
    கடைசிப் பதிப்பு : July 8, 2009
    உலகம் சுருங்கி- உண்மைகளும் சுருங்கி…-கலைஞர் த. தயாநிதி
    இணையத் தளங்கள் இதமாய் விரிந்திருக்க இன்றைய தலை முறையள் இன்மை வறுமை தெரியாமல் இறங்கித் தவிக்கினம் படிப்பும் ப�...
  • வாசத்துக்கு வேலியா?...
    கடைசிப் பதிப்பு : July 2, 2009
    வாசத்துக்கு வேலியா? -கலைஞர் த. தயாநிதி
    முற்றத்து மல்லிகை காற்றோடு கலந்ததும் மாற்றான் நுகர்வுக்கு முற்றாகப் போனதும் யார் குற்றம் என்கிறாய்? வேதனை பு�...
  • சொர்க்கம் அங்கேதான�...
    கடைசிப் பதிப்பு : July 1, 2009
    சொர்க்கம் அங்கேதான்  -கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன்
    உதடுகளில் மட்டும்தான் தாகமும் மென்மையும் காதலின் வளர்ச்சிக்கு உணர்வின் உணர்ச்சிக்குள் உதடுகள்தான் சமுத்தி��...
  • அம்மா…- ‍கலைஞர் த. ��...
    கடைசிப் பதிப்பு : June 27, 2009
    அம்மா…- ‍கலைஞர் த. தயாநிதி
    இவள் என் பிராணன் இவளின்றி எனக்கேது சுவாசம் நேற்றுப் போல் எல்லாம் என் நெஞ்சோடு நினைவிருக்க காற்றுப் போல் கண்கள...
  • இலக்கியக் காதல் -கவ��...
    கடைசிப் பதிப்பு : June 25, 2009
    இலக்கியக் காதல் -கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன்
    காதல் கொடியில் மலர்ந்த மாணவி கவிதைச் சந்தத்தில் தவழ்ந்த மாணவன் மாணவி வயது பதினாறு நிறைவு மாணவன் அகவை பதினெட்ட...
  • காத்திருப்பின் கடி�...
    கடைசிப் பதிப்பு : June 24, 2009
    காத்திருப்பின் கடினம் -கலைஞர் த. தயாநிதி
    வலியவே வளைந்ததால் நலிந்து போனதோ நட்பு கலியுகக் கோளாறினால் கேலியாய் போனது தப்பு பாலியல் பாகு பாட்டினை போலியாய�...
  • தலைவர் இருக்கிறார் ...
    கடைசிப் பதிப்பு : June 22, 2009
    தலைவர் இருக்கிறார் நம்பு -கலைஞர் த. தயாநிதி
    பாதை மாறாது தம்பி பயணம் தொடருதே நம்பி கனவு கலையாது தம்பி -இதை நினைவில் நிறுத்தடா நம்பி! உலகம் சுருங்கினாலும் தம...

title

அதிரையில் அழகிய மழைக்காலம்-கவிதை

(*) ஆண்டவனின் அருளினது சாட்சி- நம்
அதிரையிலே அடைமழையின் ஆட்சி- பல
வேண்டுதலின் வினைப்பயனாய் வந்திருக்கும் வான்மழையே
வருக-வளம்-தருக.

(*) கார்மேகம் நீர்முடிச்சு அவிழ்க்கும்-அந்த
கடல்முழுதும் கொண்டுவந்து கவிழ்க்கும்-நம்
ஊர்மேலும் வளம் பெறவே ஊற்றுக்கள் நீர்பெறவே
பெய்யும்-மழை-செய்யும்.

(*) வீட்டின்முன் சாலைகளில் தேங்கும்-நீரால்
விரல்நடுவே சேற்றுப்புண் வீங்கும்-பெரும்
காட்டாற்று வெள்ளமென கரைபுறண்டு ஓடிவரும்
தண்ணீர்-மேக-கண்ணீர்.

(*) அன்றாடம் காய்ச்சிகளுக்கு அல்லல்-மழையைக்
கொண்டாடும் குழந்தைகளுக்கோ துள்ளல்-சோலை
வண்டாடும் மலர்செடிக்கும், வாடி நிற்கும் மரத்திற்கும்
வரமாம்-உதவிக்-கரமாம்.

(*) கத்தியுடன் கப்பலென்று சொல்வான் - தம்பி
கடல் எனவே மழைநீரைக் கொள்வான்- பல
உத்தியுடன் செய்துவந்து உவகையுடன் அதைநீரில்
விடுவான்-சந்தோசப்-படுவான்.

(*) இயல்புநிலை பாதிக்கும் காலம்-இங்கு
இலைநுனியில் நீர்சொட்டும் கோலம்-வீசும்
புயல்மழையின் தாக்கத்தில் புழுபோலே தேகம்
சுருங்கும்-போர்வையும்-உறங்கும்.

(*) படகுவழி படையெடுப்பும் இல்லை-கடல்
வலைவிரிப்பும் மீன்பிடிப்பும் இல்லை-நம்
கடைத்தெருவில் ஈயாடும், கறிக்கடையும் வெறிச்சோடிப்
போகும்-கருவாடு-வீட்டில்வேகும்.

(*) மழைவருகை எதிர்பார்த்து அன்றே-வடகம்
முதல் வற்றல்வரை என்றே- வெயில்
தலைபிளக்கும் நாட்களிலே தயாரிப்பு செய்திட்ட
முறுக்கும்-வீட்டில்-இருக்கும்.

(*) செக்கடியும் ஆலடியும் ததும்பும்-அந்த
செடியனிலும் மழைநீரே ஒதுங்கும்-என்றாலும்
அக்குளம் முழுவதிலும் அள்ளிவந்த குப்பைகளின்
கதம்பம்-மனம்-வெதும்பும்.

(*) இப்படி நாம் எழுதிடலாம் நிறைய-ஊரில்
இருந்திட்ட நாட்கள்தான் குறைய-ஆம்
எப்படியோ நான்ரசித்த நல்மழையை நானிங்கு
பகிர்ந்தேன்-உள்ளம்-மகிழ்ந்தேன்...


-- அதிரை என்.ஷஃபாத்


title


1 இறையோனின் பேரருளே! Monday, 22 November 2010
2 மரணம் - ஒரு நிகழ்வு Sunday, 21 November 2010
3 பெண்ணொரு பெட்ரோல்! Thursday, 28 October 2010
4 முட்டித் தள்ளிடுவோம்.. Sunday, 03 October 2010
5 திரையிட்டு வந்தேன்... Thursday, 30 September 2010
6 பெண் என்னும் பாலம்! Wednesday, 29 September 2010
7 கண் என்னும் ஜன்னல்! Tuesday, 28 September 2010
8 புரியாத உன் பாசம்.. Thursday, 23 September 2010
9 சிரிப்புதான் எத்தனை வகை! Friday, 10 September 2010
10 ரமளான் ஒரு மாதத்தோடு விலகுவதற்கல்ல! Friday, 10 September 2010
11 யாருக்குப் பெருநாள்? Thursday, 09 September 2010
12 எது வெற்றி? Monday, 30 August 2010
13 நட்பு வாழ்வின் நறும் பூ! Monday, 23 August 2010
14 வாழ்க்கையின் இரகசியம் Monday, 16 August 2010
15 க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்! Saturday, 17 July 2010
16 பழமொழி பயனுள்ளமொழி! Sunday, 11 July 2010
17 திடுக்கம் நிறைந்த அந்நாளினிலே... Thursday, 24 June 2010
18 அருமை அப்பா! Tuesday, 15 June 2010
19 எனக்குப் பிடித்தவை... (ஒரு பெண்ணின் பார்வையில்) Thursday, 06 May 2010
20 தலையில் குட்டு வைப்போம்!! Friday, 02 April 2010
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>


எழுத தெரியும்?

Wednesday, August 06, 2008


எழுத தெரியும்?
வெறென்ன தெரியும் எனக்கு!
எழுத மட்டும் தான் தெரியும்.
காத்திருப்பது;
கடலை போடுவது;
கண்ணே மணியே என கொஞ்சுவது;
கண்விழித்து காசை
காலா(call)க்கி கதையடிப்பது;

கைகோர்த்து ஊர்சுத்துவது;
கடலை வாங்கி கொரித்து கொண்டு,
கடலை வெறித்து பார்த்துக்கொண்டு,
கடற்கரையில் கடனே என்று உட்கார்ந்திருப்பது;
கடற்கரை படகின் மறைவில்
கள்ளத்தனமான சீண்டல்கள்,
கன்னத்திலொரு முத்தம்;

கைப்பிடிப்பதற்கு முன்பு
கவலையில்லாமல் சுற்றி,
கண்ணில் படுவதையெல்லாம்
காதலின் அன்பளிப்பாக வாங்கி,
காதலுக்காக கடனையும் வாங்கி,
கடமையைக் கூட மறந்திருப்பது;
கண்விழித்த நாள் முதல்
கண்ட கண்ட நாட்களுக்கெல்லாம்
கார்ட் வாங்கி கொடுப்பது;

இவையெல்லாம் எனக்கு தெரியாது தான்...

என் நன்பன் கேட்டான்
"என்ன காதல்டா இது?"

எனக்கு எழுத மட்டும்தான் தெரியும்.
அதுவும்
உன்னை பற்றி மட்டுமதான் எழுத தெரியும்.

சொல்ல மறந்துவிட்டேனே!!!

நான் மேலே சொன்னதில்
எதுவுமே செய்யாமல்...
காதலியே!!
உன்னை எனக்கு காதலிக்கவும் தெரியும்.
அதற்காக என்னையே கொடுக்கவும் தெரியும்.

title



கண்ணாடிக் கயிறு  December 5, 2010நம் நிலை நன்றாயில்லை  காரணம் – நாம்    ஒன்றாயில்லை…    பிறை மதி காண்பதிலும்    குறைமதி நமக்கு..    பிரிவதும், சரிவதும்    தொடர்கதை எமக்கு..    ஒரே இறை…    எத்தனைக் கூட்டங்கள்…    ஒரே மறை…    எத்தனைக் குழப்பங்கள்…    ஒரே பிறை    எத்தனைப் பெருநாட்கள்…    மார்க்கம் வலியுறுத்தும்    பிரியம் தெரியவில்லை நமக்கு    மார்க்கத்தை வைத்தே    பிரியத் தெரிகிறது…    நாம் செண்டுகளைப்    பரிமாறும்    பெருநாட்களில்    ஏகாதிபத்தியம்    குண்டுகளை வீசுகிறது…    பாலஸ்தீனம்,    ஆப்கானிஸ்தானம்    எரியும் ஈராக்    கருகும் காஷ்மீர்    பாங்கோசை    ஒலிக்கின்ற    பூமியெங்கும்    ரத்தம்…    இருந்தும் திருந்தவில்லை    இன்னும் நம் சித்தம்…    வேத வார்த்தையை    வாழ்க்கையாய் ஆக்கும்    கடமை மறந்தோம்    கொடுமை அடைந்தோம்…    நம் நிலை    நன்றாயில்லை    காரணம் – நாம்    ஒன்றாயில்லை…    இறைவனின் கயிறை    ஒன்றாகப் பற்றினாலே    சமுதாய ஒற்றுமை    உருவாகும்…    நம்மில் சிலர்    ஒற்றுமை என்னும் கயிறு    திரித்தார்கள்…    பிறகு    ஒற்றுமையாய்    இருப்பதில்லை    என்பதில் மட்டுமே    ஒற்றுமையாய்    இருந்தார்கள்…    ஒருவருக்கொருவர்    நாம் கண்ணாடிகள்    ஆனால்    எப்போதும் நமக்குள்    கல்வீச்சுக்கள்…    ஒவ்வொரு திசையிலும்    சிதறினோம்    காலமெல்லாம் நாம்    கதறினோம்…    இதயத் துணிகளை    இணைத்துத் தைக்க    பெருமானார்    தந்து சென்றது    வேத நூல்    நம் கைகளிலோ    இப்போது    பிரிவினைக்    கத்தரிக்கோல்    சிறு சிறு துளிகள்    நிலத்தில் மூழ்கும்    பெரு வெள்ளத்தில்    இந்த    நிலமே மூழ்கும்    வெள்ளம் என்பது    நீரின் ஒற்றுமை…    இருளிலும், காற்றிலும்    ஒரு சுடர் நடுங்கும்    சூரிய வருகையில்    காரிருள் அடங்கும்    சூரியப் பேரொளி    ஒளியின் ஒற்றுமை…    ஓலை விசிறி ஒன்று    காற்றை    உத்தரவு    போட்டழைக்கும்    ஓலப் புயல் அடித்தால்    ஓங்கு பனைமரமும்    பறக்கும்    சூறைப் புயலோ    காற்றின் ஒற்றுமை…    காக்கும் கயிறைத்    தூக்குக் கயிறாக்கியக்    கண்ணாடிகளே…    வேதரசம்    பூசிக் கொள்ளுங்கள்    சத்தியம் உங்களில்    முகம் பார்க்கும்…    துவேசக் கற்களை    வீசிக் கொண்டால்    உங்கள் சிதறல்களில்    ஷைத்தானியம்    முகம் காட்டும்.    - பேரா. ஹாஜாகனி
Sahab Deen 06 December 09:13
கண்ணாடிக் கயிறு
December 5, 2010நம் நிலை நன்றாயில்லை
காரணம் – நாம்

ஒன்றாயில்லை…

பிறை மதி காண்பதிலும்

குறைமதி நமக்கு..

பிரிவதும், சரிவதும்

தொடர்கதை எமக்கு..

ஒரே இறை…

எத்தனைக் கூட்டங்கள்…

ஒரே மறை…

எத்தனைக் குழப்பங்கள்…

ஒரே பிறை

எத்தனைப் பெருநாட்கள்…

மார்க்கம் வலியுறுத்தும்

பிரியம் தெரியவில்லை நமக்கு

மார்க்கத்தை வைத்தே

பிரியத் தெரிகிறது…

நாம் செண்டுகளைப்

பரிமாறும்

பெருநாட்களில்

ஏகாதிபத்தியம்

குண்டுகளை வீசுகிறது…

பாலஸ்தீனம்,

ஆப்கானிஸ்தானம்

எரியும் ஈராக்

கருகும் காஷ்மீர்

பாங்கோசை

ஒலிக்கின்ற

பூமியெங்கும்

ரத்தம்…

இருந்தும் திருந்தவில்லை

இன்னும் நம் சித்தம்…

வேத வார்த்தையை

வாழ்க்கையாய் ஆக்கும்

கடமை மறந்தோம்

கொடுமை அடைந்தோம்…

நம் நிலை

நன்றாயில்லை

காரணம் – நாம்

ஒன்றாயில்லை…

இறைவனின் கயிறை

ஒன்றாகப் பற்றினாலே

சமுதாய ஒற்றுமை

உருவாகும்…

நம்மில் சிலர்

ஒற்றுமை என்னும் கயிறு

திரித்தார்கள்…

பிறகு

ஒற்றுமையாய்

இருப்பதில்லை

என்பதில் மட்டுமே

ஒற்றுமையாய்

இருந்தார்கள்…

ஒருவருக்கொருவர்

நாம் கண்ணாடிகள்

ஆனால்

எப்போதும் நமக்குள்

கல்வீச்சுக்கள்…

ஒவ்வொரு திசையிலும்

சிதறினோம்

காலமெல்லாம் நாம்

கதறினோம்…

இதயத் துணிகளை

இணைத்துத் தைக்க

பெருமானார்

தந்து சென்றது

வேத நூல்

நம் கைகளிலோ

இப்போது

பிரிவினைக்

கத்தரிக்கோல்

சிறு சிறு துளிகள்

நிலத்தில் மூழ்கும்

பெரு வெள்ளத்தில்

இந்த

நிலமே மூழ்கும்

வெள்ளம் என்பது

நீரின் ஒற்றுமை…

இருளிலும், காற்றிலும்

ஒரு சுடர் நடுங்கும்

சூரிய வருகையில்

காரிருள் அடங்கும்

சூரியப் பேரொளி

ஒளியின் ஒற்றுமை…

ஓலை விசிறி ஒன்று

காற்றை

உத்தரவு

போட்டழைக்கும்

ஓலப் புயல் அடித்தால்

ஓங்கு பனைமரமும்

பறக்கும்

சூறைப் புயலோ

காற்றின் ஒற்றுமை…

காக்கும் கயிறைத்

தூக்குக் கயிறாக்கியக்

கண்ணாடிகளே…

வேதரசம்

பூசிக் கொள்ளுங்கள்

சத்தியம் உங்களில்

முகம் பார்க்கும்…

துவேசக் கற்களை

வீசிக் கொண்டால்

உங்கள் சிதறல்களில்

ஷைத்தானியம்

முகம் காட்டும்.

- பேரா. ஹாஜாகனி

title

நண்பா

நீ என்னவாக இருந்தாய்..?
சத்தியமாக எனக்குத் தெரியாது.
நீ யாராகப் பார்க்கப் பட்டாய்?
உண்மையாகத் தெரியாது.
ஆனால்,
பிணங்கள் கிடக்கும்
என் நகரத் தெருக்களில்
நான் உணர்ந்தேன்.
ஒரு கழுகின் இரையாய்
வலியறிந்து காத்திருக்கும்
உன் வார்த்தைகளை,
உன் ஆன்மாவை
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்...
கொலையுண்டு போவதன் வலியை
ஒருகணம் நிகழ்த்திப் பார்க்கிறேன்
வன்மம் பீறிடும் நெடிய கைகளுக்குள் நசுங்கி
ஓலமின்றி ஒடுங்கிக் கொள்கிற மரணத்தை...
உனது பிணச்சாம்பல் படிந்த
இந்த வார்த்தையை அழிக்க முடியுமானால்
நான் நம்புவேன்.. நீ கொல்லப்பட்டதை
யாரும் செத்துப் போவதைப் பற்றி
எனக்குக் கவலையில்லை
எவராலும் கொல்லப்படாத வரை.

-தமிழன்

இந்தக்கவிதை உண்மையில் முழுமையாக இருக்கவில்லை. நான் 2,3 கவிதைகளை DJ தமிழன் என்ற பதிவாளரின் கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அவற்றை என் மனம்போன போக்கில் தொகுத்து ஒரு முழுமையான கவிதை வடிவில் தொடுத்திருக்கிறேன்.

வலிக்கிறது.

title

நீ யார்?

நீ யார் ?
மனிதன் தானா ?
அப்படியென்றால் எந்த ஊர் ?
என்ன மொழி ?
என்ன ஜாதி ?
ஜாதியின் உட்பிரிவென்ன ?
மதத்தின் உட்பிரிவென்ன ?
உட்பிரிவின் உட்பிரிவுகள் என்னென்ன ?
சரி உயரம் எத்தனை செ.மீ ?
நிறம் என்ன ?
கண்மணிகளின் நிறம் ?
சிவப்பா மஞ்சளா கறுப்பாவறுத்த காப்பிக்கொட்டையா ?
சொல்லு ஒவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு.
உன் ஆசாரங்கள் என்ன ?
அனுஷ்டானங்கள் என்ன ?
மரக்கறியா ? மிலிட்டெரியா ?
உன் கடவுள் யார் ?
உன் கடவுளுக்கும் என் கடவுளுக்குமுள்ள
வேற்றுமைகள் என்ன ?
சொல்லு ஒவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு
இறந்தால் புதைப்பீர்களா ?
அல்லது எரிப்பீர்களா ?
சரி குற்றவுணர்ச்சி உண்டா ?
ஆற்றும் பணிகளில்
உயர்வு தாழ்வுண்டா ?
பாவவுணர்ச்சி உண்டா ?
தாழ்வு மனப்பான்மை எத்தனை வண்டி ?
உன் கைவிலங்குகளை நான் பார்க்கலாமா ?
உன் கால் விலங்குகளைக் காட்டுவாயா ?
உன் கண்பட்டைகளை
உன் வாய்க்கூடைகளை
நான் பார்க்கலாமா ?
உன்னை நட்டுவைத்திருக்கும்
இந்தக் குழியின் ஆழத்தை
நான் பார்க்கலாமா ?
நீ யார்? மனிதன் தானே ?
அல்லது மனிதன் மாதிரித்தானே ?
அப்படியென்றால் எந்த ஊர் ?
என்ன ஜாதி ?
சொல்லு ஓவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு.

title

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது

எழுது
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி

நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி
எழுது

உன்னை ஏமாற்றும்
போலிப் புரட்சியாளர்கள் பற்றி
எழுது

சொல்லும் செயலும்
முயங்கி நிற்கும் அழகு பற்றி
எழுது

நீ போடும்
இரட்டை வேடம் பற்றி
எழுது

எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி
எழுது

எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி
எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை
நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-பசுவைய்யா

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “ ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்திற்காக சொல்லப்படும் விளைவுகளின் வழக்குகள் ஆகும். உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும் போது தன்னை அடக்குபவன். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உணர்ச்சி பூர்வமாக சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பல விடயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.


நாம் சொல்வதை மற்றவர்கள் மதிக்காத போது, நம்முடைய பிரச்சினைகளை உரியவர்கள் உடனே சரி செய்யாத போது, நாம் சொல்வது தவறு என மற்றவர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது, எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது இப்படி கோபத்திற்கான பல காரணங்களை நீட்டிக் கொண்டே போகலாம்.

மனிதத்துவம் என்பது சமூகத்தின் ஒரு அங்கம். அத்துடன் மட்டுமல்லாமல் அது சமூகத்துடன் ஒன்றியிருப்பதாகும். ஒருவருக் கொருவர் அனுசரித்து, பாராட்டி, உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். மனிதனின் வாழ்க்கையில் வெற்றிக்குத் தடையாகக் கூட கோபம் இருக்கலாம்.

கோபப்படுவதனால் எங்கள் சிந்தனை, கவனம், செயல் போன்றன ஒரு கணத்திலேயே சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நாள் திட்டங்கள், இலக்குகள் கூட சிதைந்து போகக் கூடும். இனிமையான உறவுகளை இழக்கவேண்டிய நிலை வரும்.

இவ்வாறு எத்தனையோ நாசக்கார வேலைகளை செய்து விடுகிறது கோபம். கோபம் போன பிறகு விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும். அடிக்கடி கோபப்படுவதனால் ஆரோக்கியம் குறைவடையலாம். இருதய நோய்க்கு ஆளாகவேண்டி வரும். விரைவில் முதுமை வந்து சேர்ந்து விடும். அதிகமாக கோபப்படுவதனால் மூளையைத் தாக்கும் பக்கவாத நோயாலும் பாதிப்படையக் கூடும்.
கோபம் வரும் போது குறித்த மனிதன் தன்னிலையை இழக்கின்றான். இதனால் இருதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் கூடுகிறது. படபடப்பு தன்மை வருகிறது. எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளும் தோன்றுகிறது. வாழ்நாளில் ஒரு நாளாவது கோபப்படாமலே இருக்க முடியாது. கோபம் என்பது மனித உணர்வுகளில் ஒன்று தான். அதை குறைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

கோபத்திற்கான முக்கிய காரணி வெறுப்பு. அதைக்கைவிட வேண்டும். கோபப்படும் போதெல்லாம் மற்றவரின் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். கோபம் ஏற்படும் வேளை மனதை வேறு திசையில் திருப்ப வேண்டும். நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். சுய கட்டுப்பாட்டை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். கோபம் வருகின்ற வேளை அதிகம் பேசாதீர். எவ்வளவு முடியுமோ அமைதியாக இருங்கள். (அதற்காக எல்லா விடயத்திலும் மௌனமாக இருக்க சொல்லவில்லை)

இவ்வாறு நடந்தால் கோபத்தைக் குறைக்க முடியும். நாங்கள் காலையிலேயே கோபப்பட்டு மனதைக் குழப்பினோமானால் அன்று முழுவதுமே வீண்பொழுது போல் ஆகிவிடும். கோபத்துக்கு ஆளாகும் எங்களுக்குத்தான் நட்டம். எப்போதும் விளைவுகள் எங்கள் பக்கமே! இன்றே புரிந்து கொள்ளுங்கள் கோபம் எங்கள் விரோதி.

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!
இதை நீங்கள் 4 வது நபராக வாசிக்கிறீர்கள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbHnvIgCuN3YqSJ7sclWmpwIqrRb6RxRSCUrYI8sA2zGE4xYBRO6mtfuMqeO7caujUGRtbH4v9sFWwYxpx3bh_k-4lTc1BfCI37Qlz3P8T-L7F1EQYKpmPdv-P6prhb7CqSEeb_qCJv5Uo/s320/roja.jpg

காற்றிலே உந்தன் சுவாசம்
நடக்கையில் உந்தன் நிழல்கள்
சிரிக்கையில் உன் கன்னகுளிகள்
உருவத்தில் நீ ஒரு நடிகன்
எனக்காக இந்த உலகில்
படைக்கப்பட்ட ஜீவன்
நீ தான் என்று நான்
உணர்ந்த நேரத்தில்
http://www.thedipaar.com/pictures/Love_Pain.jpg
தான் நீ எனக்கு
ஒரு வார்த்தை கூறினாய்
அது எனது தலையில்
ஒரு பாறாங்கல்லை போட்டது
போல் அல்லவா இருந்தது
நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்
http://www.toonpool.com/user/71/files/amor_killed_again_244115.jpg
கல்யாணம் பண்ணி
 கொள்ள ஆசை படுகிறேன்
அவள் வேறு யாருமல்ல
எனது ஆபீசில் வேலை
செய்யும் பெண் என்றாய்
இதற்கு மேல் நான் என்னத்தை சொல்ல
இதைத்தான் ஒரு தலை
காதல் என்பதா
அடடா எனக்கு இப்பத்தானே
புரிகிறது நான்
இப்படி ஏமாந்து விட்டேனே
http://www.loudent.co.uk/wp-content/uploads/2010/03/Love-is-Pain-Poster-500x382.jpg
இனி அழுதென்ன பயன்
மனதை தேற்றி கொள்ள
வேண்டியது தானே

அஸ்ஸலாமு அலைக்கும்,


முகம் இரண்டும்
விலகிச் செல்ல;
முதுகு இரண்டும்
ஒட்டிக் கொள்ள;
கட்டுப்பட்டோம் ஆங்கிலத்திற்கு;
“ஈகோ” என்ற ஒர் எழுத்துக்கு!

துண்டுப்பட்ட மனம் மட்டும்
விம்மி விம்மி கதற;
மெண்டு விழுங்கும்
நினைவுகளோ உன்னைக்
கண்டப்படித் தேட!

வீங்கிப்போனப் பாசத்தாலே
வெடித்து நிற்கும் பிரிவு;
நீர்த்துப்போகும் சண்டை
மட்டும் அணுதினமும் வரவு!

தனித்து நின்று
நினைத்துப் பார்த்தால்
சினம்கூடத் தணிந்துப் போகும்;
கனம்கூட இனித்துப் போகும்!

முற்றிப்போன அன்பினாலே
தொட்டதெற்கெல்லாம் வம்பு;
கண்பட்டவுடன் கலைந்துப் போகும்
மாயமென்ன இயம்பு!

தோற்று ஓடட்டும்
நாற்றமெடுக்கும் கோபம்;
மனம் கசந்து முகம் சிவந்தால்
யாருக்கென்ன இலாபம்!

தத்துவ பாடல் வரிகள்


மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLQMKaLj76aOX9uLRQH0qcIQvmdZEi5yjFMvm8yvnXExzQrWYk40VUGb-dZ7PodjUcGd9M_RATI6S3e0QsZsPpyhIyho6WcHXhNdZhBUpx-zip6y-y3HMdZthvvwE55-NteW7WB-2xqYo/s1600/love2.jpg
தாயின் பெருமை மறக்கின்றான்
தன்னலச் சேற்றில் விழுகின்றான்
பேய் போல் பணத்தைக் காக்கின்றான்
பெரியவர் தம்மைப் பகைக்கின்றான்

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxYXubLnhvCjN9NVNz-UeM8ohyphenhyphen4oD_N2qXX_URNDBPh5lF_7Jo9RjD34yzWl-mKgUSf9uTjFoeASgLSl-ttQXSiwo-Hdv7Amry-wFmsibvxL25nvYlxkjtiFZGTHBv02pMBViYlb0sT370/s1600/love.jpg
நிலை மாறினால் குணம் மாறுவான் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் - தினம்
சாதியும் பேதமும் கூறுவான் - அது
வேதம் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு
http://www.xaraxone.com/FeaturedArt/gs2003/assets/images/southwestern_love_affair.jpg
வாழ்க்கை யென்றால் ஆயிரமிருக்கும்
வாசல் தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை!
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதி-மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி.
 
இன்றைய சிந்தனை :
நீ கனவில் கண்ட பெண்ணை விட
உன்னை கருவில் கண்ட தாயை நேசி

 

மச்சி இதையும் கவனி


http://ma-rss.ru/kartinki/07/dety.jpg
ஒரு பெண்ணை நினை 
இன்னொருவரை காதலி 
வேறொரித்தியை கைப்பிடி 


வாழ்க்கை என்பது புதிர் 
அதில் விடை காண்பது கடினம் 

துன்பத்தை கண்டு அஞ்சி 
இன்பத்தை அனுபவிக்காதே 

வாழும்போதே சந்தோசமாக இரு 
இறக்கும் வரை .
http://www.zastavki.com/pictures/1920x1200/2008/Love_Heart_-_candle_011183_.jpg
இறைவனை பிரார்த்தித்து 
நல்வழியை நோக்கி செல் 

தீய செயல்களில் ஈடுபட்டு 
கெட்டவனாக மாறாதே 

உன் மனதில் உள்ள வேதனையை 
மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள் 
உன் மனச்சுமை குறையும் 

கிழமைகள் வாரமாகி 
வாரங்கள் மாதமாகி 
ஆண்டுகள் பிறக்கின்றன 
http://www.eatnplay.com.my/wp-content/uploads/medicom-toy-stitch-international-love-heart-bearbrick-01.jpg
சிரித்து வாழ்ந்து 
சந்தோசமாக 
உறவுகளுடன் இரு 
உன் மனம் அமைதி பெரும் 

சொத்து சேர்ப்பதில் குறியாக இராதே 
குடும்பத்தையும் கவனி 

 காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

காய்ந்த காயப்பட்ட
என் இதயத்தை விட்டு
பறந்து செல்ல
நினைத்து விட்டாய் நீ
பரவாயில்லை
பறந்து செல் கிளியே...

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் நதிகளின்
அருகில்,
பூக்களால் நிறைந்த வழியும்
நந்தவன சோலையில்,
பசுமையான இதயத்தில்
நிரந்தரமாக அமர்ந்து கொள்
உன் இனிமையான வாழ்வுக்காக.....

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

காயப்பட்ட என் இதயத்தில்
காதல் என்னும் போர்வையில்
ஓய்வு கொண்ட பட்சியே,
புது புது அர்த்தங்களை
என்னில் உணர வைத்த
உன் உறவினை,
உயிர் மூச்சு உள்ளவரை
மறக்க மாட்டேன்...

நீங்களும் நாங்களும்

அந்தியிடம் மயங்கும் ஆதவனுக்கு
அதிகாலையில் எத்தனை ஆணவம்?

மானிடரை விழ்த்தும் மதி உனக்கு
எங்கள் மயக்கத்தில் எத்தனை ஆனந்தம்!!!

பரந்து விரிந்த வான்மேகமே
உன் தெரிந்த மார்பில் எத்தனை கொண்டாட்டம்!!!

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களே
உங்கள் எண்ணிகையில் ஏன் இந்த ஆதிக்கம்?

குளிர்ந்து பொழியும் வான் மழையே
உன் நடனத்தில் எத்தனை களியாட்டம் !!!

ஓங்கி வளர்ந்த மாமலையே
உன் கம்பிரத்தில் எத்தனை டாம்பிகம்!!!

வளைந்து ஓடும் நதிப் பெண்ணே
உன் வளைவில் எத்தனை ஒய்யாரம் !!!

தன்னை தானே சுற்றும் பூமியே
உன் அமைதியில் எத்தனை ஆர்பாட்டம் !!!

ஆரபாட்டமாய் கொட்டும் அருவியே
உன் அழகில் எத்தனை பெருமிதமோ !!!

சில் என்று வீசும் தென்றல் காற்றே
உன் வருடலில் எத்தனை பேரின்பம் !!!

பொங்கி எழும் பெருங்கடலே
உன் அலைகளுக்கு எத்தனை அர்த்தங்கள் !!!

வசந்தங்கள் தரும் பருவம்களே
உங்கள் மாற்றத்தில் எத்தனை பயன்களோ !!!

திக்கு தோறும் திகட்டாத செல்வங்கள்
அத்தனையும் எங்கள் செயல்களுக்கு ஆக்கங்கள் !!!

பஞ்ச பூதங்களாய் இருந்து பயன் தருகின்றீர்
எங்கள் பாழ் மனங்களுகே பலன் தருகின்றீர் !!!

இத்தனை இருந்தும் போதவில்லை
எங்களுக்கு இறுமாப்புக்கு மட்டும் குறைவில்லை!!!

நிம்மதி இன்றி வாழ்கின்றோம்
யாருக்கும் பலனே இன்று சாகின்றோம்!!!!!!!!!


ரங்கா,ஜீவன்,வால் பையன் அழைத்த அழைப்புக்கு இணங்க,பிடித்தும் பிடிக்காமல் வாழ்வது வாழ்க்கையாக மட்டுமே இருக்கட்டுமே வழியில் வருவோர் வேண்டாமே....


மனிதனாய் வாழ பிறந்துவிட்டு

மகாத்மாவாய் இருக்க நினைப்பானேன்

பிடிக்காதவரை விட்டு விட்டு

பிடித்தவரை ஒரு பிடி பிடிப்போமே!!!

அரசியல் செய்யும் அரசியல்வாதி பற்றி வேண்டாம்

அவதூறு பேசும் அத்து மீறுவோர் பற்றி வேண்டாம்

தன் எண்ணத்தை எழுதும் எழுத்தாளன் வேண்டாம்

காதலும் கருத்தும் சொல்லும் கவிஞனும் வேண்டாம்

பிறரை இயக்கும் இயக்குனர் வேண்டாம்

அவரால் இயங்கும் நடிகர் நடிகைகள் வேண்டாம்

இசையில் மயக்கும் இசையமைபாளர் வேண்டாம்

இனிமையாய் பாடும் குயில் குரல்கள் வேண்டாம்

வம்பை அளக்கும் வாய்ச்சொல் வீரர்கள் வேண்டாம்

என்னை அன்பால் ஆளும் பதிவுலக நட்புக்களே உங்கள் பாசத்தை இங்கு பகிர்ந்திடுவேனே

பணம் பந்தியிலே.................

அன்பை சொல்கிறேன் என்று
அழகானவள் ஒருத்தி வந்தாள்
பாக்கெட்டில் பணவீக்கம் என்றதும்
மனதால் அவள் நொந்தாள்

பணம் பார்க்கும் மனங்கள்
மனம் பார்க்க விரும்புவதில்லை
கல்லாகி போன மனங்கள்
கரைந்தாலும் கரைவதில்லை

உறவை சொல்வோர் எல்லாம்
நிறைவை தருவதில்லை
ஈரம் இருந்தால் மட்டுமே
இரங்குகிறது இதயங்கள் கூட

பரிவு என வருவதெல்லாம்
பணத்தை தான் தேடுகிறது
உறவென வருவதெல்லாம்
ஊட்டத்தை மட்டுமே நாடுகிறது

காசில்லா கோலத்திற்கு
கடவுள் கூட இரங்குவதில்லை
கடனாளியாகிவிட்டால்
கட்டிலில் கூட இடமில்லை

உடன் பிறந்தேன் என்பவர் எல்லாம்
நாம் உருக்குலைந்தால
உடன் இருப்பதில்லை
பத்து மாதம் சுமந்த உறவும்
படுக்கைக்கு துணை வந்தால்
நம்மை நினைப்பதில்லை

காசு பார்க்கும் கலிகாலமடா
இதில் காண்பதெல்லாம் பொய் வேஷமடா....


ஒயாமல் பெய்யும்
மழையை ஓய்வெடுக்க சொல்
கேளாது போனால்
உன் முத்தம் ஒன்றை
தந்து மூர்ச்சையாக்கிவிடு
துவைத்த துணிகள்
காயாமல் இருக்கிறது
பருவமழை என்று
பசப்பிக்கொண்டிருக்கிறது வானம்
உன்னை பார்க்க தான்
வந்திருக்கு என்பது
எனக்கு தெரியாதென்று நினைத்துக் கொண்டு..

அவனை தொடுவதற்காகவே
பெய்து கொண்டிருக்கிறது மழை
அவனோ என்னை தொடுவதற்காக
ஒளிந்துக் கொண்டிருக்கிறான் வீட்டில்...


நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த காளான்
பாடுகிறது
மழை வருது மழை வருது
குடை கொண்டுவா என்று...


நாட்காட்டியில் பக்கங்கள்
குறைந்த வண்ணமாய் இருக்க
சற்றும் வேகமில்லை உன் மெளனத்தில்
உலுக்கிய போதும் நீ திடுக்கிட்டு பார்க்கவில்லை
தீர்க்கமாய் தெரியும் இனி வரும்
பொழுதுகள் எனக்கானவை என்று!!!
முழு நேர பணியாளனாய் நீ
பகுதி நேரம் கூட பங்கிடவில்லை எனக்காய்
இருந்தும் உனக்குள் ஈரம்
என்னை ஈன ஸ்வரமிட செய்யாமல்
இன்னும் காம்போதியில் தான் நம் காதல்
உனக்கும் இசை பிடிக்கும்
என் சிரிப்பை மொத்தமாய்
குத்தகைக்கு எடுத்த மமதையில் நீ
இப்போது மெளனத்தை சொல்லி
இசைக்கு மொழியில்லை
என்றானதெல்லாம் போய்
ஒலி இல்லை என்றும் சொல்ல முற்படுகிறாய்
கேட்டால் என் பார்வைஎன்ன சத்தமிட்டா
பேசுகிறது உன்னிடம் என்ற விதண்டா வாதம் பேசுகிறாய்
நீ எப்படியிருந்தால் எனக்கென்ன
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு...

title

தேங்கிக்கிடக்கிறது
தொலைதூர கனவுகள்
காதலை புறம் தள்ளி
பார்க்கிறேன்...

விட்டத்தில் தங்கியிருந்த
பூனை புதிதாய்
பார்க்கிறது என்னை...

காலார நடக்க
மொட்டை மாடி போனேன்
வழுக்கி விடுகிறது
அன்று பெய்த மழையில்
தேங்கி நின்ற தண்ணீரால்
தோய்ந்த பாசி

அடுக்களை போனேன்
தாறுமாறாய் தட்டுமுட்டுச்
சாமான்...
வெடுக்கென வெளியேறினேன்

புத்தக அலமாரியில்
அடிக்கிவைத்த புத்தகம்
அச்சுப்பிசகாமல்
அசையாமல் கிடக்கிறது..
அங்கு குட்டிப் போட்ட
எலி ஒன்று சத்தம் கேட்டு
மிரண்டு ஓட....

ஏதுவும் புரியாமல்
தெருவில் நடந்தேன்
புதுசாய் பார்த்து
புறம் பேசினிர்
அண்டைவீட்டார்...

கடைக்கு சென்று
பேனா விலை கேட்டேன்
அன்னியமாய் பார்த்த
கடைக்காரர் கேட்டார்
என்ன விலையில்
வேண்டும் என்று?

எதுவும் புரியவில்லை
எனக்கு ..
எங்கிருக்கிறேன் நான்?

காதலை புறம் தள்ளியதால்
புதிதாய் தெரிகிறது
உலகம் எனக்கு....

போர்த்திக் கொண்டு படுக்கிறேன்
புலப்படாத கேள்விக்கு
பதில் எழுத பழக.......


குறிப்பு: புகைப்படம் என் மகன் அலைபேசியில் எடுத்தது..

title

எப்படியிருக்கேன்!
என்றாய் ஒரு நாள் உன்
புகைப்படம் ஒன்றைக் காட்டி..

வழக்கம் போல
வேடிக்கையாய் பேசி
விடைபெற்றுக் கொண்டேன்

இன்னும் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன் எப்படி
இருக்கிறாய் என்று?

அன்று கேட்ட நீ
அடுத்த
வேலைப் பார்க்க
சென்று விட

எப்போது வருவாய்
என்று உன்னை
கேட்பதே என்
வேலையாகிவிட்டது

அகர முதல
எழுத்தெல்லாம்
அவன் பெயரே என
நான்

வடம் இழந்த தேராய்
வலுவிழந்த புயலாய்
செயல் மறந்த மதியாய்
உனை சேராதிருப்பது
என் விதியா என

எப்படியிருக்கேன்! என
நீ காட்டிய புகைப்படத்தை
பார்த்து புலம்பியவாறே.....


நெறிமுறை வரைமுறை என
நான் உனக்கேதும் வகுக்கவில்லை
நெற்றிக் கண் யாரும் திறக்கவில்லை
வழக்கமாய் வரும் எதிர்வினை தான்

வடுவாய் நின்றது இம்முறை
நிறைகள் என்றும் எனக்கு நேர்மறை
நானாய் இருந்த எனக்குள்ளே
நீயாக இருக்கச் சொல்லி நுழைந்திட்டாய்

புன்னகையின் பரிமாற்றம் மட்டுமே
புரிதலாய் இது வரை..
அவசர நிலை பிரகடனமாய்
ஏனோ என்னை அகற்றி எறிந்துவிட்டாய்!!!

திரை போட்டு முகம் மறைக்கிறாய்
எனக்குள் நிறைந்திருப்பது அறியாமல்
அடைமழைக்காலத்து காளானாய்
அறுவடையான என் காதல்

முளைத்த இடம் கூட தெரியாமல்
முகவரி இன்றி தொலைந்ததேனோ?
வந்த சுவடழித்த காதலேனே
வடுக்கள் மட்டும் ஏன் விட்டுச் சென்றாய்

எத்தனை நாள் தான் சும்மாவே இருப்பது நம்மளும் நாட்டாமை பண்ணலாமுன்னு
கிளம்பிட்டேன்..வாங்க நீங்களும் கூட ஒரு ரவுண்டு அட கட்டிங் இல்லைங்க ஊரை
பார்த்துட்டு வரலாம்...தமிழாகிய நான் புறப்பட உடன் தமிழ் அழுதன் வர
....விரும்புபவர்கள் வரலாமுங்கோ......

முதல்ல சந்தித்த நபர் ரோட்டோரம் இட்லி விற்கும் பெண்
நான் : ஏம்மா எத்தனை நாளா இந்த வியாபாரம் பண்றீங்க. இதில் உங்களுக்கு போதுமான
அளவு வருமானம் வருதா?
பெண்மணி : வா கண்ணு குந்து..இந்தா நீயும் ரெண்டு இட்லி துன்னு
நான் : சுற்றப்புறத்தை பார்த்து அருவெறுத்து மறைக்க தெரியாமல் முகம் சுளிச்சி
எனக்கு வேணம்மான்னு சொல்ல
பெண்மணி: நாங்க பசிக்கு சம்பாதிக்கிறவங்க.ஏதோ பொயப்பு ஓடுது தாயி சுத்தபத்தமா
செஞ்சாலும் இந்த மாதிரி இடத்தில யாவாரம் பண்ணமுடியும். கூலி வேலைக்கு போறவங்க
வண்டி இழுக்கிறவங்க..உஸ்கோலுக்கு பிள்ளைக்கு இட்லி வாங்கி குடுக்குறவங்க இங்க
நிறைய கிறாங்கோ..என்னமோமா எங்களுக்கு ஒன்னு வரதில்ல அந்த மாரியாத்தா
புண்ணியத்தில...அட போ தாயி போற உசிருக்கு எதுக்கு இம்புட்டு மரியாதை..எப்பூடியோ
எங்க காலம் ஓடுது.சரிம்மா கொஞ்ச தள்ளி குந்திக்கோ கிராக்கி வருதுன்னு சொல்ல
நான் கிளம்பறேன்..




அடுத்த சந்திப்பு குடிமகனிடம்

தள்ளாடிக்கிட்டே வரும் நம்ம முனிசாமியண்ணன் கிட்ட போயி
என்னண்ணா தினமும் சம்பாதிக்கிறத இப்படி குடிச்சிட்டு வரியே வீட்டுக்கு என்ன
கொடுப்ப..
பொங்கியெழுந்த முனுசாமி யாருமே நீ என்னைய பார்த்து என் பொண்டாட்டி கூட கேள்வி
கேட்க மாட்டா யாரு நீ?
அப்படியே கோவம் பொங்க மூக்கு வேர்க்க கூடவே இருந்து என்னை குழியில் தள்ளும்
நம்ம ஜீவன் அதாங்க நம்ம தமிழ் அமுதன் என்ன அவரை இப்படி சொல்றேனேன்னு
பாக்கறீங்களா? இந்த ரம்யா தான் அவரை நல்லவரு வல்லவருன்னு சொல்லுது நீங்க
எல்லாம் அவரை அண்ணன் மன்னன்னு சொல்றீங்க..ஆனால் இவரு பண்ற அலம்பு இருங்க இருங்க
வரேன் வந்து சொல்றேன்

அந்த முனுசாமி என்னை அப்படி திட்டினால் தமிழ் அமுதன் சொல்றாரு இதுக்கெல்லாம்
பயந்து பின்வாங்காதீங்க நாட்டாமை பண்ணனுமுன்னா இதெல்லாம் பொருத்துக்கனுமுன்னு
சொல்றார்...ம்ம்ம் இதுல என்ன என்னை வம்புல மாட்ட வைக்கப்போறார்ன்னு தெரியலை.சரி
முனுசாமியண்ணன்கிட்ட பேசலாம் வாங்க..
அண்ணே சொல்லுங்கண்ணேன்னு கொஞ்ச மனசு மாறின அவர் சொல்றார் யம்மா பொயுதோட கிளம்பி
போன பொயிது போறவரிக்கும் மூட்டை தூக்கி முதுகெல்லாம் செத்து போயிடும் முட்டி
எல்லாம் உடைஞ்சி போறமாதிரி வலி..இப்படி கல்லு மண்ணு தூக்கறவன் எல்லாம் எதோ வலி
தெரியாமல் இப்படி ஒரு சந்தோசத்துல எங்கள மறந்துறோம்.இன்னும் நெறைய இருக்குது
சொல்ல.. நீ என்னடான்னா கேவ்வி கேக்கிற கேக்வின்னு சொல்ல முனுசாமிகிட்ட கேட்க
சொல்ல நிறைய இருந்தாலும் மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சி கிளம்பிட்டோம் நானும்
தமிழும்கண்ணாயிரத்தை ஜெயில்ல போய் சந்திக்கிறோம்
தல சவுக்கியான்னு தமிழ் அமுதன் கேட்க எனக்கு மட்டும் உயிர் மேல பயம்
வந்துடுச்சி..ஏடாகூடமா கேட்டு வெச்சி வெளிய வந்தவுடன் என்னைய போட்டு
தள்ளிடுவானோன்னு..
தேவையில்லாமல் இங்க மரியாதை கூட்டி நான்
ஏங்க கண்ணாயிரம் வெள்ளச்சாமியை வெட்டிட்டீங்க..ஏம்மா அது தெரியாமயே என்ன கேள்வி
கேட்க வந்துட்டியா..என் வரப்புல போற தண்ணிய அவன் வெட்டி அவன் நிலத்துக்கு
பாய்ச்சிக்கிட்டா நா என்ன பொட்டைப்பயலா வெட்டி சாய்ச்சிப்புட்டேன்ன்னு கெட்ட
வார்த்தையில் திட்டறார்..
ஏங்க கொஞ்ச விட்டு கொடுத்து இருந்தால் இப்ப நீங்க ரெண்டு பேரும் நல்லாயிருந்து
இருப்பீங்க இப்ப அவர் உயிரோட இல்லை நீங்க ஜெயில்ல உங்க ரெண்டு பேரோட குடும்பம்
நடுத்தெருவில் பசியும் பட்டினியுமான்னு தமிழ் அமுதன் சொல்ல ஆமான்னா அப்பறம்
யோச்சிச்சா அவசரப்பட்டுட்டோமோன்னு தோனுது...இப்புடி தான்னா உள்ள இருக்க என்ன
மாதிரி ஏய பாயி எல்லாம் ஆத்திரல தப்பு பண்ணிட்டு கம்பி எண்றோம் ஆனால் நாங்க
எதையும் ப்ளானெல்லாம் பண்ணி பண்ணலான்னா அந்த நேரம் கோவம் குடி ரெண்டு கண்ண
மறைச்சிடுது..ம்ம்ம் இருக்கப்பட்டவனுங்க ஏதேதோ பண்ணிட்டு உள்ளவரது தெரியாம
வெளிய போயிறானுங்க.. நாங்க தான் எங்க ஆயுச இப்படி தொலைக்கிறோம்..பாழாய் போன
மனசு அவன் சொல்றதும் சரின்னு சொல்ல ரெண்டு பேரும் அங்கிருந்து வெளிய வரோம்..

தமிழ் போதும் போலாமுன்னு சொல்ல அமுதனுக்கு கோவம் என்ன தமிழ் நான் எவ்ளோ
கஷ்டப்பட்டு அந்த சினிமா நடிகைக்கிட்ட அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன் நீ
போலாமுன்னு சொல்றன்னு கோவிச்சிக்க...சரி சரி முறைக்காதீங்கன்னு சொல்லி
மனசுகுள்ள அவரை திட்டிக்கிட்டே போறேன் அங்க வந்து வழியட்டும் வச்சிக்கிறேன்
கச்சேரியைன்னு கிளம்பறோம்

அனுமதி சீட்டு காட்டியதும் கேட் திறக்க காலிங் பெல் தானே அடிக்க வேண்டும் என்று
அடம் பிடித்துக் கொண்டு தமிழ் அமுதன்..பாட்டு ஒன்னு நான் பாடடட்டுமா பால் நிலவ
கேட்டுன்னு பாடுது காலிங்பெல்

கதவை திறந்த வேலைக்கார அம்மாவிடம் என்னை பேச அனுமதித்தார் அமுதன்

நடிகை...................... பார்க்கனும் எங்களை 7 மணிக்கு பேட்டி எடுக்க
வரச்சொன்னாங்கன்னு நான் சொல்ல..அந்த பெண் கோவமாய் ஏழு மணிக்கு சொன்னா இப்படி
5.30க்கு ஏன் வந்திங்கன்னு சொல்ல அமுதனை முறைக்கிறேன்..சரி சரி வந்து
வெயிடிங்க் ஹால்ல வெயிட் பண்ணுங்க நான் மேக்கப் போட்டுட்டு வரேன்னு சொன்னதும்
என் பக்கத்தில் தொபக்கடீர்ன்னு ஒரு சத்தம் நம்ம தமிழ் அமுதன் தான் மயங்கி
விழுந்தார்..அட அழகில மயங்கி விழுந்துட்டாரா அதிர்ச்சியில் மயங்கி
விழுந்திட்டாரா தெரியலை... நடிகையிடம் நான் மட்டுமே கேள்வி கேட்டேன்..
(மேக்கப் இல்லாமல் நடிகையை பார்த்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதவராய்)

8.30 மணி கடைசியாய் அந்த தொழில் அதிபருடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்...உணவு
ஆர்டர் பண்ண எல்லாமே பத்திய்மாய் அவருக்கு சொன்ன உணவு வகைகள் என்னங்க சார்ன்னு
கேட்டால் பட்டியலாய் பல வியாதிகள் சொன்னார் எவ்ளோ இருந்து என்ன பண்ண வாய்க்கு
ருசியா சாப்பிடமுடியலையே.. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர்
பார்த்துகிட்டோம்..பேசாமல் பேசிக்கொண்டோம்..பூமத்திய ரேகை மாதிரி ஒரே
நேர்க்கோட்டில் இருப்பதில்லை வாழ்க்கை.. நாணயத்தின் ரெண்டு பக்கம் இரவு பகல்
இன்ப துன்பம் நல்லது கெட்டது ..வாழ்க்கைப்பாடம் மேலும் ஒன்று படித்த வலியோடு
தமிழிடமிருந்து தமிழ் விடைபெற....அட வர்ட்டா நான் தாங்க ரஜினி ஸ்டைலில்
சொல்லிப் பார்த்தேன் அதுக்கு தான் ரஜினி இருக்கார் நீங்க கிளம்புங்கன்னு
சொல்றார் தமிழ் அமுதன் என்னை.....


நெறிமுறை வரைமுறை என
நான் உனக்கேதும் வகுக்கவில்லை
நெற்றிக் கண் யாரும் திறக்கவில்லை
வழக்கமாய் வரும் எதிர்வினை தான்

வடுவாய் நின்றது இம்முறை
நிறைகள் என்றும் எனக்கு நேர்மறை
நானாய் இருந்த எனக்குள்ளே
நீயாக இருக்கச் சொல்லி நுழைந்திட்டாய்

புன்னகையின் பரிமாற்றம் மட்டுமே
புரிதலாய் இது வரை..
அவசர நிலை பிரகடனமாய்
ஏனோ என்னை அகற்றி எறிந்துவிட்டாய்!!!

திரை போட்டு முகம் மறைக்கிறாய்
எனக்குள் நிறைந்திருப்பது அறியாமல்
அடைமழைக்காலத்து காளானாய்
அறுவடையான என் காதல்

முளைத்த இடம் கூட தெரியாமல்
முகவரி இன்றி தொலைந்ததேனோ?
வந்த சுவடழித்த காதலேனே
வடுக்கள் மட்டும் ஏன் விட்டுச் சென்றாய்

title

அன்பே!

நானும் நீயும் மட்டுமே உள்ள ,அதிசயமாய் நமக்கு வாய்த்த ,விடுமுறை நாளை கழிக்கப் போகிறோம் வா !

வானில் பகலவன் தோன்றும் முன் தளராது எழுந்து கடற்கரை நோக்கி விரைநடை போட்டு உதிக்கும் சூரியனை  அலைகள் கால்கள் தழுவ வரவேற்று மகிழ்வோம்

இளமையான பின் காலைப் பொழுதில் நமக்கு மிகப்பிடித்த வயலின் இசை பின்னணியில் முழங்க நமக்கு நாம் தேர்ந்தெடுத்த சிறு உணவு உண்போம் .

பொடிநடை நடந்து நம் வயல் ஒட்டிய ஆற்றினூடே பாடிக்கொண்டே நீரில் திளைப்போம் .

பின் நீ காய் நறுக்க நான் சோறு வைக்க அன்பை கலந்து அங்கே சமைக்கும் நேரம் கொஞ்சம்   கவிதையும்  வாசித்து பார்ப்போம்

உனக்கு பிடித்த வரிகளை நீ சிலாகித்து எனக்கு புரியாத வரிகளை புரியவைத்து கவிதை நம்முள் அசைய அதை உற்று நோக்கி பரவசம் கொள்வோம்

எனக்கு மிகப்பிடித்த பின் மதியப் பொழுதில் நம் வீட்டு வாசலில் காற்று நம்மை தழுவி அணைக்க ஏதும் பேசாமல் கைப்பற்றி மௌனம் சுவைப்போம்  

அப்படியே என்ன் மடி சாய்ந்து உறங்கி விடுவாய் நீ.குழந்தைபோல் உறங்கும் உன் தலை கோதி உன் முகம் ரசித்து புன்னகைப்பேன் நான் .

கண் திறக்கும் நீ என்னவென்று கேட்க ,ஏதுமில்லை என  நான்  தலையாட்ட பொன்னால் ஆக்கப்பட்ட கணங்கள் அல்லவா அவை ?

ஞாயிறு மறையத் தொடங்கியதும் நாம் திரும்ப நடக்கத் தொடங்குவோம் .

உலகமே வியக்கும் நம் கோயில் சிற்பங்களின் நுணுக்கம் வியந்து சேர்ந்து ரசிப்போம்

சோழரும் பாண்டியரும் சேரனுமான  தமிழக வரலாற்றை சொல்லிக்கொண்டே வருவாய் நீ .அதில் திளைத்து, ஆண்டுகள் ஆயிரம் கடந்த வாயிலில் சிலிர்த்து நிற்ப்போம் நாம் .

எப்பொழுதும் எனக்கு தர எத்தனை விஷயங்கள் உன்னிடம் உள்ளன!

அந்த இளஞ்சூடான கருங்கல்லில் அமர்ந்து இலக்கியம் ,சித்தாந்தம்,காதல்,மனவியல் என சகலமும் கதைப்போம் நாம்

நிலவு வானில் நடக்கும் நேரம் ;இரண்டு வெள்ளரிக்காய்களை வாங்கி சுவைத்துக்கொண்டே நிலவொளியில் கடலைக் காணச்செல்வோம் .

எத்தனை பருகினாலும் தீராத தாகத்தோடு நிலவையும் கடலையும் உண்டு தீர்த்து மனதில்லாமல் வீடு ஏகுவோம்.

மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து அந்த குளுகுளுக்கும் காற்றில் நிலவொளியில் நம் மனம் கவர்ந்த கீதம் இசைக்க புன்னைகையோடு உறங்கச்செல்வோம் .

எப்போதோ வாய்க்கும் இந்த நாளில் உன்னை விட்டு சிறிதும் விலகக்கூடாதென கைப்பற்றியே உறங்கி விடுவேன் நான்

உறங்காமல் நிலவொளியில் என்னையே பார்த்திருந்ததாக

ப்ரிய சகி



நம் குழந்தையை நீ முத்தமிடும் போதெல்லாம்
நீ எனக்கு தந்த முத்தத்தின் நீட்சிதானோ இதுவென
நினைக்காமலிருக்க முடியவில்லை.

***********************************************

நம் அலுவலகத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்
கொண்டு அந்தக் கடற்கரையில் கால்கள் நனைத்து
திரிந்தோமே அந்த மணற்துகள்கள் இன்னமும்
உதிராமல் ஒட்டிக்கொண்டிருக்கின்றன மனசுக்குள்.

***********************************************

நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
அது நம் காதலின் அதிர்வென.

***********************************************

என் காதலுக்குச் சம்மதம் சொன்ன அன்று நீ
உடுத்தியிருந்த புடவையில் நம் குழந்தைக்குத்
தொட்டில் கட்டிய போது எனக்குத் தோன்றியது
அது நம் காதலின் வெற்றிக் கொடியென.

***********************************************

அன்று நம் காதலுக்காகவே இளையராஜா மிக
இனிமையான பாடல்களைத் தந்தார் என்று
சொன்னால் இளையரஜா ரசிகர்கள் மிகவும்தான்
கோபித்துக் கொள்கிறார்கள். அவர்களை
மன்னித்து விடு சகி.

***********************************************

Sunday, November 14, 2010

களைதல்



திருமண
விருந்து
முடிந்ததும்
ஆபரணங்களைக்
களையும்
மணப்பெண்ணைப்
போல்
தன்னை
வெளிப்
படுத்திக்
கொள்கிறதென்
கவிதை.

மரத்தடி.காம் குளிர்கால புதுக்கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
ள்ளிரவில் திடுக்கிட்டுக்
கனவோடு கரணம் தப்பிய
உறக்கத்தை
மறுபடி கண்களுக்குள் சொருக
எடுத்துக்கொண்ட பயிற்சிகள்
தோல்வியுற்றிருந்தன.
ஆக
உணர்வுநிலையில்
மல்லாந்தபடி
முதல் பறவையின்
குரலுக்காய் வெகுநேரம்
விழித்திருக்கவேண்டியிருந்தது.
மெல்ல ஒரு காகம் கரைந்தது.
தொடர்ந்து பல.
நட்சத்திர வைரங்களின்
எண்ணிக்கையை சரிபார்த்துவிட்டு
இருள் மையை
ஒரு ஆரஞ்சுக் கைக்குட்டையால்
ஆகாயம் துடைக்க ஆரம்பிக்கும்போது
எழுந்துகொண்டேன்.
இனி தாமதிக்கலாகாது.
பிறந்ததிலிருந்து எரிந்து தீர்த்த
உயிர்ப்பொருளின் மிச்சத்தில்
ஓட ஆரம்பித்தேன்.
நேற்று
விட்ட இடத்திலிருந்து.
வேகமாக. சீராக.
எனக்குமுன் ஓடியவன்
வேகத்தையும்
என்னை
முந்த நினைப்பவன் வேகத்தையும்
மிஞ்சியதா தெரியவில்லை…
உதிர்ந்து உலர்ந்த சருகுகள்
மிதிபடுகிற ஒலியுடன்
தொடரும்
என் ஒற்றை ஓட்டத்தின் உத்வேகம்.
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
எல்லோருடையதைப் போலவும்
தூரமும் எல்லையும்
நிச்சயமற்று நீண்டுகிடந்த
என்னுடைய பாதையில்.
காலிடறிக் கவிழ்ந்த இடத்தில்
நெற்றியின் இரத்தம்.
பெயர்ந்த நகங்களின் வலி.
நித்திரை இழந்த
கண்களின் எரிச்சல்.
உச்சந்தலை நரம்பில் எரிகிற
வெயில் தழல்.
கால் தசைகளின் பெருந்தளர்வு.
பெருக்கெடுத்த தாகம்.
எவையும் ஒரு பொருட்டல்ல.
ஓடிக்கொண்டிருத்தல் அவசியமானது.
ஒரு நதி மாதிரி…
உலரும் வரை.
அது தவிர்க்க இயலாததும் கூட.
மீண்டும் பறவைகள்
அடைகிற வேளைக்குமேலும்
கொஞ்சம் தாமதமாய்
பகலில் சேகரித்த கனவுகளோடு
வேர்கள் அடர்ந்த ஒரு
மரத்தின் மடிக்கு
இளைப்பாறத் திரும்புவேன்
என்பது நிச்சயம்.
அதுவரை
ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
உயிர்த்திருத்தலின்பொருட்டு.

title

எழுத தெரியும்?

Wednesday, August 06, 2008


எழுத தெரியும்?
வெறென்ன தெரியும் எனக்கு!
எழுத மட்டும் தான் தெரியும்.
காத்திருப்பது;
கடலை போடுவது;
கண்ணே மணியே என கொஞ்சுவது;
கண்விழித்து காசை
காலா(call)க்கி கதையடிப்பது;

கைகோர்த்து ஊர்சுத்துவது;
கடலை வாங்கி கொரித்து கொண்டு,
கடலை வெறித்து பார்த்துக்கொண்டு,
கடற்கரையில் கடனே என்று உட்கார்ந்திருப்பது;
கடற்கரை படகின் மறைவில்
கள்ளத்தனமான சீண்டல்கள்,
கன்னத்திலொரு முத்தம்;

கைப்பிடிப்பதற்கு முன்பு
கவலையில்லாமல் சுற்றி,
கண்ணில் படுவதையெல்லாம்
காதலின் அன்பளிப்பாக வாங்கி,
காதலுக்காக கடனையும் வாங்கி,
கடமையைக் கூட மறந்திருப்பது;
கண்விழித்த நாள் முதல்
கண்ட கண்ட நாட்களுக்கெல்லாம்
கார்ட் வாங்கி கொடுப்பது;

இவையெல்லாம் எனக்கு தெரியாது தான்...

என் நன்பன் கேட்டான்
"என்ன காதல்டா இது?"

எனக்கு எழுத மட்டும்தான் தெரியும்.
அதுவும்
உன்னை பற்றி மட்டுமதான் எழுத தெரியும்.

சொல்ல மறந்துவிட்டேனே!!!

நான் மேலே சொன்னதில்
எதுவுமே செய்யாமல்...
காதலியே!!
உன்னை எனக்கு காதலிக்கவும் தெரியும்.
அதற்காக என்னையே கொடுக்கவும் தெரியும்.

title

டெட்லைன்


Read More......

Tuesday, December 08, 2009


ஒவ்வாமை



உன்னிடமிருந்து
களவாடப்பட்டுவிடுகின்ற
ப்ரியங்கள்
பறவைகளாகி...
என்னை கேலி செய்கின்றது!
ப்ரியங்களை வெடுக்கென்று
புடுங்கி விடுகின்ற..
பக்குவமில்லை எனக்கு!

நான் நண்பனாகவே ...
இருந்திருக்கலாம்தான்!

- ரசிகவ்


Read More......

Saturday, August 22, 2009


மறக்க முடியாத ஆகஸ்ட் மாதங்கள்




2005 - ஆகஸ்ட் மாதம்
துபாயில் இருந்து இந்தியா வந்திருந்த நாட்களில் என் கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாமென சென்னைக்குச் சென்றேன்.

நான் கல்லூரி முடித்தவுடன் அப்பொழுதுள்ள ஐடி துறையின் வீழ்ச்சியால் எனது
உறவினர் அனுப்பிய விசாவில் துபாயில் ஏதாவது வேலைக்குப் போகலாமென்று சென்றுவிட்டேன். ஆனால் இங்கு என்னுடைய் சமகாலத் தோழர்களுக்கு பல போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றது.

எப்பொழுதுமே கேலியான பேச்சுக்கள், ஜாலியான நாட்களாகவே கடந்து
வந்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழையும்பொழுது ஒவ்வொருவரும் நிகழ்த்திய ஆரம்பகாலப் போராட்டங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் சில சமயம் வலியைக் கொடுக்கும்.

கல்லூரியின் ஒவ்வொரு பீரியடின் இடைவெளியும் கேண்டீன், கிண்டல், வெட்டிப்பேச்சு என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் எங்களுக்குள்.
அப்படி உள்ள நண்பர்கள் இப்பொழுது எப்படியிருக்கின்றார்கள் என்று அறியவும்
அவர்களையெல்லாம் சந்தித்து மனம் விட்டுப் பேசலாம் என்று ஆவலுடன் சென்றுகொண்டிருந்தேன்.
எனது நெருங்கிய நண்பன் ஒருவனின் முகவரி கிடைத்தது. என்னுடைய எம்சிஏ நண்பன் அவன். அவன் அயனாவரம் பக்கம் ஒருஅறையில் தங்கியிருந்தான். ஏற்கனவே சென்னை பரிச்சயம் என்பதால் தேடிப் பிடிப்பதில் சிரமமில்லை.

நான் சென்றபொழுதே கவனித்துவிட்டேன் அவன் இருந்த சூழல் அவனுக்கு
இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்த்தியது. அவன் அறை நண்பர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். தனியாக இருக்கின்ற அந்த சூழல் வேறு அவனை மிகவும் பரிதாபமாக காட்டியது எனக்கு.

எனக்கு அவனுடைய நிலைமை மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மிகவும்
வலுக்கட்டாயமாக தனக்குள் சந்தோஷத்தை வரவைழைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தான். "வேலை இன்னும் கிடைக்கலைடா பரவாயில்லை சீக்கிரம் கிடைச்சிறும்" என்று அவன் அலட்சியமாக சொன்னாலும் அவனுடைய நிலைமையை என்னால் யூகிக்க முடிந்தது.

நிறைய பேசினோம். கல்லூரி நாட்களில் பேசிய பேச்சுக்களை விடவும்
இப்பொழுது அவனுடை பேச்சில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிந்தது.

பழைய நண்பர்கள் யார் யார் எங்கு எங்கு வேலை பார்க்கின்றார்கள் எத்தனை பேர்
செட்டில் ஆகியிருக்கின்றார்கள் என்று எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

நமக்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும் கல்லூயில் படித்த பழைய நண்பர்களை
எவரேனும் சந்தித்து பேசினால் அந்த சோகம் கொஞ்சம் குறைந்தாற்போன்று தோன்றும்.

அவனுக்கும் அப்படித்தான் அவனுடைய சூழலில் இருந்து அவனை மீட்டுக்
கொண்டு போய் கல்லூரி நாட்களில் சென்று விட்டேன்.

பின் நான் விடைபெறுகின்ற நேரம் வந்தது.
"சாப்பிட்டுவிட்டு போடா" என்று அவன் அழைத்த விதத்தில் புரிந்துகொண்டேன் அவனின் காசில்லாதநிலையை.

பின்
பக்கத்தில் உள்ள ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு என்னுடன் பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்தான். எனக்குண்டான பேருந்து வந்து கொண்டிருக்கின்றது.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.
பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது நான் கையில் திணித்த பணத்தை பார்த்துக்கொண்டே விழுந்த அவனது கண்ணீர்த்துளி.


2009 - ஆகஸ்ட் மாதம்


இப்பொழுது இங்கு பெங்களுரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்
கொண்டிருக்கின்றேன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

இங்குள்ள இந்த றிறுவனத்தில் உள்ள வெப் டிசைனராக பணிபுரியும் ராஜ் என்ற
எனது நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். 3 வருடங்களாக இந்த கம்பெனியில் இருக்கின்றார். அவர் மட்டுமே தமிழ்நாட்டுக்காரர்.

வழக்கமாக மதிய உணவுக்கு பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு
செல்வோம். தினமும் நான் ஒருநாள், அவர் ஒருநாள் என்று சாப்பிட்டதிற்கு பணம் கொடுத்துகொண்டிருப்போம்.

அந்த உணவு இடைவேளையில் அவருடைய காதல் குடும்ப பிரச்சனைகள்
எல்லாவற்றையும் உரிமையாக பகிர்ந்து கொள்வார். நானும் அவரிடம் எனது விசயங்களை பகிர்ந்து கொள்வேன்.

கடந்த இரண்டு மாதங்களாக கம்பெனியில் salary கொடுக்காமல் இழுத்தடித்துக்
கொண்டிருக்கின்றார்கள். வாடகை , இன்டர்நெட் பில், போக்குவரத்துச் செலவு, உணவு, என்று இரண்டு மாதங்களாக சமாளித்துக்கொண்டிருந்தேன். நிறுவனம் மிகவும் அலட்சியமாக இப்பொழுது எங்களால் தரமுடியாது என்று தன்னுடைய இயலாமையை சொல்லி கைவிரிக்கின்றது

கம்பெனியின் நிலை சரியில்லாததால் நானும் வேறு இடத்தில் வேலை தேட
ஆரம்பித்தேன். சென்ற வாரம் புதிய வேலையை உறுதி செய்தபின் இங்கு ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டேன்.

இந்த நிலையில் நேற்றுதான் அந்த ராஜ் என்ற நண்பரையும் அழைத்து அவரை
வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக சொன்னார்கள்

3 வருடம் வேலை பார்த்த அவரை 5 நிமிடத்தில் வேலையை விட்டு தூக்கி
விட்டதாக சொன்னதால் அவர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து விட்டார். தனது நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து வேறு வேலை தேடலில் ஆரம்பித்துவிட்டார்.

நேற்றும் பக்கத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரென்டுக்கு சென்றோம். புலம்பிக்
கொண்டே இருந்தார்.
"இப்படி பண்ணி விட்டார்களே இந்த கம்பெனிக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருப்பேன்..இப்படி 5 நிமிடத்தில் போகச்சொல்லிவிட்டார்களே...1 மாதம் அவகாசமாவது கொடுத்திருக்கலாம் " என்று

நானும் அவரிடம்,
" சம்பளம் தராமல் இன்னமும் இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றார்களே - செலவுக்கு கையில் காசில்லை ஏன் நிலைமையை புரிந்து கொள்ளமாட்டேன்கிறார்கள் ? " என்று புலம்பிக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டபிறகு எப்பொழுதும் பணம் கொடுக்கும் பொழுது ஒருவருக்கொருவர்
கொடுப்பதில் முந்திக்கொள்வோம். இன்று இருவருமே பணம் கொடுப்பதில் கொஞ்சம் தயங்கி தயங்கி இருந்தோம். நிலைமையை நானும் அவரும் புரிந்து கொண்டு செலவினை பகிர்ந்து கொண்டோம்.

நேற்றுதான் எனக்கும் கம்பெனியின் கடைசி நாள். எல்லாரிடமும் விடைபெற்று
விட்டு வெளியே வந்தேன். பேருந்து நிறுத்தம் வரை ராஜ் வந்து விட வந்தார்.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு இறுதியான கைகுலுக்கலில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஏறிவிட்டேன்.
பேருந்தின் இடப்பெயர்ச்சியிலும் எனக்குத் தெளிவாய்த் தெரிந்தது என் கையில் அவர் திணித்த பணத்தின் மீது தெரிந்த எனது சென்னை நண்பணின் முகம்.
- ரசிகவ் ஞானியார்



Read More......

Sunday, June 07, 2009


அன்று மேலாளர் இப்பொழுது ஆபிஸ் பாய்



இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க...
நீங்களும்தான் இன்னொரு கப் எடுத்துக்கோங்க
என்று அவர் அனைவருக்கும் டீ கொடுத்துக் கொண்டிருக்க என் முறையும் வந்தது.

இரண்டு தேநீர் கொடுக்கப்படுகின்ற முறையே அலுவலகத்தில் என்னிலிருந்துதான் ஆரம்பித்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இரண்டு கோப்பை தேநீர் கேட்கின்ற முறையை ஆரம்பித்ததே நான்தான். சில நேரங்களில் அவர் கொண்டு வரும்பொழுதே இரண்டு கோப்பை எடுத்து வைத்துக்கொள்வேன்.. அந்த அளவுக்கு தேநீர பைத்தியம்..

சென்ற மாதம்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார் . அவரை ஆபிஸ் பாய் என்று அழைப்பதை விடவும் ஆபிஸ் மேன் என்று சொல்லலாம். வயது சுமார் 40 இருக்கும். . எப்பொழுதும் முகத்தில் ஒருவிதமான கவலை தோய்ந்த முகத்துடனையே உலா வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சனிக்கிழமை அலுவலகத்தில் அவரை பக்கத்தில் அமர வைத்து விசாரித்தேன். அவர் கதையை கேட்க கேட்க எனக்குள்ளே ஒரு விதமான சோகம். அவர் எடுத்து காட்டிய விசிட்டிங் கார்டை பார்த்தும் அதிர்ந்தே போய்விட்டேன்.

xxxxxxxxxx
General Manager
Group of Companies


கிரானைட் மற்றும் லெதர் மற்றும் கார்மெண்ட் சம்பந்தமான துறைகளில் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனத்தின் சொந்தக்காரராக இருந்திருக்கின்றார் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும்.

இப்பொழுது எனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய். ஏன் இப்படி?


"நீங்க எல்லாம் என்ன சம்பாதிக்கிறீங்க தம்பி...நான் வாரத்தில் 20000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவன். நல்ல வசதியாய் வாழ்ந்திருக்கின்றேன்..

திடீரென்று
தொழிலில் நஷ்டம் ஏற்பட சுற்றியுள்ளவர்கள் எல்லாம்விலகிவிட்டார்கள்.

அப்பொழுதுதான்
விளங்க ஆரம்பித்தது என்னை சுற்றியிருந்திருப்பது பணம் மட்டுமே .. வேற எதுவுமில்லை என்று.


அண்ணனும்
தம்பியும் மிகப்பெரிய சாபட்வேர் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கின்றார்கள். தந்தையும் நல்லா வசதியாகஇருக்கின்றார். ஆனால் எனக்கு உதவி செய்ய அவர்களுக்கு தயக்கம்.

நல்லா
வாழ்ந்திட்டு இப்போ இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமாகயிருக்குதுப்பா.. .. இன்னமும் நான் இறைவனிடம்வேண்டிக்கொண்டுதானிருக்கின்றேன்.. ஓரளவுக்கு கேவலப்படுத்து இறைவா என்னை ரொம்பவும் அவமானப்படுத்திவிடாதே என்று


நான்
நல்லா வாழும்பொழுது பார்த்தவர்கள் என்னை இந்த நிலையில் இருப்பதை பார்த்துவிடக்கூடாது என்றுதான் இப்போ இந்த ஆர் டி நகரில் வீடு மாறி வந்திருக்கேன். அவுங்க கண்களில் இருந்து மறைஞ்சு மறைஞ்சு வரேன்"

சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கண்களில் முழுவதுமாக நீர் திரள அதனை அடக்க முயற்சித்து முடியாமல் அழுதேவிட்டார்;

"
நான் கம்பெனியின் நிறுவனராக இருந்தபொழுது என்னுடையகம்பெனியில் டீ போடும் பெண்ணிற்கு இப்பொழுது நான் வாங்குகின்றசம்பளத்தை விடவும் அதிகமாக கொடுத்தேன். இப்போ நானே அந்தவேலை செய்கின்றேன் என்று நினைக்கும்பொழுது ரொம்பவேதனையாயிருக்கு."


அவரை ஆறுதல் படுத்த முடியாமல் அவரின் அந்த நிலைமையின் சோகத்தை ஜீரணிக்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.

இந்த வாழ்க்கைதான் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகின்றது பாருங்களேன் எப்பொழுதும் ஏழையாகவே இருந்துவிடலாம் இல்லை எப்பொழுதும் பணக்காரனாகவே இருந்துவிடலாம்.

ஆனால் நன்றாக வசதியாக வாழ்ந்துவிட்டு பின்னர் கஷ்டப்படுகிற வாழ்க்கை யாருக்குமே வரக்கூடாது. அது மிகவும் கொடுமையானது. அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை.

சுகர் கம்மியா இருக்கு... என்று எனக்கு பின்னால் உள்ள கேபினில் உள்ளவன் அவரிடம் சொல்லிக்கொண்டிருக்க , சரி அடுத்த தடைவ நல்லா போடுறேன் என்று அமைதியாக அவனிடம் தலையாட்டிவிட்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றார்.


"டீ ஆறிப்போயிடுச்சி
கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வாங்க"
அதோ புகார் செய்துகொண்டிருக்கும்
அவனுக்கு தெரியுமா?
ஆறிப்போனது
அவரது வாழ்க்கையும்தான் என்று?


இந்தாங்க டீ எடுத்துக்கோங்க..இன்னொரு கப் எடுத்துக்கோங்க... என்னை கடந்து சென்று கொண்டேயிருக்கின்றது அந்தக் குரல்

நான் இப்பொழுதெல்லாம் இன்னொரு தேநீர் கேட்பதேயில்லை...

- ரசிகவ் ஞானியார்
Read More......

Sunday, February 01, 2009


இனி வரும் நாட்கள்...




அகரமுதல எழுத்துக்கெல்லாம்
அகதிகளென்று பெயராம்!

சிறை வைக்கப்பட்ட எங்கள்
சீதைகளை மீட்க...
இராமன்களே மறுத்துவிட,
அனுமர்கள் மட்டும்
அவ்வப்போது தீக்குளிக்கின்றார்கள்!


நாகரீக மாற்றத்தில்
குகை மனிதன்
புகை மனிதனாகுகின்றான்

எல்லைத் தாண்டுதல்
எவருக்குமே அனுமதியில்லாதபொழுது,
எப்படி நுழைந்தாய்
மிருக எல்கைக்குள்?

வீசுபவனும் வலிகள் உணர்ந்தால்
ஹைட்ரஜன்கள் என்றோ
ஆக்சிஜன்களாக்கப்பட்டிருக்கும்


உன்
கழுகுப் பார்வைக்கு
காதுகள் இருந்திருந்தால்
ஓலச்சப்தங்கள் கேட்டிருக்கலாம்
உன்னைப்போலவே அங்கே
மனிதர்கள்தான் வாழ்கிறார்கள்

பதுங்கு குழிகளை
பிய்த்து எறியும் உன்
தேர்களின் நகர்வுகளில்
சிதைந்து போவது
மனித உடல்களா?
விதைகளா?


புரிந்து கொள்
உன்
செல்லில் செத்துப்போனது
புத்தன் மட்டும்தான்


உனக்கு
சொர்க்கம் காத்திருப்பதாய்
தோன்றுகின்ற கனவுகள்
கண்ணிவெடியில் பதிந்துள்ள
கால்கள் போலத்தான்!

உனக்கு வருங்காலமா?
வெறுங்காலமா?
இனிவரும் நாட்கள்
பிரதிபலிக்கும்

நம்புகிறோம்
நீயும் எழுப்பப்படுவாய்...
முத்துக்குமரனும் எழுப்பப்படுவான்

- ரசிகவ் ஞானியார்
Read More......

Sunday, January 18, 2009


நலம் விரும்பிகள்





தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

- ரசிகவ் ஞானியார்
Read More......

Saturday, January 03, 2009


என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது


நான் பாவப்பட்டவனா?
புனிதப்பட்டவனா?

புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே

உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்

பாவத்தின் சம்பளம்
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஒவ்வொரு குளியலும்
என்னை புனிதமாக்கிவிடும்

மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது

என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே

என் பாவம் கடவுளுக்குப்
பிடித்திருக்கிறது

- ரசிகவ் ஞானியார்

Read More......

title

தேவதைகளின் தேவதை!
முதலிரவு…
திருவிழாவுக்குப் பிறகு தேவதை நீ தூங்கிக்கொண்டு இருந்தாய். நான் உறங்க மறந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பெண். அதுவும் என் பிரியத்துக்குரிய பெண் தூங்குவதை, அதுவும் என் படுக்கையில் தூங்குவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மணப்பெண்ணாக உன்னைப் பார்த்த போதோ, உனக்கு மாலை இடும்போதோ, தாலி கட்டும்போதோ,  முதல் முறையாக உன் விரல் பிடித்து தீயை வலம் வரும் போதோ அல்லது குடத்தில் மோதிரம் எடுக்கும் சடங்கில் உனக்கு மோதிரத்தை விட்டுக் கொடுத்தபோதோ,  அதற்காக ஓரக்கண் ணால் நீ என்னைப் பார்த்த அழகிய பார்வையின்போதோதான்… நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்றாலும், இப்போது உன் துயிலைப் பார்க்கிறபோது… ஏதோ நூறாண்டுகளாக உன்னை நான் காதலிப்பதைப் போல நெஞ்சு முழுவதும் பொங்கி வழிந்தது காதல்.
நீயோ அழகுகளை எல்லாம் காவலுக்கு வைத்துக்கொண்டு ஒரு மகாராணியைப் போல் தூங்கிக்கொண்டு இருந்தாய். நானோ உன் உறக்கத்துக்குள் நுழைய முடியாத கனவு போல் வெளியே அமர்ந்திருந்தேன், வெகுநேரம்!
எங்கோ ஒரு சேவல் கூவியது. நீ விடியற்காலையில் எழுகிற பழக்கம் உடையவளாக இருந்தால், விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாயோ என்கிற எண்ணத்தில் படுக்கப் போகையில், உன் ஒரு கையைத் தூக்கி என் மடியில் போட்டாய். உனது கையை விலக்கிவிட்டுப் படுத்துக்கொள்ள மனமின்றி அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். என் மடியோ, உன் கை தூங்கும் குட்டித் தலையணையாக மாறிப்போய் இருந்தது.
சற்றே நீ புரண்டு படுக்கையில்… கால்புறத்தில் கொஞ்சம் விலகிய உன் ஆடையைச் சரி செய்தேன். அவ்வளவுதான்… இதுவரை விம்மிக் கொண்டிருந்த ஆனந்தம் வெடித்து, கண்ணீராய்ப் பூத்தது என் கண்களில்.
போதும்… இத்தனை வருடமாகப் பெரும்பாடுபட்டுக் கடைப்பிடித்த என் பிரம்மச்சரியத்துக்குப் பரிசாக தேவதைகளின் தேவதையை அனுப்பி வைத்த என் தெய்வமே… போதும் உன் கருணை!
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்…
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.

title

இழப்புகள்

இரவில் உரங்கும் வரை
அந்நியக் குத்தகை மாம்பழங்கள்
விழும் சப்தம் கொண்டு கணக்கிடுவேன்,
அத்தையின் கதைகளோடு.

எனக்குப் பின்னும்
வீட்டோடு இருக்கும் விதவை அத்தை
விடியும்வரை எண்ணி வைத்திருப்பாள்.

கருக்கலோடு பைகொண்டு
வீட்டை அடையும் பழங்கள்;

எண்ணிக்கையைவிடக் கூடுதலாகவே
அனைவரும் சுவைத்தாலும்
அப்பா என்னவோ வேதனைகொள்வார்.

குத்தகைப் பணத்தை அப்பாவே கட்டி
அந்த ஆண்டு சொந்தமாக்கினார் மரத்தை.

வேண்டியதற்கு மேலும் விழுந்தும் பறித்தும்
எப்போதும் மாம்பழ வாசம்- வீடெங்கும்.
அனைத்து நண்பர்களும் சுற்றத்தாரும்
கொண்டதுபோக அலுத்தது மரம்.

இந்த மாம்பழம் இன்று
என் வயதை வெறும் பத்தாக்கியது,
எங்கும் மரம் சூழ் வீட்டு முற்றமும்
உறக்கமில்லா அத்தையின்
நினைவுகளோடும்.

பயணம்

இந்த முறை . . .
ஆற்றில் விழுந்த இலை
மரத்தை விட்டு வெகுதூரம் வந்தாயிற்று.

அடுத்து அருவி என்பது
இலைக்குத் தெரியாது.
அது இலை என்பது
ஆற்றுக்கும் தெரியாது.

இலைமீது தும்பியொன்று
பயணிக்கிறது.
அது பயணமன்று.

எங்கிருந்தும் யாரும் எங்கேயும்
போய்விட முடியாது என்பதாய்
ஓர் அமர்வு . . . வெறுமனே.

ஆறு தும்பி அருவி இலை
யாருக்கும் தெரியாது யார்
யாரென்பது.

அண்டத்தின் தீராத பேரிருட்டில்
ஓய்ந்து மிதக்கிறது இலை.

விருட்டெனப் பறக்கிறது தும்பி.

மரம் மீண்டும் உதிர்க்கிறது
மற்றுமோர் இலையை.
அது
இந்த முறை காற்றில் அலைகிறது.

-அழகுநிலா



வண்ணங்கள்
வரிசையில் நின்றாலும்;
எண்ணங்கள் நசுக்கிவிடும்;
பிரிவினையைப் பொசுக்கிவிடும்!

தள்ளாடும் போதையில்லை;
தள்ளிவிடும் பேதையில்லை;
ஒதுக்கிவைக்கும் சாதியில்லை;
கண்டுப்பிடிக்க இதில்
குறையில்லை!  

அன்பிற்கு முன்னுரை;
தவிடுப்பொடியாகும் வன்முறை;
மனிதன் வாழச் செய்முறை;
அழகாகச் சொல்லும் விதிமுறை!

அனைத்திற்கும் சட்டமுண்டு;
தவறுச் செய்தால் தண்டனையுண்டு;
எடுத்துரைக்கும் மறையுண்டு;
ஏற்று நடந்தால் சுவனமுண்டு!

நுகர்ந்துவிட்டால் மணம் வீசும்;
நுழைந்துவிட்டால்
அமைதி அலை வீசும்;
எட்டி நின்றுப் பார்த்தால்
மனம் தடுமாறும்;
எட்டு வைத்து வா;
இஸ்லாத்தின் பக்கம்
 மனம் மாறும்!

அன்னையின் இரகசியம்..




அழும் உன்னை
ஆறுதல் செய்ய;
ஆயிரம் முகபாவனைகள்;
தும்மினாலும் சிரிக்கிறாய்;
அழுதாலும் சிரிக்கிறாய்!

என் தூக்கத்தைக்
கெடுக்கும் உன் அழுகை;
காரணிகள் காண்பதற்குள்;
எகிறும் உன் குரலோசை!

எனக்கேப் புரியாமல்
கொஞ்சல் என;
உளறி வைப்பேன்;
மிரள வைப்பேன்;
அழும் உன்னைக் கொஞ்சம்
உருளவும் வைப்பேன்!

அலுத்துப்போன நான்;
அழைப்பேன் உன்
அன்னையை;
வாரி அணைத்து;
உன் வாயில் முத்தமிட்டுக்;
கொஞ்சும் குரலால்
உன்னைக் கொஞ்சி எடுக்க;
அழும் உன் குரலோ அடங்கிப்போக!

குடும்பச் சுமை;
என் தலையில் என்றுக்;
கனம் பிடித்து அலைந்த நான்;
உன் அழுகையிடம்
தோற்றுப்போனேன்;
அடக்கி வைத்த;
உன் அன்னையைக் கண்டு
மலைத்துப் போனேன்!

--

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

விலைவாசியும்,பணமும்...


விலைவாசி சத்தமில்லாமல்
வின்னைத் தொட்டும் தொடர்கிறது

வசதியாய் இருப்போரும்
வீதியில் வசிப்போரும்
வாங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியே இல்லை-எனில்

"வாழ்வு செழித்திருக்கும் உழைப்பவருக்கு
வளமை கூடியிருக்கும் விற்பவருக்கு"
விசாரிக்கத் தொடங்கினேன்
வீதியிலிருந்து சந்தை வரை

வியாபாரியின்
விரித்த வெறும் கையில்
வழக்கம் போல் ஏதுமில்லை

விநியோகிப்பவனின் லாப
விகிதாச்சாரத்திலும்
வித்தியாசம் கூடவேயில்லை

விவசாயியோ பசிக்கும்
விதைக்கும் வழியில்லாமல்
விதியை நொந்து எழமுடியாமல்
விழுந்து கொண்டே இருக்கிறான்

வகை தெரியாமல் நானும்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்!-நம்மக்கெல்லாம்
வழிதெரியாத எங்கோபோய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விதியை மாற்றும் அந்தப் பணமெல்லாம் !!

title

Add your main content here - text, photos, videos, addons, whatever you want!

இப்போதாவது முதலடி....


அமிழ்தினிய தமிழ்
அந்நிய மோகத்தால்
ஆங்கில மொழி தாக்கத்தால்
ஆழி நோய்க்கு ஆட்பட்டது போல
அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது
அடித்தளமே கொஞ்சம்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது

இது தான் தருணம்
இனியும் தாமதித்தால்
இலக்கியத் தமிழ் அல்ல
இனிய பேச்சுத் தமிழும்
இனிமேல் இங்கே
இல்லாமல் போகும்

அவசரச் சிகிச்சையாய் சில
அடிப்படை மாற்றங்கள்
அதிரடியாய் செய்ய வேண்டும்
அதுவும் உடனடியாய் செய்யவேண்டும்


தமிழ் கூறும் நல்லுலகில்
அலோவும் சாரும்புகுந்து
அவதிப்படாத அவதிப்படுத்தாத
தமிழ் வாய் ஏதேனும் உண்டா?

அலோவுக்கென தனியாய்
ஆழக்குழி தோண்டி
அதிலும் அதை
அடியில் வைத்துப்
அழுந்தப் புதைக்கவேண்டும்
சார் என்ற சொல்லே தமிழ்
சரித்திரத்தில் இல்லாமல்
சரி செய்யவேண்டும்

எளியோரைச் சேரும் வகையில்
இனிய மாற்றுச் சொற்களை
இங்கே அறிமுகம் செய்வோம்
இதை மற்றவருக்கும் சொல்வோம்

முதலடியை நாமே
முன் வந்து வைப்போம் !
முன் மாதிரியாய் நம்மையே
முன் வைத்து நிற்போம் !!

title

Click to add text, images, and other content

நிஜமான நிழல்


நிழலாய் இருந்த உன்னை
நிஜமாய் பார்த்த முதல் நாள்
அலாரம் வைத்து விட்டு
உடலளவில் உறங்கி விட்டேன்
மூன்று முறை விழித்து பார்த்து
கடைசியில் அலாரத்தை
நான் எழுப்பினேன்
எனக்கு உன்னை பிடிக்கும் என
உனக்கு தெரியாது
உனக்கு என்ன பிடிக்கும் என
எனக்கு தெரியாது
மனதில் பட்டிமன்றம் நடத்தி
உடை தேர்வு செய்தேன்

நிழற்ப் படம் பார்த்தே உன்
நிஜத்தை கற்பனை செய்தவன்
நிஜமாய் உன்னை பார்க்கும் போது
உன் நிழலை கூட
முழுதாய் பார்க்கவில்லை

title

Click to add text, images, and other content
யாரையாவது காதலிக்கிறாயா என

என்னிடமே கேட்கிறாயே

உன்னை தான் என சொல்லி

நம் உறவை முறித்து கொள்ள

நான் விரும்பவில்லையடி

நீ காதல் தேவதையாக வேண்டாம்

கனவு தேவதையாகவே
இருந்து விட்டு போ !!!

title

Click to add text, images, and other content

நிஜமான நிழல்


நிழலாய் இருந்த உன்னை
நிஜமாய் பார்த்த முதல் நாள்
அலாரம் வைத்து விட்டு
உடலளவில் உறங்கி விட்டேன்
மூன்று முறை விழித்து பார்த்து
கடைசியில் அலாரத்தை
நான் எழுப்பினேன்
எனக்கு உன்னை பிடிக்கும் என
உனக்கு தெரியாது
உனக்கு என்ன பிடிக்கும் என
எனக்கு தெரியாது
மனதில் பட்டிமன்றம் நடத்தி
உடை தேர்வு செய்தேன்

நிழற்ப் படம் பார்த்தே உன்
நிஜத்தை கற்பனை செய்தவன்
நிஜமாய் உன்னை பார்க்கும் போது
உன் நிழலை கூட
முழுதாய் பார்க்கவில்லை

ஒற்றை வார்த்தை


எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு
தயார் செய்ததில்லை
உன்னுடன் பேசும் முன்பு
என்ன பேச வேண்டும் என
பட்டியல் இடுகின்றேன்
பாவி மனது நீ ஹலோ சொன்னவுடன்
எல்லாவற்றையும் மறந்து விடுகிறது
எங்கேயடி கற்றுக்கொண்டாய்
ஒற்றை வார்த்தையில்
ஒருவனை சாய்ப்பதை

ஆசை



எப்போது அலை பேசி அடித்தாலும்
கை எடுத்து கண் பார்க்கும் முன்னே
மனம் குதித்து கேட்கிறது
அழைப்பது அவளா என
பார்க்கும் முன்னரே தெரிய வேண்டுமென
அவளுக்கு மட்டும் அழைப்பு மணியை
மாற்றி பார்த்தேன், எந்த ஓசை கேட்டாலும்
அந்த ஓசையா என
மனம் ஆசை படுகிறது

title

Click to add text, images, and other content

Saturday, October 13, 2007

எதிர்காலம்

நான் விருப்பப்பட்ட உடன்
என் மன மேடைக்கு வந்தவளே
நீ விருப்பப்பட்டு
என் மண மேடைக்கு வரும் காலம்
எனக்கு நல்லதொரு வருங்காலம்

பயம்


உன் தெருவை கடக்கும் போதெல்லாம்
உன்னை பார்த்து விட மாட்டேனா
என்ற ஏக்கம் இருக்கும், அதனினும் அதிகமாக
உன்னை பார்த்து விட கூடாது
என்ற பயம்தான் அதிகம் இருக்கிறது.
பார்த்து விட்டு தெரியாதவன் போல்
நீ இருந்துவிட்டால் நான் எனக்கே
தெரியாதவன் ஆகி விடுவேனோ
என்கிற பயம்

Friday, October 12, 2007

உளியின் துளிகள்




என் கனவில் வந்ததொரு பெண்ணின் சிற்பம்
உளியின் துளிகள் இதோ... சுந்தரராஜன்

எப்போதும் தேர்வு முடிவு வரை
எனக்கு நம்பிக்கை இராது
ஆனால் உன்னை முதல்
முறை பார்த்த போதே,
பேரன் பேத்தி வரை
கற்பனை செய்து விட்டேன்
என்ன காதல் இது

உன்னை என்னும் போதெல்லாம்

தமிழ் எழுத்துக்கள் கவிதை
வாக்களிக்க காத்திருக்கின்றன
பாவம் அவைகளுக்கு தெரியாது
நான் இன்னும்
விண்ணப்பிக்கவே இல்லையென


கடற்கரையில் நடக்காதே

உன் நீள கூந்தல் கண்டு
கார்மேகமென அஞ்சி
மழை முன்னறிவிப்பு செய்கின்றனர்
அவர்களுக்கு தெரியாது நீ
என்னில் மையம் கொண்ட புயலென


உன் ஆண் நண்பர்கள் எல்லாம்

எனக்கு எதிரிகளாகவெ தெரிகின்றனர்
அவர்களை நீ அண்ணன் என அறிமுகப்படுத்தும்
வரையில் இல்லை நீயும் உன்
காதலை வெளிப்படுத்தும் வரையில்

என்னவெல்லாமோ பேச நினைத்து

உன்னை அழைப்பேன் ஏதேதோ பேசிவிட்டு,
அப்புறம் என நானே கேட்பேன்
காதல் ஒரு நோய் தான்


நான் எவ்வளவோ முயற்சி செய்தும்

உன் சிணுங்களை காப்பீடு
செய்ய முடியவில்லை
மதிப்பிட முடியா பொருட்களுக்கு
காப்பீடு இல்லையாம்


உன்னுடன் பேசும் போது வேண்டும்

என்றே தோற்று போவேன்
வென்ற களிப்பிலாவது
அதிகம் பேச மாட்டாயா என


நீ வீட்டை விட்டு வெளியே வந்தால்

சூரியனே சற்று குழம்பித்தான் போகிறது.
என் வேலை நேரத்தில்நிலவிற்க்கு என்ன வேலை,
அதுவும் பூமியில் என்று


நீயுட்டனுடைய விதி தவறுதான்

என்னவளின் பார்வைக்கு சமமான
எதிர் வினையை காட்ட முடியுமா


இமை மூடும் நேரத்தில் இதயம் நுழைகிறதே

காதல் என்ன காற்றினும் மெலிதா
அவளுக்கும் என் நினைவு உண்டா
பெண் மனம் அறிவது அவ்வளவு எளிதா

கவி சக்கரவர்த்தி கம்பனால் கூட

கற்பனை செய்ய முடியாத கவிதை நீ
குறள் வடித்த வள்ளுவனால் கூட
வருணிக்க முடியா வார்த்தை நீ
நொடிகள் உன் நினைவால் நகர்வதால்
பெண்ணே என் வாழ்க்கை நீ

சுந்தரராஜன்

title

Click to add text, images, and other contentசைலண்ட் மோடில்
மாற்ற மறந்த செல்போன்
அலறியதும்
அவசர அவசரமாய் எடுத்து
மெதுவாய் ஹாலோ என்றேன்.

"ஏன்டா.. அறிவில்ல உனக்கு
கோவிலுக்குள்ள கூட ஆஃப் பண்ணமாட்டியா?"

"ஹலோ.. யாருங்க நீங்க?"

"ம்ம்.. கடவுள்"

அர்ச்சகரின் செல்போன் எண் மட்டும்
உனக்கு எப்படித் தெரியாமல் போனது? என
சுரீரென கேட்டுவிட்டேன்.

கடவுள் இப்போது கோபமாய் இருக்கிறார்
சிறிது நேரத்திற்கு அவரிடம்
எதுவும் வேண்டாதீர்கள்.

சாம்பல் நிறத்தில்
குட்டையான வாலோடு
மினுங்கும் கண்களுடன்
பாண்டிபஜாரில் வாங்கிய
நாயின் கழுத்தை
இறுக்கிப் பிடித்துக் கடித்தும்
வாலைப் பிடித்துத் தூக்கியெறிந்தும்
குழந்தை விளையாடியதைக் கண்டு பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை

எதிர்வீட்டில்
கிளிஜோதிடர் இருக்கிறார்
எப்படியும் இரண்டு பேராவது
எதிர்காலம் அறியும் பொருட்டு வருவதை
தினமும் அலுவலகம் செல்லும்போது காண்கிறேன்.

விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்!

சாரை சாரையாய்...

ஒற்றையடிப் பாதையில்
சாரை சாரையாக
நேரும் எதிருமாகப் பரபரப்புடன்
சென்று கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் உணவுப் பொட்டலத்தோடு
எதிர்வரும் ஒவ்வொருவரையும்
கடக்கும்போதும் ஒரு விநாடி
ஏதோ பேசிக்கொள்கிறார்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
எங்கே போகிறார்கள்
எதுவும் புலப்படவில்லை
அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன்
ஒரு இடத்தில்
பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.

இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில்
மீதமிருந்த இரண்டை
டிசம்பரில் எடுத்துத்
தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த
முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன்.
எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

உழவன்

நன்றி: நவீன விருட்சம்

தக்காளிச் சட்னி?

தெருமுனைப் பெட்டிக்கடைக்காரன்
பூசணிக்காய் உடைப்பதைக் கண்டபோது
ஏளனப் பார்வையுடன்
இன்னும் திருந்தவில்லையா எனக் கேட்டுவிட்டே
வீடு வந்தேன்

வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்

ஏன்டா.. உனக்கு வந்தா இரத்தம்
அதுவே எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?
வழியும் இரத்தத்தோடு
வடிவேலு சொல்லிக்கொண்டிருந்தார்
நான் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தேன்!

மழலை

யானையாய் பிளிறி
பூனையாய்க் கத்தி
நாயாய்க் குரைத்து
நரியாய் ஊளையிட்டு
கோழியாய்க் கூவி
குதிரையாய்க் கனைத்து
...
இப்படி விநாடிக்கொரு
பிராணியாய் மாறி
உன்னைச் சிரிக்க வைக்கிறேன்.

மனிதனாய்ப் பேசினால் மட்டும்
ஏன் சிரிப்பதேயில்லை
என எண்ணும்போதே
மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!

மியாவ்

மியாவ் என்ற ஒரு அழைப்பிலேயே
வாசல் முன் வந்து நின்ற
பூனையைக் காட்டி
"நீ சாப்பிடவில்லையெனில்
பூனைக்குக் கொடுத்திடுவேன்"
என ஏமாற்றிச் சோறூட்ட
இன்றும் தயாரானாள் அவள்

தனைநோக்கி சோற்றுக்கை நீளும்
ஒவ்வொரு முறையும்
கழுத்து நீட்டி வாய்திறந்து
கையின் போக்கிலேயே கண்பதித்து
சோற்றையும் குழந்தையையுமே
பார்த்துக்கொண்டிருக்கிறது பூனை

கடைசிவரை வாய்திறக்காது
பூனையின் எதிர்பார்ப்பை
குழந்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கையில்

சலிப்புற்று
குழந்தையின் குமட்டில் இடித்து
கையிலிருந்த சோற்றுருண்டையைத்
தன் வாயில் போட்டு
நடக்க யத்தனித்தபோது
ஓவென அழுத குழந்தையை
எப்படித் தேற்றுவதென்பது தெரியாது
மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருக்கிறது பூனை!

உழவன் தவளைச் சத்தம் கேட்டதும் போச்சு
கவலை நித்தம் படிந்தே போச்சு
கலப்பை பிடிக்கும் கைகள் குறைந்தே போச்சு
கணிணி மோகமே எங்கேயும் ஆச்சு

காடெல்லாம் கட்டிடமாய் ஆச்சு
கண்மாயோ வெற்றிடமாய் போச்சு
பொன் விளையும் பூமி - இப்போ
பொட்டலாதான் ஆச்சு

மும்மாரி பொழிந்ததெல்லாம்
மலையேறிப் போச்சு
எல்லாமே இப்போ விலையேறிப் போச்சு

சாதம் பிசைந்து
சாப்பிடும் நாளும் அழிந்திடுமோ
பாவம் மனித இனங்கள்
மாத்திரைகளாலே வாழ்ந்திடுமோ

விதைப்பவன் வாழ்க்கையெல்லாம்
விரைவில் கதையாகிப் போய்விடுமோ
காய்கனி உண்பதெல்லாம் - நாளை
கனவாகிப் போய்விடுமோ

மொட்டை மாடியிலாவது
செடியொன்று வளர்த்திடுவோம்
பட்டுப்போகிற பூமியை
பசுமையாக்க முயற்சித்திடுவோம்!

மழை காக்க மரம் வளர்ப்போம்
உயிர் காக்க உழவு காப்போம் !

title

Click to add text, images, and other content

தேர்தல் அதிசயங்கள்!

அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்
'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!
கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்
சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!
பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!
கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!
கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்
கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!
அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
உழவன்
யார்

விதைத்த விதைகளோ

யுகம் யுகமாய்

முளைக்காமலேயே

கிடக்கின்றன !

மேகமே

மேல் நோக்கியும்

கொஞ்சம்

பொழிந்துவிடேன் !

என் மனையாளே..

நீ
எந்த மாதிரியான
பொட்டுகளை
வைக்கிறாய் என்று
ஒருநாளும் நான்
கவனித்ததில்லை.
முகம் பார்க்கும்
கண்ணாடியில்
நீ வைத்து விட்டுச் சென்ற
ஸ்டிக்கர் பொட்டையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இப்போது
ஏனென்று தெரியாமல்!
 
வழக்கம்போல்
எல்லா விளக்குகளும்
எரியத்தான் செய்கின்றன
ஆனாலும் என்னவோ
வீடு இன்னமும்
முழுமையான வெளிச்சம்
அடையாததுபோல்தான் உள்ளது!
 
உதிர்ந்து கிடக்கும்
உன் கூந்தலேறிய
மல்லிகைகளில்லாமல்
தலையணை
பூக்காத செடிபோல
பொலிவற்றுக் கிடக்கின்றன!
 
உன்னோடு பேசிப் பழகிய
பாத்திரங்கள் எல்லாம்
உன் குரல் கேட்காததால்
ஊமையாகிப் போனதோ?
கீழே விழுந்தாலும்
இப்போதெல்லாம்
சத்தம் எழுப்புவதில்லை!
 
வீட்டில் இப்போது
கொசுக்களே இல்லை
உன்னைக் கடித்து
மகிழத்தான் வந்திருக்குமோ!
 
உனக்கு நான்
ஊட்டி விடுகையில்
உன் இதழ்தொட்டு
மகிழ்வதற்காய்
விறுவிறுவென வளர்ந்த
நகங்கள்
வளராமல் அப்படியே
இருக்கின்றன - உன்
இதழ் சுவை காணாததால்!
 
என் வாழ்வில்
முதல் முறையாக
காதல் பூத்திருக்கிறது
உன் பிரிவால்!
 
தாய் வீட்டிற்குச்
சென்றிருக்கும்
என் மனையாளே..
உன்னைப்
பார்க்கவேண்டும் போலிருக்கிறது.
எப்போது வருவாய்?
 

பெண்ணினமே வாழி நீ!

இயற்கை ரசிக்கும் ஓவியம் நீ
இடையில் குடம் சுமக்கும் அதிசயம் நீ
எவனும் தொழுகின்ற தாய் நீ
சிவனின் உருவத்தில் பாதி நீ
தவழும் குழந்தையறிந்த உலகம் நீ
உலவும் இளைஞன் அறிந்த காதலி நீ
வெட்கம் தெரிந்த ஒரேயினம் நீ
காதல் தந்த பூவினம் நீ
சிசு சுமக்கும் சிற்பம் நீ
சிகரம் தொடும் மேகம் நீ
தாயாய் தாரமாய் வீடாள்கிறாய் நீ
பாசமாய் காதலாய் உள்ளமாள்கிறாய் நீ
கட்டிலுக்கும் தொட்டிலுக்குமே
ஒரு காலத்தில் வாழ்ந்தாய் நீ
சட்டத்தையும் பட்டத்தையும்
எட்டிப்பிடித்தவளாய் இன்று நீ
சாலையோரச் சாப்பாட்டால்
சாகப் போகும் நாக்குக்கு
புதுப்புதுச் சுவையால் உயிரூட்டும்
ஏழாம் சுவை நீ
நொடிப் பொழுதில் விழியோரம்
உப்பு அருவி கொட்டுவாய் நீ
என்ன வரத்தால்தான் அதைப் பெற்றாய் நீ
மதுரையை எரித்த கோபமும் நீ
மஞ்சள் பூசும் சாந்தமும் நீ
பெண்ணாய்ப் பிறந்ததே
பெருமையென்று நினைப்பாய் நீ
எனைப் பெற்றெடுத்த
பெண்ணினமே வாழி நீ !
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 09.03.2009 ல் இடம்பெற்றுள்ளது.

மாநரக வாழ்க்கை

ஏழு மாதமல்ல
ஏழு ஆண்டுகள் ஆனாலும்
எதிர் வீட்டில் இருப்பது
யாரென்று தெரிந்துகொள்வதில்லை!
 
எத்தனை மாதங்களோ
இதே பேருந்து நிறுத்தத்தில்தான்
ஏறுகிறேன் இறங்குகிறேன்
என்னோடு பயணிப்பவர்களிடம்
இதுவரை அறிமுகம்
ஆனதே இல்லை!
 
கோவில்
சந்தை
பேருந்து நிலையம்
கடைத்தெரு.. இப்படி
நாள்முழுக்க
எங்கெங்கு சுற்றினாலும்
உறவு சொல்லி அழைக்க
இங்கு யாருமில்லை - அட
எவரையேனும் எவராவது
அழைக்கும் குரல் கூட
காதில் விழுந்ததில்லை!
 
பட்டப் பகலில்
தெருமுனை வீட்டின்
பூட்டை உடைப்பதைப்
பார்க்கும் நாம்
ஐயோ பாவம்
சாவியைத் தொலைத்துவிட்டான் போலும்
என பரிதாபப் பட்டுக்கொண்டே
அவசரமாய் எங்கோ செல்கிறோம்
வீடு திரும்பும்போதுதான் தெரிகிறது
அந்த வீட்டில்
அத்தனையும் திருடு போனது!
 
கோலி, பம்பரம்
கில்லி, கிளித்தட்டு
கபடி, பாண்டி
எங்கே?
தியேட்டரும், பீச்சும் தான்
பொழுது போக்கு இங்கே!
 
இரவில் கூட வீட்டைப் பூட்டாத
என் கிராமத்து வாழ்க்கை - இங்கு
நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள்
புழுங்கியே கிடக்கிறது!
 
வெள்ளத்தில் வீடுகள் மிதந்தாலும்
குளிக்க ஒரு குளம் கூட இல்லையடா
குடிக்கும் ஒரு செம்பு தண்ணீரும்
இங்கு பணம் தானடா!
 
வாசல் தாண்டி வந்துவிட்டால்
எல்லோரும் இங்கு அநாதையடா!
செயற்கை சிரிப்பினில்தான்
நகருது நகர வாழ்க்கையடா!

மின் தட்டுப்பாடு

பள்ளிக் குழந்தைகள்
பாடம் படித்துக் கொள்ளட்டும்
சூரியனே..
உன் மாலைப் பொழுதை
சற்று நீட்டித்துக் கொள் !

வீட்டு பட்ஜெட்டில்
மெழுகு வர்த்தியின்
எண்ணிக்கையாவது
சற்றுக் குறையட்டும்
மின்மினிப் பூச்சிகளே
எங்கள் வீட்டிற்குள்
வந்து விளையாடுங்கள் !

எரியாத தெருவிளக்கின் அடியில்
எப்படி பூ விற்பாள்
எங்கள் ஊர் பூக்காரி ?
நிலாவே
அமாவாசையன்றும் கூட
சிறிது நேரம் வந்துவிட்டு போ !

எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்
எப்படி எங்களால்
ஒரு ருபாய் அரிசியில்
கல் பொறுக்க முடியும் ?
பூமிக் கூரையிலிருக்கும்
விண்மீனே .. எங்கள்
கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?

இருக்கிறது என்பதற்காக

இருளைப் பகலாக்கி
விளையாட்டுப் போட்டி கண்டோம் !

குளிர் காலத்தில் கூட
குளிர் அறை கேட்டோம் !

முழத்துக்கொரு விளக்கு வைத்து
பொதுக்கூட்டம் போட்டோம் !

கொசு மட்டுமே நடமாடும்
நடு இரவில் கூட
விளக்கு வைத்து
விளம்பரப் பலகையை
மினுங்க வைத்தோம் !

அலங்கார விளக்குகள் நடுவே
அமைச்சரை அழைத்து வந்தோம் !

இருந்தது தீர்ந்ததால்
இருளாகிப் போனது இப்போது !

இயற்கையே ...
இருளைப் போக்க
நீ
வருவது எப்போது ?

கரிசக் காட்டுப் பொண்ணு



அதிகால எந்திரிச்சு
அள்ளி முடிஞ்சி
அடச்ச கோழி திறந்து விட்டு
ஆடு மாடு சாணம் அள்ளி
முத்தம் பெருக்கி
வாச தெளிச்சி
பருத்தி மாரெடுத்து பத்த வச்சி
துருத்தி போல வாயால ஊதி
கடுங்காப்பி கொதிக்கும்போது
தட்டி என்ன எழுப்பிடுவா !

பக்கத்துக் கம்மாயிக்கே
பத்து நடை போகனுமேனு
ரெட்டைக் குடம் சுமந்து
பத்துக் குடம் தண்ணியெடுப்பா !

ஆட்டுக் குட்டிக்கு
அறுத்து வந்த அகத்திக்கீரையில
அஞ்சாறு ஆஞ்செடுத்து
பச்சவாடை போகும்வரை
பக்குவமாய் வதக்கி வச்சி
பழைய சோத்துக்கே ருசி சேத்திடுவா !

மாட்டு வண்டி போட்டுக்கிட்டு
மத்தியானக் கஞ்சியோடு
மாமன் நான் போகும்போது
தட்டைப் பயறு அவிச்சி
தாளிச்சுக் கொடுத்தனுப்புவா !

மஞ்சனத்தி நிழலில
கஞ்சி குடிக்கும் பொழுதில
மகராசி அவள நெனப்பேன்
தின்னாளோ இல்லையானு நான் தவிப்பேன்
அவிச்சித் தந்த பயறில
அவளுக்காக மிச்சமும் வைப்பேன்
பொழுது சாஞ்சி வீடு போயி
அவ கையில நான் கொடுப்பேன் !

பொட்டப்புள்ள பெத்ததால
பொங்கலு தீபாவளி
எங்களுக்கு இல்ல
பொசுக்குனு செலவழிக்க
பொட்டியில காசும் இல்ல - அவ
காடு கரைக்குப் போகாத நாளுமில்ல
கடைசிவரை உழைக்காத பொழுதுமில்ல !

களை எடுப்பா கதிர் அறுப்பா
பாத்தி கட்டி நாத்தும் நடுவா
வயசு வந்த பொண்ணுக்காக
வாயக்கட்டி வயித்தக்கட்டி சேத்துவப்பா!

தாலி கட்டுன நாளுல இருந்து
பேரன் பேத்தி எடுத்தது வரை
உனக்குனு ஒருநாளும் நீ வாழலியே
வீதியில என்ன விட்டுவிட்டு
நீ மட்டும் இப்ப பரலோகம் போறீயே!

என் முழு உசுரும் நீ தானடி
இப்போ நீ இல்ல நான் பிணம் தானடி
உனக்கு மட்டுமா இந்த ஆறடி
நானும் வாரேன் கூட்டிட்டுப் போடி!

title

Click to add text, images, and other content
அழகான வாழ்க்கை
பயங்களின் நடுவில்தான்
இந்தப்பயணம்
துவங்கிற்று.....
எனக்கானவன்
இப்படித்தான் இருக்கவேண்டும்
என்கிற....
ஏராளம் கனவுகள்
எப்போதும் என்னுள்
இருந்ததில்லை....
சினேகிதங்களை
பார்த்துப்பார்த்து
தேர்ந்தெடுக்கிற நாம்...
கணவனை தேர்வுசெய்கையில்
விதியின் கையில்
விட்டு விட்டு விலகிவிடுகிறோம்....!!!..
பயங்களோடுதான்
உன் கரம்பிடிக்கிறேன்.....
உனக்கே உனக்கென்று
எழுதப்பட்டாகிற்று
எனது வாழ்க்கை....
உம்மாவின்
கைநழுவி...
யாதும் நீ என்றாகி....
வருகிறேன்.....
உன்னால் என்னை;
அழவைக்கவும் முடியும்...!!!
மகிழ்வூட்டவும் முடியும்....!!!
நல்ல கணவனால்
நல்ல மனைவியை
செதுக்க முடியுமென
நிரூபித்தவன் - நீ
வேலை பற்றிய
சுவாரசியங்களில்....
சமையலுக்கான அவசரங்களில்....
அருந்தும் தேநீரில்....
சின்னச் சின்ன
சண்டைகளில்........
உடைகளை தேர்ந்தெடுப்பதில்....
என - நமக்குள் நிறைய்ய்ய
இருக்கிறது
வாழ்வின் சுவாரசியம்....!!!
''என்ன வாழ்க்கை இது... ''
என எப்போதும் புலம்பியதுமில்லை நான்...
அறிதலிலும்....
புரிதலிலும் இருக்கிறது...
அழகான வாழ்க்கை.....!!!!!
- ரஹீமா பைஷல்

title

Click to add text, images, and other content

ஆழிப்பேரலையே..

 ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....

title

Click to add text, images, and other content

Wednesday, December 29, 2010

அதிகாலை ஒளி அதை 
ஜன்னல் வழி நோக்கிவிட்டு..
மீண்டும் குறுகிக்கொள்ள,
கண்கள் உறங்கிவிடும்..


நீ அங்கு இருந்திருந்தால்..?

பாடலிடை தோன்றும்
வரிகள் சில கேட்கையில்,
இதழோரம் தோன்றும்..
வெட்கங்கள்.

நீ அங்கு இருந்திருந்தால்..?

நட்பு குழாமுடன்
கோப்பை காபிக்கள்..
அதில்,
தேநீர்கரண்டியால்..
உருவற்ற ஓவியங்கள்..
சிந்தை,
அது எங்கோ சென்றிருக்க..

நீ அங்கு இருந்திருந்தால்..?

உறவுகள் ஒன்றாய்
கலந்திருக்க..
நினைவுகளாய் புகைப்படங்கள்,
அவர்தம் உறவுடன்
அவரவர் அமர்ந்தபடி ..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்டும் நரியும்,
கரங்களிடை ஊற என  
நினைவில் நிழலாடும், 
சிறுவயது விளையாட்டும்,
சேர்ந்தொலிக்கும் சிரிப்பொலியுமாய்.. 
நட்புடன் நிழலனைத்தும்,
தற்போது நிஜமாய்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

வலப்பாதம் அதை அழகாய்
அம்மி மீது அவள் வைக்க..
மெட்டியிட்ட பின் நிமிர்ந்து
அழகாய் அவன் பார்வை..
விடையாய் இவளது ,
நானப்புன்னகை.. 

நீ அங்கு இருந்திருந்தால்..?

கருப்பைமேல் செவிவைத்து,
கேட்டிரா  இசைகேட்கும்..
தந்தையெனும் பூரிப்பில்
அவளது சற்றே வளர்,
முதல் குழந்தை..
அவன்,

நீ அங்கு இருந்திருந்தால்...?

அவளும் அவனுமாய்,
கேள்விக்கணை பலதொடுக்க..
நகைத்தபடி பலபற்றி
அவன் விடையளிக்க ..
பெருமிதம் சிறிதுகொள்ளும்
பிஞ்சுகள் அவ்விரண்டும்..

நீ அங்கு இருந்திருந்தால்..?

நண்பர்கூட்டமென்று
பிறர் சொல்ல,
அழகு குடும்பமென்று
நட்பு வியக்க,

நமது அங்கு இருந்திருந்தால்..?

Sunday, December 26, 2010

என்னவன் சிறுகிறுக்கன்...

அழகிய ஒரு வரியை
என் மனம் முனுமுனுக்க,
ஒருகரத்தால் இடைபற்றி
நிறுத்தற்குறியிடுவான்...
மெய்யருகில் வரியதற்கு..
மௌனங்கள் நிரம்பிவிடும்,
உரையாடல் நேரங்கள்..
அவன் காற்றும் என் செவியும்..

இதழ்வரியில்,
விரல் எழுதும்..
நேரம் அதுவென்றால் ?!
என்னவன் சிறு கிறுக்கன்,
அழகாய் செவியருகே
செஞ்சுருட்டி சந்தம் சொல்வான்..
நானும்  சிணுங்கிவிட..

அருகில் கிடந்திருந்தால் கூடல்,
இது பிறர் பொருள்..
என்னவன் சிறுகிறுக்கன்
காதல் பேசிடுவான் கரஹரப்ரியாவில்..
கரைந்திடுமோ காலம் அது,
எங்கள் இசைக்கூடல் வயப்பட்டு ...

தந்திக்கம்பிதனில்,
தந்தவிரல் மீட்டி..
என்னவன் சிறுகிறுக்கன்,
கல்யாணியில் தொடங்க..
இந்த வீணைக்கும் தெரியாத
ராகங்கள் பிறந்திடுமோ..

உயிரது கலந்திடுமோ!
உடலல்லால் ஸ்வரமதனால்..
இரவுகள்  விடிந்திடுமோ!
இணைந்தபடி இசையதனால்..
சிறுகிறுக்கன் என்னவனுடன்...

Thursday, December 23, 2010

உன்னால்,
சுவர்சாய்ந்து  புன்னகைகள்..
பல் துலக்கும் நொடிகளில்.

உன்னால்,
மௌனம் கூடிய வெட்கங்கள்..
படிகளில் பாதங்கள் செல்லுகையில். 

உன்னால்,
மழையிடை தனிஉரையாடல்கள்..
உனை பிடிக்குமென்று,
உரத்தகூறல்கள்..
உனை மிகப்பிடிக்குமென்று...

பொழிவது பொதிமேகமன்று..
என் விழியும்தான் என
பிறர் அறியாத்தருனங்கள்.. 
உன்னால்..

உன்னால்,
மேசைமேல் கிறுக்கல்கள்..
கிறுக்குத்தனம் பிடிக்காதவளுக்கு.

உன்னால்,
எனை சோதிக்கும் கனவுகள்..
பெண்மைக்கே உரித்தாய்,
அவை..
வேண்டாம் என்று வெறுத்ததுண்டு..
சிறு வெட்கத்தில் முடிந்ததுண்டு..
அதில் கண்ணீர்கள் இருந்ததுண்டு..

உன்னால்,
உனைபற்றிய நினைவுகள்..
இச்சிறுவாழ்வில்,
எய்தாலும்..
எழுத்துகளாய்..
உன்னிடமும் உன்பிறகுமாய்
வாழ்ந்திடும் எழுத்துகளாய்..

உன்னால்...

Tuesday, December 21, 2010

சுவர் நோக்கும் தனிமைகள்,
அதில் பிம்பங்கள் உனதேனோ?! 
நீயற்ற வெறுமைகளை,

மனம்..
உருவற்ற உயிராக்க,

சுவர்..
நிஜமற்ற  நிழலாக்க,

விழிமடல்..
திரைமறை துளியாக்க,  

விரல்..
உயிரும் நிஜமுமாய்,
வரி  உருவம்தர..
என் மனநிழலுக்கு,

பிம்பங்கள் உனது..
அதனால்தானோ?!

Friday, December 17, 2010

விளைவுகள் பற்றியன்று..
வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம்
நாங்களும் பேசுவதில்லை,
காதல் பற்றி..
ஏன்..!
பேசாத மௌனங்களே பல நேரம்..
தென்றலாய் இருந்திட
எண்ணம்...
எங்கும் சுழலா,
நிலைத்தென்றலாய்....
நீயும் அறியாது
உன் அருகாமை தென்றலாய்..

வெண்ணிலவாய் இருந்திட
எண்ணம்...
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி புன்னகைப்பாயே!

மழைத்துளியாய் இருந்திட
எண்ணம்..
அதையேனும் நீ ரசிப்பாயன்றோ? 

இசையாய் இருந்திட
எண்ணம்..
உன்னுள் நானும்,
என்னுள் நீயுமாய்,
உருவற்று ஒன்றிட..

புத்தகமாய் இருந்திட
எண்ணம்..
அடங்கியும் அடங்காதுமாய்,
உன் கரங்களுக்குள்..
சுதந்திரம் பேசுபவள் நானாயிற்றே
அதனால்...

உன் வெறுப்புகளாயேனும்
இருந்திட எண்ணம்,
அவையும் நினைவுகள்தானே..

எண்ணம் பல அதை உன்னுடன்
பகிர எண்ணம்...
பகிர்வுகளில் உனைப்பற்றிய
எண்ணமும் பலதென்று...

Tuesday, December 14, 2010

வாழ்வின் எல்லை,
இதன் பொருள்விளக்கம் தெரியாது..
இறப்பு என்றால்,
சிரிக்கத்தொன்றும்...

பயணம் முடிந்தபின்னும்,
பிறருள் வாழ்வதென்ன,
பொருள் பொய்த்திடுமோ?
அவ்வாறெனில்..

பொருள் அதுவாயின்..
சிறு அவா எனக்குள்ளே,
என் வாழ்வின் எல்லையறிய, 
பயணம் முடிந்தபின்னும் 
பயணிக்குமோ?
எம் எண்ணங்கள் உனை நோக்கி
என் வாழ்வின் எல்லை
எதுவென்று அறிய..

வாழ்வின் எல்லை எது?
எனக்கு பொருள் விளக்கம் தெரியாது...

title

Click to add text, images, and other content

Monday, December 13, 2010

கண்ணீர்கவிதை,
ஆம்..
ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீங்கி..
கண்ணீரில் விளைந்தவை இவையாவும்,
தோல்விகளால் துவண்டாள் இல்லை,
மாறாய்..
துவண்டவளை தூக்கியதுண்டு,
பலரது மனக்குறிகள்,
கழித்தலானபொழுது..
குறுக்காற்கோடிட்டு,
புன்னகை கூட்டியதுண்டு..
இறுகப்பூட்டிவைத்து,
வெளிக்கொணரா ரகசியங்கள்.
கண்ணீர்க்கு திரையிட்டு, 
புன்னகைகள் பலநேரம்.. 
யதார்த்தம் என்பது,
மறுபெயர் ஆனதுண்டு..
ஆனால் இன்று ஏனோ,
சொன்னவைகள் பொய்த்திட்டது..
மேற்ச்சொன்னவைகள் பொய்த்திட்டது..
தந்தையின் தோள்தட்டலும்,
தோல்வியடைகிறது என் கண்ணீரிடம்..
அன்னையின் ஊக்கங்கள் அந்நேரத்திற்கே,
உடன்பிறப்புடன் உரையாடலில்,
தானாய் பெருக்கெடுக்கும் நீர்த்துளிகள்..
உன்னிடம் எதிர்பார்த்தால்,
பொய்த்துவிடும் தவிர்த்துவிட்டேன்..
பொய்ப்பதை எதிர்கொள்ளும்,
துணிவில்லை என் மனதுக்கு..
துணிவற்றதன்மை அது எனக்கு, 
உன்னிடம் மட்டும் ஏனோ..
ஆறுதல் என்பதென்
அகராதிக்கு தேவையில்லை,
இருப்பினும் ஏனோ தேடுகிறாள்
என்னுளவள்,
தோல்வியால் துவண்டிடல்
எந்தன் இயல்பில்லை,
இதை ஏற்கவில்லை ஏனோ..
என்னுள் அந்த மானிடம்..
வெளிப்பாடு இதோ,
நிழல் தேடும் மரம்போல்,
தொடுகரம் தேடி மனம்..
ஏனோ பிடிக்கவில்லை,
இவ்வரிகள் எதுவும் எமக்கு..

Saturday, December 11, 2010

தேவை.. 
உனது ஆழ்முத்தங்கள்
விழைவது என் ..
வெட்கப்புன்னகைகள்..

தேவை..
உனது அருகாமை
விழைவது என் ,
இருள் வானத்து,
வெண்ணிலா நிமிடங்கள்..

தேவை..
உனது குரல்மொழிகள்
விழைவது என்,
ரசிக்கும் தனிமைகள்

தேவை..
உனது தொடுகரங்கள் 
விழைவது என்,
துவளும் தருணங்கள்

தேவை..
உன்னுடன் ஊடல்கள்
விழைவது,
தொடரும் கூடல்கள்

தேவை..
உனது முகத்தோற்றம்
விழைவது என்,
விடியல்கள்

தேவை..
உனது பிள்ளைத்தனம்    
விழைவது என், 
பெண்மையும் தாய்மையும்

தேவை..
உன்னுடன் மெய் வாழ்வு 
விழைவது என்,
கனாக்காலங்கள் ..

Friday, December 10, 2010

நல்லதோர் வீணை செய்தோம்,
அதன் நரம்புகள் நவின்றவை,
நல்லிசை என்றோம்.. 
நற்றமிழும் நல்லிசையும் வயம்கொள்ள,
பெற்ற மகவுகள் நாம்,
அதை புழுதியில் எறிந்தோம்..
ஆம்,
நல்லதோர் வீணை செய்தோம்-அதை 
நலங்கெட புழுதியில் எறிந்துவிட்டோம்..
உன் வரிகள் உமக்காய் உரித்தானதோ,
நல்லிசையே?

Thursday, December 9, 2010

நம்மிடை நெருக்கங்கள்,
குறைந்ததாய் சிறு எண்ணம்..
அருகாமை உமதேனக்கு,
வேண்டும் என நினைக்க..
நெருக்கங்கள்..
கண்பெருகும் அத்துளியை,
சிறைபிடிக்க இமைகளிடை
நெருக்கங்கள்..

Wednesday, December 8, 2010

மழைக்காலத்து மையுதிறல்கள்...



பச்சை நிற படறல்களில்,
உதிர்ந்து சிதறும் நீரினமே..
பிம்பமாய் பசுமையது,
குறுகிப்படறும் உன்னுள்ளே,
மறைத்தொளித்த காதலோ?
---------------------------
இருவரிடை தோன்றும்,
முத்தத்து முன் நிமிடம்
சுவாசமெனும் தூரிகையால்..
நிறமற்ற ஓவியங்கள்,
பிறபுலன்கள் சுயமிழந்து
உணரல்கள் புன்னகையாய்..
 ----------------------------
அந்திக்கும் நிலவுக்கும்
இடைதோன்றும் வான் நீலம்
ஏனோ குறுநகைகள்
காணும் கண்களினுள்..
இயற்கைக்கும் சொப்பனமோ
எவர் மீதோ என எண்ணி....

Saturday, December 4, 2010

ஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...



       
           இதை எழுதும்பொழுது எனக்கு எந்த கோபமோ ஆத்திரமோ இல்லை,ஆம் கண்டிப்பாக இல்லை மாறாக அது பரிதாப உணர்ச்சியாக மாறிவிட்டது.இரவு பத்து மணி சுமார்,எப்பொழுதும் போல் பெற்றோரின் தொலைபேசி அழைப்பு படிப்பு ,உறக்கம்,உணவு பற்றியெல்லாம் பேசிவிட்டு நானும் தந்தையும் அன்று நிகழ்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சுக்கிடையே என் பள்ளி தோழி ஒருத்தியை பற்றிய பேச்சு எட்டி பார்த்தது.செய்தி இதுதான்,அவளுக்கு இந்த மாத இறுதியில் திருமணமாம்,கேட்டதும் ஏனோ ஒரு எரிச்சல் கலந்த ஆத்திரம்,கோபம் என, என்னிலிருந்து எப்பொழுதும் போல் எட்டி பார்த்தது.என்னை போல் பொறியியல் படிப்பவள்தான் இன்னும் படிப்பு கூட முடிந்தபாடில்லை அதற்குள் திருமணம்.எரிச்சல் ஏனெனில் இவ்வாறான செய்திகள் பலதை கேட்டுக்கொண்டிருப்பதுதான்,கோபமும் ஆத்திரமும் அவர்களது பெற்றோரின் அறிவிலித்தனத்தை எண்ணி,மரியாதைக்குறைவாக தோன்றினால் மன்னிக்கவும் வேறு எவ்வாறு இதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.இந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு அப்பா தொலைபேசியை அம்மாவிடம் தர.அம்மாவிடம் நான் பேசிய முதல் வார்த்தை இதுதான் "என்னமா அவங்க லூசாகிட்டாங்களா?".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா? என்ன சொல்லிச்சு" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... "புரோபசரா?!..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம்? இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு?!,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொல்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின்  நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை  சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம்  என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால்  ஏன் இவ்வாறு? எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்கள் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பா?அவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறது!.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன்  ஒன்ற இயலுமா?இதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பரா? ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா?.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா?.எதை பின்பற்றுகிறோமோ இல்லையோ பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்பதை மட்டும் நன்றாக மனதில் பதித்துகொண்டுவிட்டனர் பலர்  .இதையெல்லாம் கூறினாள் அவர்களை பற்றிய கவலை உனக்கு எதற்கு என்கிறாள் தோழி ஒருத்தி.அமாம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.கல்லூரியில் நீ எனக்கு முன் இருக்கை போல் ,பள்ளியில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து படித்தவள் அவ்வளவே.கல்லூரி அடையாள அட்டை தாண்டி யோசிக்காத அவள் பற்றிய கவலை எனக்கு தேவை இல்லைதான்.ஆனால் நமக்குதான் எந்த நிகழ்விற்கும் பழமொழி கூறும் பழக்கம் உண்டாயிற்றே."அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும்".ஆம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.

Thursday, December 2, 2010

சில்லிடும் மழைக்காற்று  
ஜன்னல் வழி உள்புக, 
ஏனோ ஏங்கிடும்..

குளிரில் குறுகிவிடும்
உடல் அது,
அணைத்திடும்
உன் கரங்களுக்காய்..

தன்னால் சிவந்திடும்
செவி மடல்,
இதம் தரும்
உன் சுவாசத்திற்காய்..

போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும்
பாதங்கள்,
கள்ளமாய் தீண்டிவிடும்
உன் விரல்களுக்காய்..

சிலிர்ப்பில் சிலையான
கன்னங்கள்,
வெம்மை படர்ந்தோடும்
உள்ளங்கைகளுக்காய்..

அகம் மட்டும் ஏனோ,
உறையாமல் குதூகலித்து..
உனைபற்றிய நினைவுகள்,
அதை அரவணைத்திருப்பதால்..

title

Click to add text, images, and other content

Tuesday, November 23, 2010

யாதுமாகி நின்றாயோ..?!
தந்தை தாய்,
உடன்பிறப்பு.. 
நட்பென..
ஒளி எவர் பெயரானாலும்,
ஒலிப்பது உன் பெயரே..
ஆம்,
ஒலிப்பதில் மட்டுமே,
உன் பெயரென்றாகிவிட்டது..
என் அலைபேசியில்..
உன்னில் அன்பு உயிர்பித்ததோ?
நான் அறியேன்,
ஆனால்..
உன்பெயர் கூறும் கணம்தோறும்..
உயிர்பிக்கிறாள் அவள்,
கணம்தோறும் உனை எண்ணி..
உயிர்த்திடும் எனைப்போல,
என் அலைபேசி..
யாதுமாகி நின்றாயோ..?!

Monday, November 22, 2010

நேற்று..இன்று..நாளை..

ஏனோ பிடிக்கவில்லை,
நாட்கள் நகர்வது..
நேற்றைய நீ
காணாமற்போவதால்..

ஆனால்,
வியந்திருக்கிறேன்..
நாளைய உனை,
எதிர்கொள்ளப்போவதென்னி..

இப்படிக்கு,
இன்றைய உன்னில்
லயித்திருக்கும் மனம்..
மாற்றங்கள் மட்டுமே,
நிலைத்திருக்கும் உன்னில்..
லயித்திருக்கும் என் மனம்.
     

Wednesday, November 17, 2010


நினைவுகள்..
ஏராளம்..
இங்கு சேமிக்க,
மனமதில் சேமிக்க..
எதிர்வரும் காலமதில்..
ஜன்னலிடை அமர்ந்து,
சிறிதாய் பின்னந்தலைதட்டி,
இதழோரம் சிரிக்கும்..
நொடிகளுக்காய்..
சேமிக்கும் நினைவுகள்
ஏராளம்..  

Monday, November 15, 2010

பெருங்கவிதையின் சிறுவரிகள் ..

வான்தோன்றும் நிலவதாய்
மாறிவிட எண்ணம்
உன்னவளை எண்ணியேனும்
எனை நோக்கி சிரிப்பாயே..

Sunday, November 14, 2010

இதோ என் கரத்தில்..
வெண்காகிதங்கள்,
காத்திருக்கிறது..
உனக்கான என் எழுத்துக்களுக்காய்..
நீலம் கொண்டு எழுதும் அவ்வரிகளுக்காய்..
எண்ணினேன்.
என் நிலையும் இங்கு அவ்வாறே..
உடல்,
ஊன்,
உயிர்,
உள்ளோடும்  குருதி,  
அவற்றிடை என் எண்ணங்கள்..
யாவும் காத்திருக்கிறது,  
உன்னால் எழுதப்பட...

Thursday, November 11, 2010

கவிவரி என்றாய்..
ஆம் அறிந்ததே,
சொல்வனத்தில் இடசொன்னாய்..
நீ உணர்ந்திடா வரிகளை,
உலகம் வியந்து என்ன பயன்..
எண்ணமதை கைவிட்டேன்..
அறிவிலித்தனமாய் தோன்றினாலும்
மெய் நானென..
உயிர் நீயானாய்..
உன்னால் உயிர்மைத்துவிட்டது,
என்னுள்..
ஏனோ இந்த நாணம்..
புகைப்படங்கள் காண்கையிலும்
புன்னகைக்கிறேன் வலம்திரும்பி..
இடதில்தான் நீயாயிற்றே..
அருகிருக்கும் தோழி
புதிராய் பார்க்கிறாள்..
அதிசய நிகழ்வை
அடங்காத்தனம் மிக்கவென்று
இவளையா வர்ணித்தோமென?
புரியவில்லை அவளுக்கு
அதற்கு விடை நீ என்று..
நிற்க..
உயிர் மட்டுமா நீயானாய்?
நான் என்ன செய்வேன்,
அகத்தியன் தமிழ்..
உயிர்..
மெய்..
உயிர்மெய்யோடு நின்றுவிட..
                                              
குறிப்பு : வர்ணித்த வார்த்தையை திரும்பப்பெற எண்ணமாம் தோழிக்கு..வேண்டாம் என்றுவிட்டது அவள் வர்ணித்த "சற்றே வளர்ந்த  பிசாசு".. :P x( ...

title

Click to add text, images, and other content

பக்கங்கள் படமாக...திரைப்படமாக

        ஒரு மதிய உணவு இடைவேளையின்போது  என் தோழி ஒருத்தியுடன் நடந்த சிறு விவாதம்.புத்தகங்களை அதாவது நாவல்களை திரைப்படமாக உருமாற்றம் செய்யும் ஒரு நாகரிகம் பற்றி,இந்த விவாதம் தொடங்கியதற்கான காரணத்தை முதலில் கூறிவிடுகிறேன், பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் மற்றொரு நாவலும் படமாக்கப்படப்போவதாக வந்த செய்தியே அதற்கு காரணம்.நான் சரி பாதி அதற்கு ஆதரவாக  பேசினாலும்,அந்த நடைமுறையை எதிர்க்கவும் தோன்றுகிறது. புத்தகங்களை படிக்க இயலா, எழுத்து ஞானம் இல்லா பாமர மக்களை சேறும் வகையிலேயே நாங்கள் அதனை  புத்தகங்களை படமாக்குகின்றோம் என்று கூறும் ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்களை தற்காலிகமாக "பணம் மறை(பறி)க்கும் சப்பைகட்டு" இயக்கத்தில் சேர்த்துவிடலாம்.ஏன் சார் 100/-  புத்தகத்தையே வாங்க வழி இல்லாதவன் நீங்க தர 200,300  ரூபாய்   டிக்கெட்டை எப்படி வாங்குவான்?.அதுவாவது இருக்கட்டும்,படம்  எடுக்கிறேன் பேர் வழி என்று புத்தகத்தின் முன் பத்து பக்கத்தையும் பின் பத்து பக்கத்தையும் சேர்த்துவிட்டு  நடுவில் இருப்பவற்றை கழுதைக்கு இறையாக்கிவிட்டு படம் எடுப்பவர்கள்தான் இன்றைய நிலையில் அதிகம் உள்ளனர்,அதுவும் ஆங்கில பட இயக்குனர்கள் பலர் இதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்றுதான் கூறவேண்டும், அவர்களுக்கே புரியாது போயினும் அதை திரைப்படமாக்குகிறேன் என்று களமிறங்குபவர்கள் பட்டியல் பெரியது,  சாதாரண உதாரணம் ஹாரி பாட்டர் தொகுப்பினை திரைப்படமாக உருவாகிய விதம்.. முதல் பாகத்தில் புத்தகத்தின் பத்து பக்கம் மறைக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தில் புத்தகத்தின் பாதி பக்கம் மறக்கப்பட்டு மொத்தத்தில் இறுதியில் ஹாரியே காணாமற்போய்விடுவாரோ  என்று என்னும் அளவிற்கு எடுக்கப்பட்ட திரைப்படம்.அது போல்தான் டேன் ப்ரௌனின் படைப்புகளும் வாழை இல்லை போட்டு விழுங்கப்பட்டன..மரியோ புசோவின் காட் பாதரும் அவ்வாறே ஆனால் மார்லன் பிராண்டோ என்ற ஒருவன் இருந்ததால் மறைக்கப்பட்ட/மறக்கப்பட பல பிழைகள் பொறுத்தருளப்பட்டன. எங்களுக்கு  "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" திரைப்படம் இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு "ஆம்! நீங்கள் கூறுவதை ஆமோதிக்கிறேன் புத்தகத்தை விட திரைப்படத்தில் எளிதாக காண்பித்திருந்தார்கள்". ஆனால் அதில் இயக்குனர் என்னும் ஒருவரின் பங்கு எங்கு இருந்தது?,இயக்குனர் என்பவரின் உழைப்பு இருந்தாலும் தனித்துவம் என்ற ஒன்று எங்கே சென்றது, அவருக்கு இயக்குனர் அன்றே பெயர் அல்லவே எங்கோ உள்ளிருக்கும் புதையலை தோண்டி எடுத்து வெளியுலகுக்கு காண்பிக்கும் மானிடனுக்கு நிகர்,அவ்வளவே.அதற்காக நம் தமிழ் திரையுலகில் (குறிப்பு : நான் கோலிவுட் என்று கூறவில்லை) எவரும் அவ்வாறு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று சொல்லவரவில்லை பகவதிபுரம் ரெயில்வே கேட்(கரையெல்லாம் செண்பகப்பூ), மோகமுள்,சில நேரங்களில் சில மனிதர்கள் , என பல முயற்சிகள் படங்களாக வெளிவந்துள்ளன.ஆனால்,அவ்வளவாக எதையும் அவர்கள் விழுங்கவில்லை,ஆனால் எப்படி பார்த்தாலும் புத்தகங்களாக படித்து அதை ரசித்து அவற்றை தம்மனதில் ஒரு உருவிற்கு கொணர்ந்து கதாப்பாத்திரமாக நிறுத்தியவர்களுக்கு,திரையில் வேறு  ஒருவர் தோன்றி அந்த பாத்திரத்திற்கு நியாயம் தருவது பல நேரங்களில் உகந்ததாக இருந்ததில்லை நானும் அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஒருத்தி , அதற்காக அப்படங்களை ரசிக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் வேறு எவரோ ஒருவர் படைத்த பாத்திரங்களை திரைப்படமாக்கி ஆஸ்கார் ,தேசிய விருதுகள் என அடுக்குவது , ஒரு உண்மையான இயக்குனரின்/திரைப்பட கதாசிரியரின் தனித்துவம்,கற்பனைத்திறம் உழைப்பு ஆகியவற்றை அவமதிப்பது போல் ஆகாது?அதுவே எம் எண்ணம்,வாதம் அனைத்தும்.கற்பனை திறம் தனித்துவம் என்றதும் நினைவில் வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் எந்த புத்தகத்திற்கும் திரை வடிவம் கொடுத்ததில்லை ஆனால் அவரது தளபதி , நாயகன் ,இருவர் போல மனிதத்தின் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த படம் வேறில்லை,  ஒரு அலைபாயுதேவை போல் அழகிய ஊடல் கலந்த காதலை,கணவன் மனைவி உறவை யாமரிந்தவரையில் எந்த புத்தகத்தை படமாக்கியவரும் அழகாக சொல்லியது இல்லை.அவரினும் பெரிய சகாப்தம் தமிழ் சினிமாவிற்கு வடிவம் கொடுத்த பழம் நம் கே.பாலச்சந்தர் அவர் எந்த புத்தகத்தை படித்தும் அதனால் ஈர்க்கப்பட்டு  ஒரு திரைப்படத்தை உருவாக்கியதில்லை ஆனால் அவரைப்போல், சாதாரண புத்தகம் எழுதுபவனும் தன் கதாப்பாத்திரத்தை செதுக்கியதில்லை ,அவரைபோல் யதார்த்தம்,மனித இயல்பு என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்கள் வேறில்லை , 'அன்பே சிவம்' என்ற ஒரு படம் மட்டும் போதாது நம் மற்றொரு கலைஞனின் தனித்துவ திறம் பற்றி கூற,வசந்தபாலன் என்பவனை போல் சகோதரத்துவத்தை எந்த புத்தகமும் வர்ணித்ததில்லை,கேமரூன் போல் அழகிய காதலை எவரும் சொல்லியதில்லை.இவர்கள் நான் கூற விழைந்த அந்த தனித்துவம் மிக்க கற்பனையாளர்கள் பட்டியலில் ஒரு பாகம் அவ்வளவே இன்னும் பலர் இருக்கின்றனர் அப்பட்டியலில்  நாம் எப்பொழுதும் தோள் தட்டிக்கொண்டு கூறும்  "உலகத்தரம்" என்ற வார்த்தைக்கு இணையானவர்கள், ஆனால் பக்கங்களை படமாக்கும் இயக்குனர்கள் இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் என்பது சரிவரக்கிடைப்பதில்லை அல்லது அத்திரைகளுக்கு பின்னால் மறைக்கப்பட்டுவிடுகிறது .ஒரு பொருளை பற்றி அதன் தகுதிக்கு மீறி புகழ்வதும், விலையற்ற ஒன்றிற்கு தராசு இடுவதும்தான் நம்மிடையே பலரின் பிறப்பு இயல்பாயிற்றே.                   

Saturday, October 9, 2010

நீயற்ற என் நொடிகள் ..

காபிக்கள்...
எனக்கான,
உன் முத்தங்களாய்

என் எழுத்துக்கள்..
உன்னுடன்,
நேரிடை எண்ணப்பகிர்தல்

லயித்திருக்கும் இசைக்கணங்கள் 
என் இறுதிவரை.. 
எனக்குள் ஒன்றிவிட்டாய்..
நீயும் அவ்வாறே..

உன்னால்..
என்னின்று பிறக்கும் கவி வரிகள்,
நமக்காய்..
நமதான பிள்ளைகள்.. 

அனைத்தும் கலந்த இயற்கை வாசம்,
நீயறியா உன்வாசம்..
உன் அருகாமை..

எனை வருடும் தென்றல்,
நீ  ஸ்பரிசிக்கும் நொடிகள்.. 

என்னுள் இறங்கும் மழைத்துளிகள்,
உன் காமக்கணங்கள்..

வாதிடும் தருணம்,
உன்னை வெறுப்பேற்றும் நொடிகள்..

தலையணை ஈரங்கள்,
உன் மடி சாய்ந்து கண்ணீர்..
நீ அரவணைக்காவிடினும்.. 

நட்பிற்கான அக்கறையில் ,
நீ எந்தன் குழந்தையடா..

என்னிலிருந்து உந்தன் வெளிப்பாடு
என் குரலாய்..
என் அலைபேசி சிணுங்கல்களில்,    
உன் பெயர்..


விரல் தீட்டும் ஓவியங்கள்
உன் மன வண்ணங்கள்..

என் சிரிப்புகள்,
நம் மகிழ்ச்சிகள்.. 

என் கண்ணீர்த்துளிகள்,
நம்மிடை சிறு சண்டைகள்..

என் குறும்புகள்,
உனதருகே சிறு பிள்ளையாய்..

என் புத்தகங்கள்...
நீ அறியாது,
உனை வியக்கும் நான்.

என் நட்புகள்  வட்டாரம்,
நாம் நம் குடும்பத்துடன்..

இசைக்கும் வரிகள்,
நம் வாழ்க்கை..   

வாழ்கிறேன்,
நீ அறியாமல்..
உன்னுடன் நான்.

நீயற்ற என் நொடிகள்..
தலைப்பு பொய்த்ததோ?!

Thursday, October 7, 2010

எது கூறினும் வாதிடுவான் சிலசமயம்,
கூற்றை மறுப்பதற்கே பிறந்தவன் போல்,

அவளும் பேசவில்லை நான் ஏன் பேச?
இந்த சிறுபிள்ளை திமிருண்டு இவனிடம்

மழலையின் புரியா மந்திர சொல்போல்
இவன் பேச்சில் பொதிந்திருக்கும் ஆயிரம்

நினைத்ததை அடைந்திடும் குணமுண்டு இவனுக்கு
மிட்டாய்களுக்கு அடம்பிடிக்கும் பிஞ்சுகள்போல்..

அழகாய் புன்னகைக்கும் என் அழகு இது
அழகாயன் அவன் மோகனம் இதுவென்று தோன்றும்

கனநேரம் பேசிடுவான் சில நேரம் மௌனிப்பான்
மௌனத்தில் பல எண்ணம் அவன் நெஞ்சத்திலோடும்
தவழும் பாலம்அதன் மனதின் பல சிந்தை போல்..

பேசும் வார்த்தைகள் மெத்தனமாய் இருந்தாலும்,
அதில் தோன்றும் குழந்தை என் மனமிங்கு அறியும்..

இந்த வளர்குழந்தைக்கு..
எந்தன் சிறுகுறும்புக்கு 
நெற்றி முத்தமிட்டு மனம்,
ஆரிரரோ பாடும்..
உச்சந்தலை வருடி மனம்,
நல்லிரவு கூறும்..
நெஞ்சம் பூரித்து புன்னகைக்கும்,
எந்தன் பிள்ளையவன்..
மோகன உறக்கம் கண்டு..

Tuesday, October 5, 2010

சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்ததில்...

சுற்றி இருப்பவர்களின் எண்ணங்கள் என்பது பல நேரங்களில் பல விதமாக மாறுகிறது..நேற்று நன்றாக பேசியவள் இன்று முகம் திருப்பிகொள்ளுவாள்..ஊரில் அனைவருக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நானும் அவர்களுடன் சேர்ந்து  அந்த நபரை வெறுக்க தேவையில்லை..நேற்று என் மனம் தெளிவாக இருக்கிறது என்று கூறியவள் இன்று நேரம் போக்கவே புலம்புவாள்..நேற்று ஒருவர் செய்த காரியம் இன்று எனக்கு பிடிக்காமல் போகலாம்..நேற்று முகம் பார்த்து அனைவர் மத்தியிலும் புன்னகைத்தவன்  இன்று அதே அனைவர் மத்தியிலும் கண்டும் காணாது செல்லுவான்..நேற்று உன் கூற்று மிகச்சரி என்று சொன்னவன் இன்று அதே கூற்றை எதிர்ப்பான்..இவர்கள் என்னிடம் முறைக்கிறாள் ,புலம்புகிறாள்,ஒதுக்குகிறான்,எதிர்க்கிறான் என்பதற்காக நானும் அவர்களிடமிருந்து விலக முடியாது.அதற்கக்காக அவர்கள் கூற்றுடன் நான் ஒத்துபோகிறேன் அல்லது அவர்தம் கூற்றை மதிக்காது இருப்பதற்காகவே நான் சிலவற்றை செய்கிறேன் என்பது தவறு,ஏனில் அத்தருணங்களில் இவர்களைப்பற்றியதான என் எண்ணங்கள் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபடுகிறது. எண்ண மாற்றங்களும் அவர்தம் நடவடிக்கைகள் மாறுவதும்  மனித இயல்பு.இதுவே நிலை என்பது என் ஆணித்தரமான எண்ணம்,அவ்வளவே.இந்த எமது எண்ணமானது பலருக்கு பிடிக்காமல் சென்றதுண்டு பலருக்கு பிடித்ததுண்டு,பலருக்கு பித்தென்று தோன்றியதுண்டு.அதற்காக என் நிலையிலிறிந்து நான் மாற இயலாது.ஏனில் என் இந்த சிறிய வாழ்வில் என் எண்ணங்கள்  படி வாழவே எனக்கு இங்கு நேரமில்லை ஆக பிறர் எண்ணங்கள் படி வாழ்வது என்பது சாத்தியமற்றவைகளையும் தாண்டிய ஒன்றாகிவிடுகிறது.

Monday, October 4, 2010

என்னவன் மடிசாய்ந்து
உணர்ந்திருப்பேன்,
இளையவனின் இசையை
தாலாட்டாய்,
இறுதி என்பது மறுநொடியாயின்
இது என்ன புதுவித ஆசை,
தாயிடத்தல்லாததாய்,
ஒரு தாலாட்டு கேட்டிட..
புரியவில்லை எனக்கு..
ஆனால் ஏனோ,
அத்தாயிடத்து சிறுகுழந்தைபோல் ஆகிவிடுகிறது..
அவன் தருவில் என் மனம்..

இப்படிக்கு
- ( :-);-) :P ;D :P)

Monday, September 27, 2010

கார்மேகத்தின் கூடலுக்கு,
பிறந்த முத்துக்கள்..
மண்சேர..
உதித்தன மனிதப்புன்னகைகள்,
பசுமை கண்டு, 
பறவையாய்...

Monday, September 20, 2010

நல்ல மானுடம் போல்..

ஞானிபோல் பேசும் மனம் சிலநேரம்..
நெஞ்சம் மானுடம் போல்,
ஆசை கொள்ளும் பலநேரம்..
ஆனால் பாதை அவர்தமதல்ல..
இவள் செல்லும் பாதை அவர்தமதல்ல,
கூட்டத்தினுள் மௌனம் தேடும்,
தனிமையில் இயற்கையுடன் இசைமொழியும்
இவள் மனம்,
நகைச்சுவையும் உடன் சேர்ந்த நையாண்டியும்,
காதலும் அதில் கலந்த காமமும்,
பொறாமையும் அளவற்ற கோபமும்,
சிறு சுயநலமும் சோம்பித்திரிதலும்,
இவள்..
நல்ல மானுடம் போல்..
ஆனால் செல்லும் பாதை அவர்தமதல்ல..
அவை இவள் நிரந்தரம் அல்ல..
இனமறியா ஒன்றை உணர்திடும் இவள் மனம்
தினம் தினம்..
பிறர் அடையா ஒன்றை,
இவள் புரியா ஒன்றை,
ஆன்மா, விடை தேடி...
இவள் பாதை..
புதியதாய் பிறந்ததும் அல்ல,
அந்த பாதை..  
பலர் தனியே சென்றது,
பலர் தயக்கம் கொண்டது, 
முடிவற்ற பாதையில் இவள்,
தோல்வி வெற்றி இதற்கில்லை..
அவையனைத்தும் இதை தேட..
அவையனைத்தும் இதில் அடங்க
அப்பாதை நோக்கி இவள்
ஆனால்,
இவள் பாதை அவர்தமதல்ல..
நல்ல மானுடத்ததல்ல ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக