தோல்வி
ஒரு சிலை உருவாக பல
கற்கள் உடைய வேண்டும்.
ஒரு ஓவியம் உருவாக பல
தூரிகைகள் அழிய வேண்டும்.
அழகிய ரோஜாக்கள் கூட
முட்களிளிருந்துதான் பிறக்கின்றன.
வாழ்வில் சாதிக்க பல
தோல்விகளை தழுவ வேண்டும்.
தோல்விகளை காணாதவன்
வெற்றிகளை காணமாட்டான்.
வெற்றிகளை கண்டவன்
தோல்விகளை மறக்கமாட்டன்.
விதி
கல்லறை என்பது வாழ துடிக்கும்
உயிர்களின் கிடங்கா ,
வாழ்கை என்பது சாக துடிக்கும்
உயிர்களின் சாபமா !
இதற்க்கு பெயர் தான் விதியோ ?
முயற்சி
தீகுச்சியிடம் கேட்டு பாருங்கள் ,
ஒரு நிமிட சாதனையை.
பட்டு பூச்சியிடம் கேட்டு பாருங்கள் ,
ஒரு நாள் சாதனையை.
மழையை கேட்டு பாருங்கள் ,
ஒரு துளி சாதனையை.
நிலவிடம் கேட்டு பாருங்கள் ,
ஒரு இரவு சாதனையை.
சாதனை என்பது நாம் செய்யும் அளவை பொருத்ததன்று,
நாம் செய்யும் முயற்சியை பொருத்தது.
எழுதியது கவியின் கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக