Listen 3D Quality

சனி, 17 நவம்பர், 2012

மனிதர்கள் பல ரகம் (2)


மனிதர்கள் பல ரகம் (2)


கொடுக்கக் கொடுக்க
கொடுத்துக் கொண்டே இருக்கச் சொல்லும் 
கடுகளவும் சுயநலம் அற்ற தன்மை உடையவன் 
மனிதருள் மாணிக்கம் அவனே வள்ளல் !.......

கற்றது கை மண் அளவு 
கல்லாதது உலகளவு என 
இத் தத்துவம் அறிந்து 
தளம்பாமல் இருப்பவனே சான்றோன்!!.....

வென்றால் பெருமை 
தோற்றால் வேதனை 
அன்றும் இன்றும் என்றுமே 
தட்டிக்கொடுத்து  வாழ வைப்பவன் நண்பன்!...

அற்ப சுகத்தைத் துறந்து 
பிறர் அகம் மகிழ வாழ்ந்து 
நற்பணியே கெதியென 
நானிலம் போற்ற வாழ்பவன் ஞானி !...

அஞ்சாது மனம் கோணாது 
கண்மூடி திறக்கும் முன்னே 
தன்னைத் தந்தும்  பிற உயிர் 
காகப் பிறந்தவ(ள் )ன் தியாகி !!!!.......

வெள்ளி, 2 நவம்பர், 2012

“பரு”வ வயதில்


Wednesday, June 22, 2011

“பரு”வ வயதில்



என் பெண்ணிலவே..
உன் தங்க நிற
முகமெனும் மலரில்
(ரு)னித்துளிகள்!

ஹைக்கூ



கூட்டாக சேர்ந்து
புது வீடு கட்டினார்கள்
யாரும்
கண்டுகொள்ளவில்லை
கரையான்கள்!

மாற‌ வேண்டும்…


நாளேடுகளில் இராசி பலன்
பார்த்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில்
ஊழல் அறவே ஒழிந்திட வேண்டும்.

படித்தவர்களே அரசியலுக்கு
வர வேண்டும்.

மொல்ல‌மாரிக‌ளையெல்லாம் சாமியாராக்கி
அவ‌ன் பாத‌ம் தொட்டு வ‌ண‌ங்குவ‌தை நிறுத்த‌ வேண்டும்.

பண்பாட்டினை சிதைக்கும் படங்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

தொல்லைதரும் தொலைக்காட்சி தொடர்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

இளைர்கள், நடிகர்களை தலையில்
தூக்கிவைத்தாடுவதை நிறுத்த வேண்டும்.

கோடிகோடியாய் கொல்லையடிக்கும் அரசியல்வாதிக்கு
கொடிபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்கள் இரவு சமாச்சாரத்திற்கு மட்டும்தான்
எனும் ஆணாதிக்கம் ஓழிய வேண்டும்.

த‌மிழ் மொழியினை அழிந்திடாம‌ல்
காத்திட‌ வேண்டும்.

த‌மிழ‌னுக்கென்றொரு நாடு புதிதாய்
உதித்திட‌ வேண்டும்.

முரண்பாடு



என்னவளே...
நீ வரும் பாதையில்
மலர்களை தூவினேன்!
ஆனால்...?
நீயோ... என் மீது
மலர்களை தூவினாய்..
ஆம்,
என் கல்லறையில்!

மறந்து போன மனித நேயம்


கிராமத்தில்...
கிழக்கு தெருவில் ஒருவன்
மரமேறி தவறி கீழே விழுந்துவிட்டால்
அடுத்த தெருவிலிருந்து
அலரியடித்து ஓடிவந்து மருத்தவமனைக்கு
அவனை அழைத்து
சென்றதைக் கண்டு விய‌ந்ததில்லை.
விச‌க் காய்ச்ச‌லில்
ப‌டுத்த‌வ‌னை அண்டை வீட்டாரும்,
முக‌ம் தெரியாத‌ ம‌னித‌ர்க‌ளும்
ந‌ல‌ம் விசாரித்து
சென்ற‌தைக் க‌ண்டு விய‌ந்ததில்லை!

ந‌க‌ர‌த்தில்...
இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில்
சென்ற‌வ‌னை பேருந்து இடித்து செல்ல‌
கீழே விழுந்த‌வ‌னுக்கு
குருதி ஆறாய் பெருக்கெடுத்தோடி
உயிர் ஊச‌லாட‌ கிட‌ப்ப‌வ‌னை
அருகில் வந்து கூட‌ பார்க்க‌ ஆளில்லை
என்ப‌தை க‌ண்டு விய‌ந்தேன்
அவ‌ச‌ர உல‌க‌த்திலிருக்கும்
ந‌க‌ர‌ ம‌க்க‌ளுக்கு
ம‌னித‌நேய‌ம் மறந்து போனதென்று..!

தமிழ் மாந்தரெல்லாம்...

பொதிகையில் பிறந்தவளே
மதுரையில் வளர்ந்தவளே
ஐம்பெருங்காப்பியங்கள் படைத்தவளே
திருவாசகமும் இராமாயணமும் கண்டவளே
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
கலிங்கத்துப்பரணிக்கு சொந்தமானவளே
இயல் இசை நாடக முத்தமிழே
திராவிட மொழிகளின் தாயே
தாய்மொழியாம் தமிழ் மொழியே
தமிழனின் அடையாளமே
உன்னை...
திரைப்பட உரையாடல்
தெருக்கடைகளின் பெயர்கள்
கல்விக்கூடங்களில்
நாகரிக மோகத்தால்
ஆங்கில மொழியை
தமிழ் மொழியுடன் கலந்து பேசி
தமிழ் மொழியை மெல்ல சாகாடிக்குறோமே...
நாமெல்லாம் தமிழர்தானா...?

செம்மொழிக்கேன் இந்நிலை?

தமிழர்களே...            
நீங்கள் மும்முறை தமிழ்
எனும் வார்த்தையை உச்சரித்து பாருங்கள்,
உங்கள் உமிழ் நீரும்
ஊற்றெடுக்க தொடங்கும்!
ஆனால்...?
இத்தகைய தாய் (தமிழ்) மொழியை
தூய தமிழில்
நாம் பேச தயங்குவதேன்?
நாகரீகமென்று நினைத்து
ஆங்கிலம் கலந்த தமிழை பேசி
தமிழை (தாயை) கொல்கிறோம்!
எத்தாயாவ‌து த‌ன் குழ‌ந்தைக்கு
விசம் கலந்த‌ பாலினை கொடுப்பாளா?
ஆம், இங்கே கொடுக்கிறாள்
தாய் முத‌லில் குழ‌ந்தைக்கு
சொல்லித்த‌ர‌ வேண்டிய‌ வார்த்தை
அம்மா, அப்பாயென்று
ஆனால்...இங்கே சொல்லித‌ருவ‌தோ
ம‌ம்மி, டாடியென்று
ஆங்கில‌மெனும் விச‌ப் பாலினை ஊட்டி
ம‌கிழ்ச்சியும் அடைகிறார்கள்
இன்றைய‌ பெற்றோர்க‌ள்.
அய‌ல் மொழியை க‌ற்ப‌து த‌வ‌றில்லை
ஆனால்..
அன்னை மொழியிலேயே பேசிட‌ வேண்டும்.
ப‌ழ‌மையான‌, தொன்மையான‌
செம்மொழியே...
உந்த‌ன் ம‌க‌த்துவ‌த்தினை
என்ற‌றிவார்க‌ள்
இந்த த‌மிழ‌ர்க‌ள்?
எப்போத‌ழியும் ஆங்கில‌ மோக‌ம்?
எப்போத‌ழைக்கும் த‌மிழ் தாக‌ம்?       

செம்மொழிச் செந்த‌மிழ்


உலக மொழிகள் மூவாயிரம்
அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே!

குமரிக்கண்டத்தில் பிறந்த‌
செம்மொழிச் செந்தமிழே!

தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள்
என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே!

உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று
பதினாறு பண்புகளை கொண்டிருக்கும்
செம்மொழிச் செந்தமிழே!

திராவிட மொழிகட்கெல்லாம்
தாய்மொழியாம் தமிழ்மொழியே!

இயல், இசை, நாடகத் தமிழெனும்
இலக்கிய முத்தமிழே!

ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து
சீரழியாது வந்த பைந்தமிழே!

உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம்
அழிந்துவரும் நிலையில்
நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே!

முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட‌
தாய் மொழியாம் தமிழ் மொழியே!

உந்தன் மகத்துவத்தினால் உலக மக்களை வியக்க வைத்த‌
செம்மொழிச் செந்த‌மிழே! நீ வாழி!

ச‌ரித்திர‌ம் ப‌டைப்போமா?


கடலில் அலைகள்
அமைதி கன்டதாய்
சரித்திரம் இல்லை.
தென்றலாய் வீசும்
காற்று நின்றதாய்
சரித்திரம் இல்லை.
தேனுக்காக மலர்களை
தேடிச்சென்ற தேனீக்கள் தோற்றதாய்
சரித்திரம் இல்லை.
ஆனால்...
இளைஞர்களே நாம் மட்டும்
உறக்கத்தில் உள்ளோம்,
நாம் விழித்தெழுவது எப்போது?
2020-ல் இந்தியா
அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைந்து
வல்லரசு நாடாகுமென்று கலாம் சொல்லியது
இன்றைய இளைஞர்களின்
மீது வைத்திருந்த நம்பிக்கையில்!
கலாமின் க‌ன‌வை
நாம்நினைவாக்குவ‌து எப்போது?
இளைஞர்களே...
விழித்தெழுங்க‌ள்
2020-‍ம் ஆண்டினுள்
நாம் புது ச‌ரித்திர‌ம் ப‌டைத்து
க‌லாம் க‌ன‌வை நிறைவேற்றுவோம்
இளைஞர்களே...
ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌ வாருங்க‌ள்...

மரணமே என்னை விட்டுவிடு

என் தூக்கத்தை துரத்தியவளே...
உன்னை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடு 
உன்னை நேசிக்க விடு 
உன்னோடு வெளியே போகும் வாய்ப்பு கொடு 
உன்னோடு பேச விடு 
நாம் சிரித்து மகிழ்ந்திட சிறிது நேரம் கொடு 
கைவிரல்களால் உன்னை வருட ஆனையிடு 
க‌ண்ணத்தில் முத்த‌மிட‌ அனும‌தி கொடு 
இத‌ழோடு இத‌ழ் இருக்க‌ விடு 
உன் அழ‌கை ஆள‌ விடு 
உன்னில் தொலைந்த‌ என்னை தேட‌ விடு 
நீ என்னை விட்டு பிரிந்த‌ தின‌த்தில் தூக்கிலிடு 
அவ‌ள் மடியின்மீது என்னை மாய்த்து விடு 
அதுவ‌ரை...
மரணமே என்னை விட்டுவிடு!

பேரழகு தேவதையே...


உந்தன் அழகினை பார்க்கும்
அழகிய மலர்களும்  வெட்கி தலைகுனியுமடி

உன் அழகை வர்ணித்து எழுத
கவிஞர்களின் கூட்டம் கூடுமடி

உன் அழகினை காணும் புயல் காற்றும்
உன் மீது தென்றலாய் காற்று வீசி வரவேற்குமடி

பேரழகியே... தயவு செய்து
தலை குனிந்து பூமியை பார்த்துவிடாதே
ஏனெனில்,
உன் அழகினை பார்த்து வியக்கும்
பூமியும் சுற்ற மறுக்குமடி

உன் குர‌லை கேட்டால் குயிலும்
உன்னிட‌ம் ம‌ன்னிப்புகோரும‌டி

உன் மெல்லிய‌ உடை, அழ‌கிய‌ நடை
ம‌ல‌ர்க‌ள் சூழ்ந்துள்ள ஜடை
பார்ப்ப‌த‌ர்க்கு கிள‌ம்புமே ஆண்வ‌ர்க்க‌த்தின் ப‌டை
அத‌ற்கு நீ த‌டை போடாத‌டி

உன் கூந்த‌ல் இருளையும்
வெள்ளும் க‌ருமையடி

உன் ப‌ல் நில‌வையும்
வெள்ளும் வெண்மைய‌டி

தேவதையே... உன்னை முழுமையாய்
பார்த்து ரசிப்பதர்க்கே ஓராண்டு வேண்டுமடி


உன் சிரிப்பொன்றே
நான் பல்லாண்டு வாழ‌ போதும‌டி.

உந்த‌ன் மெளன‌த்திலும்
ஆயிர‌ம் வார்த்தைக‌ள் உள்ள‌த‌டி

பேர‌ழகு ப‌துமையே...
நீ என‌க்கு மட்டும் சொந்த‌ம‌டி

பேர‌ழ‌கு தேவ‌தையே...
உன்னை காத‌லித்த‌
என் க‌தி என்ன‌டி?

நிறைவேறு(ம்)மா ஆசைகள்...


அவளின் பாதங்கள் மண்ணில்
படும்போது அந்த மண்ணாக
நானிருக்க ஆசை...

அவள் கால்களில்
ஒலியெழுப்பும் கொலுசுகளாக‌
நானிருக்க ஆசை...

அவளின் மேனியை
மறைக்கும் ஆடைகளாக‌
நானிருக்க ஆசை...

அவ‌ள் சுவாசிக்கும்
காற்றாக‌
நானிருக்க ஆசை...

அவ‌ள் கூந்த‌லில் வைக்கும்
ம‌ல‌ர்க‌ளாக‌
நானிருக்க ஆசை...

அவளின்‌ உற‌க்க‌த்தில் வ‌ரும்
சொப்ப‌ன‌ங்க‌ளாக‌
நானிருக்க ஆசை...

இத்த‌னை ஆசைக‌ளும்
என‌க்கு நிறைவேறு(ம்)மா...?

காதலனே எனக்காக...


தனித்திருக்கும்
கன்னிமலர் மீது
பனித்துளியாய் படர்ந்து விடு!

அணிகலன்கள் அணிந்திருக்கும்
அல்லி மலரை
முகர்ந்திடு!

காதல் புயல்
மையம் கொன்டிருக்கும்
இந்த மலரினை
உன் இதயத்தில் குடியேர்த்திவிடு!

மலரினும் மெல்லிய‌
இந்த பெண் மலரினை
கசங்கிடாமல் பார்த்து விடு!

பூத்திருக்கும் புது மலரை
வீட்டில் விற்பத‌ற்கு முன்
உன்னுடைய‌தாய் ஆக்கிவிடு!

கெஞ்சிக் கேட்கிறேன்
இந்த பூவிதழில்
தினமும் நூறு முத்தங்கள்
கொடுத்து கொஞ்சிவிடு!

இவைகளெல்லாம்
செய்யும் முன்
நீ என்னை திருமணம் செய்துவிடு!

காதலெனும் தேர்வெழுதி....

அன்பே...
உன்னுடன்
எனக்கொரு பரிட்சை
உன் அழகும், அறிவும்
என‌க்கு போட்டியாகுமோ?
காதலென்று வருகையில்
என்னை கவிழ்த்துவிடுமோ?

இத்தனை நாட்கள்
நட்புடன் உன்னோடு பழகியும்
என் மனம்
உன்னை தோழியாய்
ஏற்க மறுக்கிறது.

உன்னுடன் பேசுகையில்
நான் சிரித்தாலும்
எனக்குள் ஒரு
காதல் தேர்வெழுதுகிறேன்
நான் வெற்றி பெறுவதும்,
தோல்வியடைவதும்
உன் கையில்தான் உள்ளது.

ஏனெனில்
என்னுடைய விடைத்தாளை
திருத்தி மதிப்பெண் போடும்
பெண் நீதானே!

என்னவளுக்காக இன்றிரவு மட்டும்…


பௌர்ணமி நிலவே...
இன்றிரவு மட்டும் உன் முக‌த்தை
போர்வையால் மூடிக்கொன்டு
இருட்டை கொடு.

ப‌ற‌வைக‌ளே...
இன்றிர‌வு மட்டும் கீச்சுக்குறளிடாதீர்க‌ள்
குயில்க‌ளை அழைத்துவ‌ந்து
குயிலிசை பாட‌ வையுங்க‌ள்.

செல்லப் பிராணிகளே...
இன்றிர‌வு மட்டும்
யாரும் என்னவளை
எழுப்பாமல் பார்த்துக்கொல்லுங்கள்.

காற்றே...
இன்றிர‌வு மட்டும் புய‌ல் காற்றாய் வீசாதே
தென்றலாய் வீசி
என்ன‌வ‌ள் மேனியை இத‌மாய் வ‌ருடிவிடு
இன்றாவ‌து என்ன‌வள் இத‌மாய் உற‌ங்க‌ட்டும்

என்னவளின் பிறந்த நாள்



அக்டோபர் மாதத்தில்                   

மலர்ந்த அழகு மலரே...


மலர்ந்த
 மல்லியே
 
நீ எப்போதுமிருக்க வேண்டும்
வாடா மல்லியே...

உனது பிறந்த நாளை
நம் தேசத்தின்  திருவிழா நாளாக
கொண்டாட வேண்டுமடி...

ஒட்டுமொத்த உலக மலர்களின்
உருவமே...

உனது பிறந்த நாளை வரவேற்க
உலக மலர்களனைத்தும்
மலர காத்திருக்க வேண்டுமடி...

தங்க நிறத்தவளே
தங்கிட வேண்டுமடி மகிழ்ச்சிகள் உன்னோடு
இப்பிறந்த நாள் முதல்!

உன்னை காதலித்ததால்...


அயல் மொழியையும்
எளிதில் கற்றுக்கொன்டேன்.

கலாச்சார உடையிலிருந்து
நாகரீக உடைக்கு மாறினேன்.

நம் காதலை கவிதை எழுதி
கவிஞன் ஆனேன்.

அலைபேசியை
மணிக்கணக்கில் உபயோகித்தேன்.

உன்னைப்பற்றீயே எப்போதும் மனதில்
நினைத்துக் கொண்டிருந்தேன்.

உன்னோடு சிரித்து பேசியே
என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.

உன்னுடைய வேலையையும்
நானே பார்த்துக்கொண்டேன்.

நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.

உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன்.

கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன்.

உன் ஆடையையும்
அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன்.

நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன்.

இவையனைத்தும்
உன்னை
காதலிக்க தொடங்டகியதிலிருந்தே...

உன்னை காதலிக்க தொடங்கியதிலிருந்து...


அன்பே...
உந்தன் பெயரினை
எந்தன் பேனா முனையும்
அழகாய் எழுதுகிறது!

வ‌குப்ப‌றையில்
என‌க்கு உற‌க்க‌ம் வ‌ரும்போது
உன்னை நினைத்தால்
என‌து உற‌க்க‌மும் க‌லைந்துவிடுகிற‌து!

உந்த‌ன் முக‌த்தினை பார்ப்ப‌தற்க்கு
ப‌ல‌முறை
இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளில் செல்கிறேன்
உன‌து வீட்டு முன்பு!

வ‌குப்ப‌றைக்குள் நுழையும்முன்
உன் முக‌த்தினை பார்த்து சென்றால்
அந்நாள் முழுவ‌தும்
ம‌கிழ்ச்சியில் திளைக்கிறேன்!

வ‌ண்டுகள் மல‌ர்க‌ளை சுற்றி சுற்றி வ‌ந்து
தொடுவ‌தை பார்த்தால்
நானும் உன்னை சுற்றி சுற்றி வ‌ந்து
தொடுவ‌தாய் உண‌ர்கிறேன்!

குள‌த்தில்லுள்ள
செந்தாம‌ரை ம‌ல‌ர்க‌ளின் இத‌ழ்கள்
உன் செவ்வித‌ழ் உத‌டுக‌ளை
நினைவுப‌டுத்துகிற‌து!

த‌லைசாய்ந்து நிற்கும் நெற்க‌திர்க‌ள்
நீ, என்னுட‌ன் முத‌ன் முத‌லில்
பேசிய‌போதிருந்த‌
உன் முக‌பாவ‌னையை நினைவூட்டுகிற‌து!

எனக்குள்
ஏன் இந்த‌ மாற்ற‌ங்க‌ள்?
இவைய‌னைத்தும்
உன்னை காதலிக்க தொடங்கியதிலிருந்து...

Tuesday, June 21, 2011

அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து…



முன்பைவிட என்னை அலங்கரித்துக்கொள்வதில்
அதிக நேரம் செலவாகிறது.

புத்தாடைகள் வாங்கும்போது
இது அவனுக்கு பிடிக்குமாயென மனம் நினைக்கிறது.

வகுப்ப‌றையில் ஆசிரியர் பாட‌ம்
ந‌ட‌த்தும்போது காதில் விழுவ‌து
அவ‌ன் என்னோடு  பேசிய‌து ம‌ட்டுமே.

வாச‌னை திர‌விய‌ங்க‌ள் வாங்குவ‌திலேயே
என் காசு க‌ரைகிறது.

அவ‌னை நேரில் ச‌ந்தித்து பேசிய‌து ப‌ர்த்தாம‌ல்
அலைபேசியிலும் தொட‌ர்கிறது.

அவ‌னுக்கு பிடித்த‌ விளையாட்டில்
என‌க்கும் ஈடுபாடு வ‌ருகிற‌து.

நான் வெளியே எங்குசென்றாலும்
அவ‌ன் வ‌ந்திருக்கிருக்கானா? யென
க‌ண்க‌ள் அவனை தேடுகிற‌து.

நான் த‌னியே இருக்கும்போது
அவ‌னோடு இன்று என்ன‌ பேச‌லாமென
நினைக்க‌ தோன்றுகிற‌து.

அவ‌ன் ம‌டி மீது த‌லைவைத்து
சிரித்து பேசிட‌ துடிக்கிறதென் ம‌ன‌ம்.

என்னை அவ‌ன் த‌னியே திரைப்ப‌ட‌த்திற்கு
அழைப்பானா? யென‌ ம‌ன‌ம் ஏங்குகிறது.

திரும‌ண‌மே வேண்டாமென்ற‌வ‌ளுக்கு
திரும‌ண‌த்தின்மீது ஆசை வ‌ருகிறது.

இவைய‌னைத்தும்
அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து...