தர்மயுத்தம்..
நிலவோடு,
மெளனத்தால்
உறவமைத்து
கதை பல
பேசி
கரைந்து போகிறது
நாழிகை.
நிஐம் என
நினைத்து,
நிழலோடும்
வாழ்ந்தும்
கனத்து போகிறது
இதயம்.
நிறுத்தாமல்
ஓடும்
கடிகார
முள்ளுக்கும்
எல்லையுண்டு -
ஆனால்
நான் நான்
போக
திசைகள்
இல்லை.
இருட்டில்
இருந்து
வெளிச்சத்தை
தேடும்
அவலம்
இன்று.
ஏன் என்னும்
கேள்விக்கு
விடையில்லா
தொடர்கதை.
தேடும்
இடமெங்கும்
வழிந்து
கிடக்கிறது முகங்கள்
ஆனால்,
நான் தேடும்
விழிகள்
இல்லை
அங்கு.
தேன்கூடாய்
இருந்து வாழ்வில்
கல்லெறி பட்டதாய்
வலிகள்
உதயத்தை
தொலைத்து
இதயத்தை கிழித்து
விட்டேன்
துண்டிலில் பட்ட
மீனாய்
பொறிக்குள்
சிக்கி விட்டேன்.
நாலுபக்கமும்
தாக்குதல் நடத்த
ஒவ்வொன்றையாய்
என்னை விட்டு
போக
எனக்காக யார்
இருப்பார் எனி?
வெறுக்கும்
உள்ளங்களுக்குள்ளும்
ஜெயிக்க
துடிக்கும் மனசு,
பரிகாசம்
செய்பவர்களுக்கு
வாழ்க்கையை புரிய
வைக்க
போராட தயாராகும்
எண்ணம்,
நினைத்ததை
முடிக்க
தொடங்கிற்று
தர்மயுத்தம்
வெற்றிகள்
எனதாகலாம்
வாழ்வும்
வெளிச்சமாகலாம்.
இல்லையேல்,
நாளை நானும் ஞானி
ஆகலாம்....
Sunday, March 11, 2012
Share
இயற்கையும், நீயும்..
அதிகாலை
சூரிய
ஒளியில்,
லேசாக வீசும்
காற்று
பனித்துளிகளில்
உரசலில்
துளிரும் பூக்கள்
போன்று
அரங்கேறுகின்றது
உன்னோடான
காதல்.
கண்
நோக்கும்
இடமெங்கும்
பரந்தே
கிடங்கும்
பசுமை
நிறைந்த
வயல்வெளிகள்
போல்
நீண்டே
செல்கின்றது
உன்
நினைவுகள்..
நந்தவனமெங்கும்
நாணத்துடன்
சிரிக்கும்
பூக்கள்
சுண்டி
இழுக்கின்றன
உன் கண்களை
போல்..
தென்றலில்
மிதந்து
அசைந்தாடும்
மரங்கள் போல்
உன் கொடியிடை
நடை..
ஓராயிரம்
நட்சத்திரங்கள்
கூடி
நின்று
கும்மாளம்
போடுவதாய்
உன்
புன்னகை..
இப்படி
நீண்டே
செல்கின்றது
இயற்கையின்
ஒட்டத்தில்
நீழலாய்
ஆடுகின்றது
உன் நினைவுகளும்
சேர்ந்து.
Sunday, March 4, 2012
Share
நம்பிக்கையில்....
நிச்சயமற்ற
நாளை
பொழுது
புலரும்
என்ற
நம்பிக்கையில்
கரைந்து
போகின்றது
சூரியன்...
விருட்சமாய்
ஓங்கி எழுவோம்
என்ற
நம்பிக்கையில்
மண்ணில்
புதையுண்டு
தற்கொலை
செய்து
கொள்கின்றன
விதைகள்..
கடலை
சென்றடைவோம்
என்ற
நம்பிக்கையில்
தட்டுத்
தடுமாறி
திசைகளில்
இன்றி
விரைந்து
ஓடுகின்றன
நதிகள்...
திரும்பி
வருவோம்
என்ற
நம்பிக்கையில்
ஒவ்வொரு
முறையும்
நுரையீரலை தொட்டு
வருகின்றது
காற்று.
வருவான்
சூரியன்
தமக்கும்
வாழ்வு
கொடுப்பான்
என்ற
நம்பிக்கையில்
தவமிருக்கும்
மலர்கள்..
எழுந்தால்
நடக்கலாம்
என்ற
அதீத
நம்பிக்கையில்
தவளும்
பிச்சுக்
குழந்தையின்
பாதம்...
நாளைய
பொழுதுகள்
நமக்காகவும்
விடியலாம்
அன்று கனவில்
வாழும்
உன்
நினைவுகள்
நிஐயத்திலும்
வாழும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கும்
என் இதயம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக