Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

போன புத்தாண்டுக்கு...சிரிக்க மட்டும்,


போன புத்தாண்டுக்கு...சிரிக்க மட்டும்,




மாப்பிளைக்கு என்ன போடுவீங்க என்று 
கேட்டது தப்பா போச்சு...


ஏன் ?


வரதட்சணை  கேட்டால் கேஸ் போடுவோம் என்று 
டக்கு என்று சொல்லுறாங்க....
========================================
இந்த புத்தாண்டுக்கு 
பொண்ணு மாப்பிளை உங்க வீட்டுக்கு வந்துள்ளார்களா ?


அட நீங்க ஒன்னு, போன புத்தாண்டுக்கு வந்தவர்கள் 
இன்னும் போக மனமில்லாமல் உள்ளார்கள்...





விடியல் வேண்டி நடத்தும்...




















விடுதலை நோக்கிய பயணம்
விபரீதம் அறிந்த போதும்
விடியல் வேண்டி நடத்தும்...


மானம் காக்க போராட்டம் 
மரணம் கூட விரும்பும்
மனங்கள் கொண்ட இனம்


வாழ்க்கை முழுதும் துயரம்
இருந்தும் உரக்க சொல்லும்
வானம் தொடும் தூரம்.


விரும்பி ஏற்கும் குணம் 
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்
விடுதலை ஒன்றே மந்திரம்


எண்ணிய எண்ணம் நடக்க 
விடுதலை நோக்கிய பயணம்
விடியல் வேண்டி நடத்தும்...


இறந்த உறவுகள் எல்லாம் 
விதைகளாய் மாறியது என்றும்
மீண்டும் முளைக்கும்,தழைக்கும்
எங்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கும்...



15 ஏப்., 2012

விண்ணப்பித்தால்...






























வலிமைமிக்க 
இரு கைகள் இணைந்தால் 
இணைத்தால்...


நினைத்ததை முடிக்கலாம்
நினைப்பதை நடத்திக்காட்டலாம்.


விருப்பமுள்ளவர்கள் 
விண்ணப்பித்தால்
அப்துல் கலாமாய்
மாறலாம்...


புதிய 
களம் காணலாம்
வினைத்தொடலாம்...


தொட்டதை எல்லாம் 
வெற்றியாக்கலாம்.
இந்த வெற்றி  உணர்வாய் 
இணைந்த கைகளாய்
மனித நேயம் 
உன்னுடன் இருந்தால்...!


சிமென்ட் போடவா...சிரிக்க மட்டும்,


வாடிக்கையாளர்:

ஸ்ட்ராங்க காபி போடுங்க 

டீ மாஸ்டர்:

அப்ப சிமென்ட் போடவா...

வாடிக்கையாளர்:
அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.
======================================

சச்சின் 

வாங்க வடிவேலு  டீ ஒன்னு போடவா ?

வடிவேலு 

இது கிரிகெட் இல்லே...
டீ,போடபுடாது என சொல்லக்கூடாது 
டீ கொடுக்கனும் சொல்லணும் ம்ம்ம்...


சச்சின் 
 மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்

உன் நிலை மாற்று...






வெண் மேகம்
மலைகளுக்குள்
எழுதிய கவிதை
நீராய் நிறமாறி
புது உறவாகி
நீர் வீழ்ச்சியானது...


வீழ்ச்சி தந்த வெற்றி 
நதியாக உருமாறி
கரைக் கண்டு 
தாகம் தீர்த்து 
வளம் தந்தது
பல கேள்விகளுக்கு 
விடை சொன்னது...


விடை அறிந்தும்
தெரிந்தும் 
புரிந்தும் 
மனிதா 
நீரின் மகத்துவம் அறியவில்லை
சேமிக்க மனம்  நாடவில்லை...
மனிதன் நடப்பில் பதியவில்லை...


தண்ணீருக்கும்
மொழியை அழைத்து 
சண்டை 
பிரிவினை....


இருக்கும் மரத்தை அழித்து,
உலகத்தை மாசுப்படுத்தும் நிலை 


ஒவ்வொரு துளியும் 
தாகம் தீர்க்கும்...
எதிர்க்காலத்தை தீர்மானிக்கும்


இந்த அவலநிலை போக்க
மனிதா உன் நிலை மாற்று...!

தண்ணீரை சேமிக்கும்
நிலையை உண்டாக்கி 
புதிய உலகத்தை உருவாக்கு...!

14 ஏப்., 2012

பயணிக்க ...நகைசுவை கவிதைகள்.,.


பணமில்லாததால்
பயணிக்க 
கேட் அவுட் என்றார்கள் 
இருந்தாலும்...
வித் அவுட்டில்
எனது பயணம் 
நாட் அவுட்...
============================

வடிவேலு பார்த்திபன் கலாட்டா...


வடிவேலு:
ஒரு காபி எவ்வளவு ?

பார்த்திபன்;
ஐம்பது காசு...

வடிவேலு:
அப்ப நாலு காபி சூடா கொடு ?

பார்த்திபன்;
முண்டம் இது XEROX காப்பி கடைடா?

வடிவேலு:

இது XEROX காப்பியா ?நான் காபி என 
நினைச்சேன்...



இன்றைய மனிதன்...



விருப்பமில்லா மனங்களில் 
இறுக்கம் கொண்ட நேரத்தில் 
அழிக்கமுடியா  நிலையில் 
இலக்கணம் தவறிய வரியாய்
நீரில் எழுதிய  கவிதை 
இன்றைய மனிதன்...!

13 ஏப்., 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி...ஒருபார்வை



ஒரு கல் ஒரு கண்ணாடி...
========================
பலராலும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட படம்...
வெற்றியை விட தோற்க வேண்டும் என்று கொஞ்சம் 
எதிர்பார்ப்பு தான் அதிகம் இருந்தது  இதுக்கு...
இப்படி இருந்தாலும் இன்றைய நிலையில் 
கலகலப்பு கைகொடுக்க இன்று வெற்றியை 
நோக்கிய பயணம் இந்த படம் திரும்பி இருக்கிறது...

அரசியல் குடும்பத்தின் வாரிசுயின் படத்தில் 
அரசியல் வாடை இல்லாத படமாய் அனைவரும் 
ரசிக்கும் வண்ணமாய் இருப்பது பாராட்ட தக்க ஒன்று...

ஏற்கனவே தயாரித்த அனுபவம் கைக்கொடுக்க 
இங்கு சந்தானம் சிரிப்புக்கு திரையரங்கம் கலக்க 
ம்ம்ம் உதயநிதி திரைப்பயணம் இனி தொடரும் 
என்பதில் ஐயமில்லை....

படம் கலகலப்புக்கு பஞ்சமில்லை...
இன்றைய சூழ்நிலைக்கு இந்தப் படம் உங்களை சந்தோசப்
படுத்தும் என்பதில் ஐயமில்லை....

புதிய விளக்கு ஏற்று !



விடலைகள் சொல்லும்
விடைகள்...
புதிய வழிகள்
ஒளிக்குள் இருப்பதை!

அகலும் நமது இருளும்,
அறியாமை போக்கும் 
அன்புகொண்டு வாழ்ந்தால்.

மழலைகள் போல் 
மனதை மாற்று
ஒன்றாய் இணைந்து 
இணைத்து 
மனிதனாய் வாழ 
புதிய விளக்கு ஏற்று !

பூனை படை ...சிரிக்க மட்டும்





அந்த ஆசிரியை கண்டிப்பானவரா இருக்கலாம் 
அதுக்காக அவர் பூனை படை கேட்பது 
கொஞ்சம் ஓவரா இருக்கு...
==========================================
வரவர தலைவருக்கு என்ன பேசுகிறேன் என்றே 
புரிய மாட்டுது?


அப்படி என்னதான் பேசுகிறார் ?


தன்னுடைய பிறந்த நாளை 
ஆங்கில புத்தாண்டாய் கொண்டானும் 
என்று அமெரிக்காவுக்கு வேண்டுகோள் 
விடுகிறார்...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....


சித்திரை திங்கள்
சிக்கலாகிபோனது 
வாழ்த்துச்  சொல்ல 
தடுமாறித்தான் போனது 

தையா?
சித்திரையா?
கேள்விகளோடு 
தமிழ்ப் புத்தாண்டு 
பட்டிமன்றம்...
ஒருபக்கம்...

தமிழுக்கு தொடக்கம் 
"அ "என்றால்...
வருடத்தின் தொடக்கம் 
சித்திரை என்ற முழக்கம் 

முழக்கத்தின் முகவரியை 
வாழ்த்துக்கள் தொடரட்டுமே...

தமிழர்களின் 
வேதனைகள் அழிந்து 
வரும் வருடம் 
வசந்தம் வீசட்டுமே...

 உறவுகளுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

12 ஏப்., 2012

இன்னும்...



வாய்மையை
பொய்கள் ஒன்று கூடி 
நல்லடக்கம் செய்தன.


வாய்மை மீண்டும் 
சுகபிரசவமானது  
இந்த உலகத்தில்.


ஜாதியின் பெயரால் 
மதத்தின் பெயரால் 
மறைத்தாலும்...

எரித்தாலும் 
எதிர்த்தாலும்...



ஏதோ ஒரு உயிர்
வாய்மையை 
வாழவைத்துக் கொண்டு 
தான் இருக்கு 
இந்த உலகத்தில் 
இன்னும்...

சந்தேகம் இருந்தால்...சிரிக்க மட்டும்,





தலைவர் சொல்லுறதை வரவர பொறுக்க முடியவில்லை...

என்னால் குனிந்து பொறுக்க முடியாது என்று சொல்லுறதுதானே...

என்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமை ஐயோ! தலைவர் பேசுகிற பேச்சை சொன்னேன்...
============================================================
தலைவர்:

நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..?

தொண்டன்:

புதுசா சேர்த்த மகளிர் அணி தலைவி செல் நம்பர் வேண்டும் தலைவா..!

தலைவர்:
 மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
===============================================================

காதலர்கள் நடக்கையில்,

 


கைகோர்த்து காதலர்கள் 
நடக்கையில் 


காதலர்களின் பிம்பத்தை 
கார்மேகம் சொல்லும்.

இரு இதயங்களுக்கு 
குடைப் பிடிக்கும்.
காதலர்கள் கடல்கரை 
மணலில்  எழுதும் கவிதைக்கு
அலைகளோடு சேர்ந்து
கடல் காற்றும்
ஜதி சேர்க்கும்.

கடலும் ,காதலும் 
இயற்க்கைக்கு மகுடமாய் 
பிரதிபலிக்கும்...

10 ஏப்., 2012

நான் எப்ப போவேன்...சிரிக்க மட்டும்,


ஆசிரியர்:
நான் எப்ப போவேன் ,எப்ப வருவேன் என்று அதுக்கே  தெரியாது...
இது யாரு ?

மாணவன்.
நம்ம மின்சாரம் தான்...

======================================
மின்சாரம் போனதால் சம்சாரத்தை தொட்டது தப்பாச்சி?

என்ன பிரச்சனை 

புதுசா குழந்தை பிறந்து போச்சு 

  மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
====================================

உன் கையை மூலதனமாக்கு...




தேவதையே!
உன் தேவைக்கு 
கை நீட்டும் நிலை 
மறந்தால் உணர்வாய்
உழைத்தால் உயர்வாய்!



தானம் வாங்குவதை 
அவமனாமாய் நினைத்து 
கையேந்தும் நிலை விட்டு 
உன் கையை மூலதனமாக்கு...


உன் விரல்களும் வழிச் சொல்லும்,
புது விடிகள் பிறக்கும்.
தடைகள் வரும் கவலை விடு,
விடைகள் அறிய விண்ணப்பமிடு!
நீயே உனக்கு ஏணி,
அறிந்தால் இல்லை வேலி!

9 ஏப்., 2012

சைட் அடிக்க...சிரிக்க மட்டும்,




ஏன் அங்கேயே நின்று விட்டீங்க ?


நாய்கள் ஜாக்கிரதை என்று இருக்கே...அதான்...


நாயை விற்றுவிட்டேன் பயப்படாமல் வாங்க...


அப்புறம் எதுக்கு போர்டு...?


தெரு நாய்கள் வராமல் இருக்கத்தான்...


அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை
================================================


என்ன உங்க வீட்டு பக்கத்தில் ஒரே நாயா இருக்கு ?


எங்க வீட்டு நாயை சைட் அடிக்க வந்த நாய்கள் 
இதுக எல்லாம்...


==============================================

ஊழல் ஊமையானது




உள்ளதை உலகுக்கு 
உணர்த்த உறுதி கொண்டோர் 
ஊழலில் விழுந்துவிட 


ஊழல் இங்கு 
ஊன்றுகோலாய் 
மாறியது...


ஊழலை கண்பிடிக்க 
வந்தவர்களும் 
ஊழலில் ஊறிவிட...


ஊழல் செய்தவர்களும்
ஊழல், ஊழல் என்று 
போர்க்கொடி தூக்க....


பழைய ஊழல் ஊமையானது
புது ஊழலோ 
பத்திரிக்கைக்கு 
உறவானது 
தலைப்பு செய்தியானது...


தட்டிக் கேட்க முடியாமல்,
தடுக்க வழியில்லாமல் 
நம் மனமும்,
ஓட்டுபோட்ட 
நம் விரல்களும் ஊனமானது...

8 ஏப்., 2012

தற்கொலைதான் விடையா ?


வாழ்க்கையை தொலைத்து 
வாழவே பிடிக்காமல் 
தன்னையே 
கொலை கொண்டவர்கள்,
கொள்பவர்கள் 
நம்மில் சிலர்.


இருப்பதை அறியாமல் 
இறைவன் தந்ததை உணராமல்,
இல்லை என்ற உணர்வால்
இறந்த கோழைகள்
இறந்தால்  என்ன


எலும்புகள் கூட 
உன் நிலை சொல்லும்,
வருங்காலம் 
உன்னை பார்த்து 
நகைக்கும், 


சதைப் போனபின் 
எலும்பானாய்...
வெறும் கூடனாய்...


பின் உன்னை கூட்டி 
வைத்துப் பார்த்தாலும்
பயம் தந்தாய்
பயனற்று போனாய் 



தற்கொலைதான் 
உனக்கு விடையா ?

அறுத்து அறுத்து 
பார்த்து தற்கொலைதான்
என்று சொல்வது தான் 
உன் நிலையா ?

குசும்பு பிடித்தவர்கள்...சிரிக்க மட்டும்,




தலைவர் தூங்கும் போது ஏன்டா தலையில் டிக் ஷனரி ' வச்சுட்டுத் தூங்கிறார் ?

அவர் செய்கிற செயல் ஒவ்வொன்னுக்கும் அர்த்தம் இருக்கும் என்று காட்டத்தான்...
==========================================
இந்த  ஊரு ஆட்கள் ரொம்ப குசும்பு பிடித்தவர்கள்...


அப்படியா அப்படி என்ன சொன்னார்கள் ?


தலைவர் நிச்சல் குளம் கட்ட நன்கொடை கேட்டால் 
நீங்கள் கட்டிய பின் பத்துக் குடம் தண்ணி தரோம் என்று
சொல்லுறாங்க...
=========================================================

7 ஏப்., 2012

கூட்டு வாழ்வினை...




வருங்காலம் கவலையில்லை 
வருமானம் தேடவில்லை 


போதவில்லை 
என்ற குறையில்லை


வாழும் முறை 
வாழ்க்கை முறை



கூட்டு வாழ்வினை 
கூடிய நிலையில் 



வாழ கற்று தருகிறது 
இந்த  பறவை.

ஸாரிடா...சிரிக்க மட்டும்,




காதலன்:

நான் உன்னை காதலிக்கிறேன் அன்பே...

காதலி:

உன்னை நான் வெறுக்கிறேன்...


காதலன்:


உண்மையாவா? நல்லா யோசித்து சொல்லு...

காதலி:


ஆமா நான் உன்னை வெறுக்கிறேன்...

காதலன்:

அப்ப எனக்கு மட்டும் தனியா பில் போடுங்க...


காதலி:


ஸாரிடா நான் உன்னை காதலிக்கறேன்...
===============================================

கண்ணீர்...எனது 600 வது பதிவு




இறப்புக்கும் புதிய பிறப்புக்கும்,
சோகத்தோடும் ஆனத்தோடும்,
பதிவு செய்தன 
கண்ணீர்த் துளிகள் !
------------------------------------------------------------

உணர்வுகளை உண்மையாக்கும் 
உன்னத நண்பன்
கண்ணீராய் 
வருவான் 

அமைதியை  தருவான்...


=================================


சோகங்களை இணைத்து 
இரு கண்கள்  நடத்தும் 
போராட்டம் .
==================================

சின்னச் சின்ன பூக்கள் 
சிரித்து அழுது இறந்தன
கண்ணீர்த்துளிகளாய்!
--------------------------------------------------------------

காதலைப் பற்றி 
கண்கள் எழுதிய 
மறைக்க முடியா கவிதை....











6 ஏப்., 2012

என்ன பலன்...சிரிக்க மட்டும்,


வாடிக்கையாளர்:

சர்வர் சாப்பிட்டதுக்கு பில் 
தராமல் அங்கு என்ன தேதியில் 
பார்வை 

சர்வர்:

நீங்கள் குடித்த சாம்பாரியில் பல்லி 
விழுந்துவிட்டது,அதுக்கு என்ன பலன் 
என்று பார்க்கிறேன் சார்...

அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.
=====================================
என்னடி எதிர் வீட்டு மாமியாருடன்     உன் 
மருமகள் கூட்டணி வைத்து இருக்கிறாள்?

என் எதிரிக்கு அவள்  தோழியாம் அதுக்காக...
======================================

வேறுபாடுகள் ...




பகுத்தறிவை கொண்டு 
இல்லையென்று 
வகுத்து சொன்னவர்கள்...


தன் தலைவர்களை...
இருக்கும் போதும் 
இறந்த பின்னும்  வைத்தார்கள் 
நடு வீதியில் சிலையாய்...

தீயோடு கலந்த படி...




தீயின் ஆதிக்கம் 
நம் வாழ்க்கையோடு
உள்ளதடி 
அதை சொல்லும் கவிதையடி.


தீபமாய் உருமாறி 
ஒளி தந்த படி

உணவுகளுடன் உறவாடி
பின் பசியாற்றி 
குளிருக்கு சுகமாய் 
இடமாறி...
தீக்குள் மறைந்த 
நல்ல குணமடி



சிலர் வளர்ச்சியை
கண்டு தீயே இல்லாமல் 
புகைமடி ...


மரமாய் மனிதன் 
அரசியலுக்காக எரியுமடி
இந்த தீ மாறுமடி...


இறப்புக்கு பின் உடலுக்கு 
சொந்தமடி.
இந்த தீயோடு கலந்த படி 
நம் வாழ்க்கை நகருமடி!

5 ஏப்., 2012

ஓய்வு வேண்டி...சிரிக்க மட்டும்,




மனைவிக்கும் மகளுக்கும் சொல்லுவது என்ன வென்றால் 
24 மணி நேரம் என்னை வீட்டு வேலை வாங்குவதால் 
ஓய்வு வேண்டி வேலை நிறுத்தம்...


என்ன இப்படிதிடிர் என்று   வேலை நிறுத்தம் 
செய்தால் நாங்கள் எல்லாம் 
எப்படி லேடிஸ் கிளப்புக்கு போறது ...


=====================================
வேற ஒண்ணுமில்லே 
தலைவரை யாரும் கூட்டத்துக்கு கூப்பிடமால் 
போனதால் இப்படி பேச ஆரம்பித்துவிட்டார்...

கட்சியை தானம் செய்கிறேன் சிரிக்க மட்டும்,



அவர் போலி டாக்டர் என்று எப்படி சொல்லுறே?

பின்னே என்னேடா,சரியா கண் தெரியமாட்டுது என்று சொன்னால் ,
பவர் கட் அல்லவா அப்படித்தானிருக்கும் சொல்லுறாரே ...
என்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமை
===========================================


தலைவர் அவர் பிறந்த நாளுக்கு உணர்ச்சி வசப்பட்டு 
கண் தானம் செய்கிறேன் என்று சொல்லுவதற்கு 
கட்சியை தானம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்..


 அநியாயம்அநியாயம்அநியாயம்
===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக