இரவெல்லாம் விழித்திருந்து
இமை மூடா தவமிருந்து
ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய்
உற்றாரின் நலம் பகிர்ந்து
விளக்கு தோரணம்
விடியும்வரை எரிந்தும்
நலுங்கு நாட்டியமும்-கச்சேரி
நாளெல்லாம் பெரு விருந்தாய்
விடியும்முன் எழுந்து
விமரிசையான சடங்குகளுடன்
காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி
மாலை மாற்றி மகிழ்ந்தேன்
தாலிகட்டி தவம் கலைத்தேன்
தைரியமாய் அருகில் அமர்ந்தேன்
நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான
நலபாகத்துடன் விருந்து படைத்து
சேலைமாற்றி சிவந்த முகத்துடன்
சொம்பில் பாலுடன் நடந்தேன்
மாலை அணிந்து மங்கலமாய்-நாணமாய்
ஆளை பார்த்தேன் ஆர்வமாய்
தோளை பிடித்து தொட்டதும்
துவண்டு விழுந்தேன் சரிந்தேன்
துணிகளை இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும்
தொடங்கி மீண்டும் மகிழ்ந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக